மனைவி மற்றும் மகனின் மீது, முழுமையான அன்பும் கனிவும் கொண்டிருந்த சம்சாரியான அவருக்கு, புகழ்பெற்ற மடத்தின் தலைவரிடமிருந்து, துறவறம் பூணச் சொல்லி அழைப்பு; அறிவுறுத்தல்! 'துறவறம் சென்றால், மனைவியும் குழந்தையும் உணவுக்கு வழியின்றி தவிப்பார்களே’ என்று நினைத்து, அந்த சம்சாரி மறுத்தார். ஆனாலும் அழைப்பு தொடர்ந்தபடியே இருந்தது.
செய்வதறியாமல் தவித்து மருகினார்; தூக்கம் வராமல் புரண்டு படுத்த நள்ளிரவு வேளையில், அவரது அறை முழுவதும் கண்களை கூசச் செய்கிற பேரொளி; கலைவாணி அவருக்குக் காட்சி தந்தாள்.
''மகனே, நீ சத்தியலோகத்து சங்குகர்ணன். கிருத யுகத்தில் பிரகலாதனாக அவதரித்து, பக்தியின் மேன்மையை உலகுக்கு உணர்த்தினாய். துவாபர யுகத்தில், பாஹ்லீக மன்னனாகப் பிறந்து, திருமாலின் தீவிர பக்தன் எனப் பெயரெடுத்தாய். கலியுகத்தில், வியாசராஜனாக அவதரித்து, கிருஷ்ணதேவராயரின் அரசவையை அலங்கரித்தாய். அரசு நெறிகளையும் கல்வி முறைகளையும் சீர்படுத்தினாய். உனது இந்தப் பிறவி கல்வி, பக்தி இரண்டின் மேன்மையையும் உலகுக்கு எடுத்துரைத்து, நல்வழிப்படுத்தவே! உனது கடமையை நிறைவேற்ற, துறவறம் மேற்கொள்வாயாக!'' என அருளினாள்.
தேவியின் கட்டளையால் அவரின் மனம் தெளிந்தது; பற்று- பாசம் அறுந்தன; துறவு பூண்டார். அகில மக்களுக்கு இன்றைக்கும் நல்வழி காட்டியருளும் அந்த மகான், ஸ்ரீராகவேந்திரர்!
தமிழ்நாட்டின் புவனகிரியில், திம்மண்ணா- கோபிகாம்பாள் தம்பதிக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தார் ஸ்ரீராகவேந்திரர். பெற்றோர் சூட்டிய பெயர் வேங்கடநாதன். உரிய வயதில் குருகுலத்தில் சேர்ந்து அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தார். அதே நேரம், குடும்பத்தில் வறுமையும் வளர்ந்திருந்தது. இதனால், குடும்பத்துடன் கும்பகோணத்துக்கு இடம் பெயர்ந்தார் திம்மண்ணா. அங்கே, வித்யாமடத்தில் அடைக்கலமானார். அந்த மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசுதீந்திரர், வேங்கடநாதனைப் பார்த்ததும் பூரித்துப் போனார். 'இவனல்லா, இந்த மடத்தின் அடுத்த தலைவன்’ எனப் புளகாங்கிதம் அடைந்தார்.
மூலராமருக்கு ஸ்ரீசுதீந்திரர் அனுதினமும் பூஜைகள் செய்வார். இதனைச் சிறுவன் வேங்கடநாதன் ஆழ்ந்து கவனித்து வந்தான். ஒருகட்டத்தில், மூலராமருக்கு பூஜை செய்ய விரும்பினான். அதையடுத்து தினமும் மூலராமருக்கு பூஜைகள் செய்யச் செய்ய... அதில் அப்படியே மூழ்கிப்போன மகனைக் கண்டு, பயந்து போனது குடும்பம். 'உடனே திருமணம் செய்து வைத்தால் தேவலை’ என முடிவுசெய்தது. சரஸ்வதி எனும் குணவதியை, வேங்கடநாதனுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
கணவரிடம் மாறாத மதிப்பும், ஆழ்ந்த காதலும் கொண்டு வாழ்ந்தாள் சரஸ்வதி. அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க, அவனுக்கு லக்ஷ்மிநாராயணன் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். ஆனால், நாளுக்கு நாள் வறுமை தலைதூக் கியது. ஒருநாள், வீட்டில் இருந்த ஓட்டை உடைசல் பாத்திரங்களும் திருடுபோயின. திருமணத்துக்குப் பிறகு, மடத்துக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த வேங்கடநாதன், வறுமையின் காரணமாக ஸ்ரீமடத்தி லேயே குடும்பத்துடன் தங்கினார். கன்றைக் கண்டுவிட்ட தாய்ப்பசு போல் சிலிர்த்தார் ஸ்ரீசுதீந்திரர். 'எனக்குப் பிறகு நீதான் மடத்தைக் கவனிக்கவேண்டும்’ என்கிற தனது விருப்பத்தை வேங்கடநாதனிடம் தெரிவித்தார். ஆனால் வேங்கடநாதனோ தன் மனைவி- மகன் மீது கொண்ட அன்பால், பொறுப்பை ஏற்க மறுத்தார். அதையடுத்து, யாதவேந்திரர் எனும் சீடரை தனது இளவலாகத் தேர்வு செய்தார் ஸ்ரீசுதீந்திரர். நாடெங்கும் யாத்திரைகள் மேற்கொண்டு, மக்களுக்கு போதனை களை அளித்தார் ஸ்ரீயாதவேந்திரர்.
காலங்கள் ஓடின. ஒருநாள், ஸ்ரீசுதிந்திரர் உடல்நலமின்றிப் போனார். ஸ்ரீயாதவேந்திரருக்கும் தகவல் அனுப்ப இயலவில்லை. 'மூலராமருக்கு தினமும் செய்யும் பூஜை தடைப்பட்டுவிடுமோ’ எனக் கலங்கினார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய மூலராமர், 'உனக்குப் பிறகு வேங்கடநாதனே பூஜைகளைச் செய்ய வல்லவர்’ என அருளிச் சென்றார். விடிந்ததும், வேங்கடநாதனை அழைத்த ஸ்ரீசுதீந்திரர், கனவில் மூலராமர் வந்து அருளியதைத் தெரிவித்தார். அப்போதும் சம்மதிக்கவில்லை வேங்கடநாதன். இதில் மனச் சஞ்சலத்துடன் தூக்கமின்றி விழித்திருந்த வேளையில்தான், கலைவாணி காட்சி தந்து அவரது பிறவிக்கடமையை எடுத்துரைத்தாள்.
மறுநாள்- ஸ்ரீசுதீந்திரரின் திருப்பாதங் களில் விழுந்து நமஸ்கரித்தார் வேங்கட நாதன். 'மகனுக்கு உபநயனம் செய்துவிட்டு, சந்நியாசம் மேற்கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார். பிறகு, நல்ல நாள் பார்த்து, மகன் லக்ஷ்மி நாராயணனுக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. பின்பு, தன் சகோதரருடன் மனைவி மற்றும் மகனை அனுப்பி வைத்த வேங்கடநாதனுக்கு, அனைத்துச் சடங்குகளுடன் சந்நியாசம் அருளப்பட்டது. அப்போது அவருக்கு, ஸ்ரீராகவேந்திர தீர்த்தர் எனத் திருநாமம் சூட்டினார் ஸ்ரீசுதீந்திரர். ஸ்ரீவித்யாமடத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்றார் ஸ்ரீராகவேந்திரர்.
ஆழ்ந்த ஈடுபாட்டுடன் மூலராமரைப் பூஜித்து வந்த ஸ்ரீராகவேந்திரர், பூஜை முடிந்ததும், பக்தர்களுக்கு அட்சதையும் தீர்த்தமும் தந்து ஆசீர்வதித்தார். அவரைத் தரிசிக்க வரும் எண்ணற்ற பக்தர்களுக்கு, அனுதினமும் அன்ன தானம் வழங்கப்பட்டது. கடினமான ஸ்லோகங்கள் அனைவருக்கும் புரியும் விதம், எளிய விரிவுரைகள் எழுதுவ தில் ஈடுபட்டார் ஸ்ரீராகவேந்திரர். தன்னைத் தரிசிக்க வந்திருக்கும் பண்டிதர்களுடன், ஸ்லோகங்களை விளக்கிப் பேசுவதை விரும்பினார். பக்தியைப் போதிக்கவும், கோயிலின் செயல்பாடுகளைச் சீர்படுத்தவும் தேசமெங்கும் யாத்திரை செய்தார். வழியெங்கும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்!
அத்வைனி எனும் இடத்தில் ஆடு- மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த வெங்கண்ணா என்பவனுக்கு அட்சதைப் பிரசாதம் வழங்கினார். ''துன்பம் வரும் வேளையில் என்னை நினைத்துக்கொள்; வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் காண்பாய்'' என அருளினார். வெங்கண் ணாவும், அந்தப் பிரசாதத்தைப் போற்றி மதித்து, ஸ்ரீராகவேந்திர நாமத்தை ஜபித்து வந்தான்.
ஒருமுறை, சுல்தானின் பிரதிநிதியான அஸதுல்லாகான், வெங்கண்ணாவிடம், கடிதம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் சொல்ல... எழுதப் படிக்கவே தெரியாத வெங்கண்ணா, குருவருளால் படித்துக் காட்டினான். அதையடுத்து, அஸதுல்லா கானின் அன்புக்குப் பாத்திரமான வெங் கண்ணா. ஒருகட்டத்தில் திவானாகவும் நியமிக்கப்பட்டான்.
இதுபோன்ற தனது அருளாடல்களால் எண்ணற்ற பக்தர்களுக்கு நல்வழிகாட்டிய ஸ்ரீராகவேந்திரர், பிருந்தாவனப் பிரவேசம் செய்யத் திருவுளம் கொண்டார்.
துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருந்த மாஞ்சாலா கிராமத்தை ஸ்ரீராகவேந்திரர் தேர்வு செய்தார். 'இது மிகச் சக்தி வாய்ந்த இடம். இங்குதான் பிருந்தாவனம் அமைக்கப்படவேண்டும். இனி, இந்த மாஞ்சாலா கிராமம், மந்திராலயம் என அழைக்கப்படட்டும்’ என அருளினார்.
அதன்படி, 1791-ஆம் வருடம், ஆவணி மாத கிருஷ்ண பட்சம்- த்விதியை திதியில், வியாழக்கிழமை அன்று, ஸ்ரீராகவேந்திரர் அனைவருக்கும் தீர்த்தமும் அட்சதையும் வழங்கினார். 'சத்தியம், தர்மம் ஆகிய இரண்டும் மகத்தான சக்திகள். அவற்றையே வாழ்க்கை எனக் கொண்டால், தெய்வத்தின் ஆசியும் எனது ஆசியும் எப்போதும் உண்டு. அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன்’ என அருளினார். பிறகு, பிருந்தாவனத்தில்... கிழக்குப் பார்த்த நிலையில் பத்மாசனத்தில் அமர்ந்தார்; துளசி மாலையைக் கையில் வைத்தபடி, தியானத்தில் ஆழ்ந்தார்; ஜீவசமாதியானார். ஸ்ரீராகவேந்திரரின்... இந்தப் பிறவியில் எடுத்த திருவுடலைத் தரிசிக்கும் தருணம், அத்துடன் நிறைவுற்றது.
ஆந்திராவில், துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மந்திராலயத்தில் தினமும் லட்சக் கணக்கானோர் வருகின்றனர். தொலையாத துன்பங்களையும் கரையாத கவலைகளையும் ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் இறக்கிவைத்து, நிம்மதியுடன் ஸ்வாமியைத் தரிசித்துச் செல்கின்றனர்.
உண்மையான அன்புடனும் பாசாங்கு இல்லாத பக்தியுடனும் அங்கு வருவோருக்கு அனைத்து நலன்களும் கிடைத்திட, அருள்புரிகிறார் ஸ்ரீராகவேந்திரர்!

Comments
Post a Comment