பலன் தரும் ஸ்லோகங்கள்

உடல் நலம் மேலோங்க!
சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரித மந்தாரசாகினே
சிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்
பக்தாபீஷ்ட ப்ரதாயாஸ்து பவரோக விநாசினே
ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம்

- சுப்ரமண்ய மங்களாஷ்டகம்
பொருள்: பார்வதி பரமேஸ்வரனின் புத்திரரே, அண்டியவர்களுக்கு கற்பக விருட்சம் போன்று கேட்ட வரங்களைத் தருபவரே, சிறந்ததும், அழகானதுமான மயிலை வாகனமாகக் கொண்டவரே, சுப்ரமண்ய பெருமானே நமஸ்காரம். பக்தர்கள் விரும்பியதை அளிப்பவரே, ஜனன, மரண ரோகத்தைப் போக்குபவரே, குபேரனால் வணங்கப் பட்டவரே, அரக்கரை வதைக்கும் யுத்தத்தில் பிரியமும், தைரியமும் கொண்டவரே, முருகப் பெருமானே நமஸ்காரம்.
இந்தத் துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால், செல்வ வளமும், உடல் நலமும் மேலோங்கும். வைகாசி விசாகத்தில் இதைச் சொல்வது மிக விசேஷம்.
கண் திருஷ்டி விலக...
தடைகளைப் போக்கி வெற்றி, நன்மைகளைத் தந்தருள்பவர் ஸ்ரீ அகோர மூர்த்தி. மயிலாடுதுறை அருகே உள்ள திருவெண் காட்டில் இப்பெருமானை தரிசிக்கலாம்.
கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக இவரை வழிபடுவது சிறப்பானது. தினமும் அதிகாலையில் 21 முறை வீதம் இத்துதியைச் சொல்லி வந்தால், நல்ல பலன் நிச்சயம்.
ஸகல கன ஸமாபம்
பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
புஜகதரம கோரம்
ரக்த வஸ்த்ராங்க தாரம்
பரசு டமரு கட்கம்
கேடகம் பாணச்சாயை
திரிசிகநர கபாலை
விப்ரதாம் பாவயாமி


மழை தரும் மந்திரம்
ஒருசமயம் காஞ்சி மகாபெரியவர், ஆடிமாதம் திருவையாற்றுக்கு அருகில் உள்ள காருகுடி என்னும் கிராமத்துக்கு வந்தார். அப்போது வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்கள், வறட்சியைப் போக்க வழி கேட்டு, மகாபெரியவரை தரிசிக்கச் சென்றார்கள். அப்போது மகா பெரியவர், இரண்டு ஸ்லோகங்கள் அருளினார்.மேலும், பெருமாளுக்கு குளிர குளிர திருமஞ்சனம் செய்யச் சொன்னதோடு, ஒவ்வொரு வீட்டிலும் அரைப்படி அரிசி வாங்கி நிறைய தளிகைப் பண்ணி பெருமாளுக்கு சமர்ப்பித்து, ‘ததீயாராதனை’ செய்து அனைவருக்கும் அன்னதானமும் செய்யச் சொன்னார்.
ஸ்லோகம் 1:
ரிச்யச்ருங்காய முநயே
விபண்டக ஸுதாயச
நம: சாந்தாதி பதயே
ஸத்ய:ஸத் வ்ருஷ்டி ஹேதவே.

ஸ்லோகம் 2:
விபண்டகஸுத: ஸ்ரீமாந்
சாந்தாபதி ரகல்மஷ:
ரிச்ய ச்ருங்க இதிக்யாத:
மஹாவர்ஷம் ப்ரயச்சது.

இவை தவிர, திருப்பாவையில் உள்ள ‘ஆழிமழைக் கண்ணா’ங்கற பாட்டையும் எல்லோரும் தினமும் சொல்லுங்கோ. மழை பெய்யும்" என்றும் அருளினார். அப்படியே செய்ய, மழை பெய்தது என்பது குறிப்பிடவேண்டியதில்லைதானே!


விருப்பங்கள் நிறைவேற...
ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனே
ஸீமாஸுன்ய வித்வ வர்ஷஜனனீ யா காபி காதம்பினீ
மாராராதி மனோவி மோஹன விதௌ காசித்தம கந்தலீ
காமாக்ஷ்யா கருணாகடாக்ஷலஹரீ காமாயமே கல்பதாம்!

- மூக பஞ்சசதி
பொருள்: காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய தங்களின் கண்களின் நிகரற்ற கருப்பு நிறமான சந்திரனைப் போலவும், மூவுலகிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவற்ற கவித்துவ சக்தியைப் பொழிவிக்கும் மேகக் கூட்டங்கள் போலவும், மன்மதனை எரித்த பரமேஸ்வரனின் மனதை மோகிக்கச் செய்வதில் நிகரற்ற இருள் குவியல் போல உள்ளது. அந்த உன் கருணை கடாக்ஷ அலைகள் எனது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய உன் திருவருள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது? தங்களை மறுபடி மறுபடி வணங்குகிறேன்.

சகல தோஷ நிவாரணம்!
ஓம் ஸ்ரீ பரமேஸ்வரியே நம
ஓம் பிரும்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம
ஓம் சிவாய நம

இந்த மந்திரத்தை 108 முறை சொல்லிக்கொண்டே ஒரு செம்பில் தண்ணீர் வைத்து அதில் வேப்பிலைக் கொத்தை மூழ்கி சுழற்றி அந்த நீரை குழந்தை முகத்தில் தெளிக்க, சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

மிருத்யுஞ்ஜய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்

பொருள்: நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்ப வரும், முக்கண்ணனு மாகிய சிவபெருமானே, பழுத்த வெள்ளரி பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக.

கிரக தோஷம் நீங்க...
ஸம்ரக்த சூர்ணம் ஸஸுவர்ணதோயம்
ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத

- சூர்ய ஸ்லோகம்

பொருள்: சிந்தூரம் போன்ற சிவந்த நிறமுள்ளவரே, அழகிய மண்டலத்தைக் கொண்டவரே, ஸ்வர்ணம், ரத்னமிழைத்த ஆபரணத்தைத் தரித்தவரே, சூரிய பகவானே, நமஸ்காரம். தாமரையின் ஒளி போன்ற கண்களை உடையவரே, அழகிய தாமரையைக் கையிலேந்தியவரே, பிரம்மா, இந்திரன், நாராயணன், சங்கரன் ஆகியோரின் வடிவமாகத் திகழ்பவரே, நமஸ்காரம்.
இச்சுலோகத்தைச் சொல்ல, கிரக தோஷங்கள் சூரியனைக் கண்ட பனி போல நீங்கும்.

Comments