ஸப்த குரு தரிசனம் !

திருச்சி சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில் உள்ளது பிச்சாண்டார் கோவில். ஸ்ரீ பிச்சாண்டார் (சிவன்), ஸ்ரீ புருஷோத்தம பெருமாள், பிரம்மதேவன் ஆகிய மூவரும் அருள் வழங்கும் ஒப்பற்ற திருத்தலம் இது.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட ஆலயம்; 108 திருப்பதிகளில் ஸ்ரீ ரங்கத்துக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படும் திருக்கோ யில்; 63 சிவ மூர்த்தங்களில் ஒன்றான பிச்சாடனர் திருக்கோலத்தில் சிவனார் காட்சி தரும் தலம்; விமானத்துடன் கூடிய தனிச் சந்நிதியில் குருபகவான் ஸ்தானத்தில் பிரம்மா அருளும் அற்புதம்... இப்படி, இந்தக் கோயிலுக்குச் சிறப்புகள் நிறைய உண்டு.
முக்கியமாக... பிரம்ம குரு, விஷ்ணு குரு, சிவ குரு, சக்தி குரு, சுப்ரமண்ய குரு ஆகியோருடன் தேவகுருவாகிய பிரகஸ்பதி, அசுர குருவான சுக்கிராச்சார்யர் என்று ஸப்த குருக்களும் ஒருசேர தரிசனம் தந்து, பக்தர்களுக்கு குருயோகத்தை வாரி வாரி வழங்கும் சிறப்பு பெற்ற திருக்கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை ஒருசேர தரிசித்து, அர்ச்சித்து வழி பட்டால், தோஷங்களால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; உத்தியோகம், வியாபார விருத்தியுடன் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்; சர்வ வல்லமையும் ஸித்திக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குரு பார்க்கக் கோடி நன்மை என்பார்கள். இதோ இங்கே, ஸப்த குருக்களின் தண்ணருள் பொங்கும் தரிசனம் உங்களுக்காக!

Comments