பெரும்பாலான கோயில்களில் நின்ற நிலையிலேயே அர்த்தநாரீஸ்வரரை தரிசித்திருபோம். ஆனால், திருக்கண்டியூர் ஸ்ரீபிரம்ம சிரக்கண்டேஸ்வரர் கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் அமர்ந்த கோலத்தில் (உத்குடி ஆசனம்) அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கலாம்.
- பொன்கணேஷ், தேனி
நவகோள்களும் தசாவதாரமும்
வைணவ தலங்களில் நவக்கிரக சன்னிதிகள் காணப்படுவதில்லை என்கிற காரணத்தாலேயே அவற்றுக்கும் நவக்கிரகங்களுக்கும் தொடர்பில்லை எனக் கருதக் கூடாது. சில இடங்களில் வைணவ கோயில்களிலும் நவக்கிரகங்கள் உள்ளன. மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளன. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமான தசாவதார ஸ்தோத்திரம் ஒன்றும் உள்ளது. அதன்படி, 1. ஸ்ரீராமாவதாரம் - சூரியன், 2. ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன், 3. ஸ்ரீ நரசிம்மாவதாரம் - செவ்வாய், 4. ஸ்ரீ கல்கி அவதாரம் - புதன், 5. ஸ்ரீ வாமனாவதாரம் - குரு, 6. ஸ்ரீ பரசுராமவதாரம் - சுக்ரன், 7.ஸ்ரீ கூர்மாவதாரம் - சனி, 8. ஸ்ரீ மச்சாவதாரம் - கேது, 9. ஸ்ரீ பலராமாவதாரம் - குளிகன், 10. ஸ்ரீவராகவதாரம் - ராகு எனவும் கூறப்பட்டுள்ளன.
ஸ்தோத்திரம்:
‘ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரஸிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸ்ய பார்கவோ பார்கவஸ்யச:
கேதுர்ம் நஸதாரய்ய யோக சாந்யே யி சேகர’
நவக்கிரக ஸ்தலங்கள்
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ கே்ஷத்திரங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவை என்று கருதி வழிபாடு நடைபெற்று வருகிறது.
1. சூரியன் - ஸ்ரீவைகுண்டம், 2.சந்திரன் - வரகுணமங்கை(நத்தம்), 3. செவ்வாய் - திருக்கோளூர், 4. புதன் - திருப்புளியங்குடி, 5.குரு - ஆழ்வார்திருநகரி, 6.சுக்ரன் - தென் திருப்பேரை, 7. சனி - பெருங்குளம், 8. ராகு - இரட்டை திருப்பதி, 9. கேது - இரட்டை திருப்பதி ஆகியவை நவக்கிரகத் தலங்களாகும்.
சோழ நாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டிய நாட்டு நவதிருப்பதி கே்ஷத்திரங்கள், நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. இங்கு பெருமாளே நவக்கிரகங்களாக செயல்படுவதால், நவக்கிரகங்களுக்கு என தனியாக சன்னிதிகள் அமைக்கப்படுவதில்லை.
ஆதாரம்: ஆழ்வார் திருநகரி திருக்கோயில் ஸ்தல வரலாறு
Comments
Post a Comment