மனச்சோர்வு நீங்க வழிபட வேண்டிய கோயில்

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் சென்னைக்கு மிக அருகில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் உள்ள கோயில் இது. சுமார் 2000 வருடம் பழமையானது.
இங்குள்ள சக்தி வாய்ந்த துர்க்கை அம்மனுக்கு 42 வாரம் தொடர்ந்து நெய்தீபம் ஏற்றினால் மனநோய் அகலும் என்பது நம்பிக்கை. மேலும் ஈஸ்வரனுக்கும், அம்பிகைக்கும் வஸ்திரம் அணிவிக்க, தீமைகள் அகன்று நன்மை பிறக்கும் என்பது நம்பிக்கை.
தஞ்சாவூர் அருகேயுள்ளது விளாங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மனைவியருடன் மந்தா, ஜேஷ்டா என மணக் கோலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும். இத்தலத்தில் நவக்கிரக சன்னிதி கிடையாது. அதற்குப் பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித் தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிசநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவதலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி அருள்மிகு கற்கடேஸ்வரர் சிவஸ்தலம் உள்ளது. மனச்சோர்வு நீங்க இங்கு ஒன்பது வாரம் நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோயில் சென்று வரலாம்.

Comments