சகல சௌபாக்கியம் பெற...

ஸமஸ்த ஸம்பத் ஸுகதாம் மஹாஸ்ரியம்
ஸமஸ்த கல்யாணகரீம் மஹாஸ்ரியம்
ஸமஸ்த ஸௌபாக்யகரீம் மஹாஸ்ரியம்
பஜாம்யஹம் ஞானகரீம் மஹாஸ்ரியம்’

- ஸ்ரீலக்ஷ்மி ஹ்ருதயம்

பொருள்: எல்லாவிதமான வளங்களையும், சந்தோஷத்தையும் அருளும் மகாலட்சுமியே நமஸ்காரம். எல்லா சுப விஷயங்களையும் வழங்கி மனமகிழச் செய்யும் மகாலட்சுமியே நமஸ்காரம். உடல் பிணிகள் எல்லாவற்றையும் அகற்றி, ஞானத்தையும் அளிக்கும் மகாலட்சுமியே நமஸ்காரம்.
லட்சுமிக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கு பூஜை செய்தால் வாழ்வில் சகல வளங்களும் பெறலாம்.


அச்சம் அகல...

சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே.

இச்சுலோகத்தை தினமும் சொல்லி வந்தால் மரண பயம் விலகும், மன அமைதி கிட்டும், அச்சம் அகலும்.

கெட்ட கனவு வராதிருக்க...

ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்
வைனதேயம் விருகோதரம்
சயனே, யஸ் ஸ்மரேன் நித்யம்
துஸ்வப்னம் தஸ்ய நஸ்யதி.

இரவில் தூங்குவதற்கு முன் இச்சுலோகத்தை சொன்னால் ஆழ்ந்த தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வராது. மனம் அலைபாயாமல் அமைதியாக இருக்கும்.


அனைத்து துக்கங்களும் விலக...

ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானே ஸ்துதிமஹோ
ந சாஹ்வானம் த்யானம் ததபி ச ந ஜானே ஸ்துதிகதா:
ந ஜானே முத்ராஸ்தே ததபி ச ந ஜானே விலயனம்
பரம் ஜானே மாதஸ் த்வதனுஸரணம் க்லேச ஹரணம்

- ஆதி சங்கரர்

பொருள்: தாயே, எனக்கு மந்திரமோ, யந்திரமோ, ஸ்தோத்திரமோ தெரியாது. எனக்கு பிரார்த்தனையோ, தியானமோ தெரியாது. உன்னைப் புகழ்ந்து பேசவும் தெரியாது. உனது முத்திரிகைகளையும் நானறியேன். ஆனால், அம்மையே உன்னை பின்பற்றி வர மட்டும் எனக்குத் தெரியும். அது ஒன்றே எனது எல்லா துக்கங்ளையும் போக்கி விடும்.


 

Comments