எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபடுவதுடன், தோஷங்கள், தடைகள் காரணமாக அந்தக் காரியம் கெட்டுவிடாமல் இருக்க நவகிரகங்களையும் வழிபடுவது வழக்கம்.
சீதையை மீட்க இலங்கைக்குச் செல்லுமுன்பு உப்பூர் விநாயகரை வழிபட்டார் ஸ்ரீ ராமன்். அத்துடன், ஒன்பது பிடி மணலைக் கொண்டு ராமநாதபுரம் தேவிபட்டினத்தின் கடலோரத்தில் நவகிரகங்களைப் பிரதிஷ்டை செய்தும் வழிபட்டார். அப்படி, அவர் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள், தேவிபட்டினம் கடற்தீரத்தில் கல்தூண்களின் வடிவில் காட்சியளிக்கின்றனர்.
இத்தலத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், பக்தர்களே கடல் நீரில் இறங்கி நவகிரகங்களுக்கும் வழிபாடு செய்யலாம். முன்பு, நவகிரகங்களை வழிபடச் செல்லும் பக்தர்கள் கரையில் இருந்து குறிப்பிட்ட இடம் வரையில் கடல் நீரில் இறங்கிச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது, பக்தர்கள் சென்றுவர வசதியாக பாதை போடப்பட்டுள்ளது.
திருமண பாக்கியம், ஆயுள், கல்வி, செல்வம் என சகல வரங்களையும் பெறுவதற்கு உகந்த தலமாக திகழ்கிறது தேவிப்பட்டினம். கடற்கரை தலம் என்பதால் முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த இடமாகவும் விளங்குகிறது. குருப் பெயர்ச்சியை ஒட்டி இந்தத் தலத்தில் அருளும் நவகிரகங்களில் குரு பகவானை வழிபட்டு வரம் பெற்றுச் செல்லலாம்.
ராமநாதபுரத்தில் இருந்து வடக்கே 15 கி.மீ தொலைவில் தேவிபட்டினத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். அமாவாசை நாட்களில் ஆயிரத்துக்கும் மேலானோர் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
சீதையை மீட்க இலங்கைக்குச் செல்லுமுன்பு உப்பூர் விநாயகரை வழிபட்டார் ஸ்ரீ ராமன்். அத்துடன், ஒன்பது பிடி மணலைக் கொண்டு ராமநாதபுரம் தேவிபட்டினத்தின் கடலோரத்தில் நவகிரகங்களைப் பிரதிஷ்டை செய்தும் வழிபட்டார். அப்படி, அவர் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள், தேவிபட்டினம் கடற்தீரத்தில் கல்தூண்களின் வடிவில் காட்சியளிக்கின்றனர்.
இத்தலத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், பக்தர்களே கடல் நீரில் இறங்கி நவகிரகங்களுக்கும் வழிபாடு செய்யலாம். முன்பு, நவகிரகங்களை வழிபடச் செல்லும் பக்தர்கள் கரையில் இருந்து குறிப்பிட்ட இடம் வரையில் கடல் நீரில் இறங்கிச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது, பக்தர்கள் சென்றுவர வசதியாக பாதை போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து வடக்கே 15 கி.மீ தொலைவில் தேவிபட்டினத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். அமாவாசை நாட்களில் ஆயிரத்துக்கும் மேலானோர் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
Comments
Post a Comment