பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள மாணவர்கள் மிகவும் பதற்றமாகவும், ஒருவித அச்சத்தோடும் இருக்கக்கூடும். இத்தகைய உணர்வே தேர்வை எதிர்கொள்வதில் தடையாக மாறிவிடக்கூடும். அதைத் தவிர்க்க கீழ்க்காணும் துதிகளை மனமொன்றி சொல்லி வந்தால், மனம் நிலைப்படும்; பதற்றம் தணியும்; கவனம் மேம்படும்; தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றியும் கிட்டும்.
விநாயகர் வழிபாடு
தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற விநாயகப்பெருமானை வழிபட்டுக் கூறவேண்டிய ஸ்லோகம் :
வக்ர துண்ட மகாகாய சூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷுஸர்வதா
மாதங்கி தியானம்
த்யாயேயம் ரத்னபீடே சுககலபடிதம் ச்ருண்வதீம் ச்யாமளாங்கீம்
ந்யஸ்தை காங்க்ரீம் ஸரோஜே சசிசகல தராம் வல்லகீம் வாதயந்தீம்
கல்ஹாரா பத்தமாலாம் நியமித விகஸத் சூளிகாம் ரக்தவஸ்த்ராம்
மாதங்கீம் சங்கபத்ராம் மதுமத விவசாம் சித்ரகோத்பாஸி பாலாம்
பொருள் : ரத்ன பீடத்தில் அமர்ந்து ஒரு பாதத்தை தாமரை மலரில் வைத்திருப்பவளும், இரண்டு கிளிகளைக் கையில் கொண்டு அதன் அழகிய பேச்சை ரசிப்பவளும், பச்சை நிறத்தினவளும், சந்திரகலை தரித்தவளும், வீணையைக் கையில் ஏந்தியுள்ளவளும், செங்கழுநீர் பூமாலை அணிந்தவளும், பின்னிய அழகிய சடையினை உடையவளும், சிவப்பு ஆடை அணிந்தவளும், சங்குத்தோடு அணிந்திருப்பவளும், (காதம்பரீ), திலகம் விளங்கும் நெற்றியை உடைய வளுமான ஸ்ரீராஜமாதங்கியைத் தியானிக்கிறேன்.
புத பகவான் வழிபாடு
கல்விகாரகன் என்று சொல்லப்படும் புத பகவானை வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகங்களை தினமும் காலையில் 21 முறை படித்து வர தேர்வில் வெற்றி உண்டாகும்.
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணா ப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் பிரணமாம்யஹம்
புத பகவான் காயத்ரீ:
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி |
தந்நோ புத: ப்ரசோதயாத் ||
தட்சிணாமூர்த்தி வழிபாடு
ஆதிமூர்த்தி என்றும், பரமஞானமூர்த்தி என்றும் சொல்லப்படும் தட்சிணாமூர்த்தியை வழிபட சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
மூலேவடஸ்ய முனிபுங்கவ ஸேவ்யமானம்
முத்ராவிசேஷ முகுளீக்ருத பாணிபத்மம்
மந்தஸ்மிதம் மதுரவேஷ முதாரமாத்யம்
தேஜஸ்ததஸ்து ஹ்ருதிமே தருணேந்து சூடம்
வியாழக்கிழமை தினங்களில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு.
சரஸ்வதி வழிபாடு
கல்விக் கடவுள் என்று நாம் பெரும்பாலும் வணங்குவது கலைமகளான சரஸ்வதியைத்தான். சரஸ்வதிக்கான துதிகள் பல இருந்தாலும் அவளுடைய பன்னிரண்டு திருநாமங்கள் மிகச் சிறப்புடையவை. அதைக் கூறுவது தான் இந்தத் துதி. இதை தினமும் மூன்று முறை சொல்லிவழிபட்டு வருவதால், புரிந்து கொள்ளும் திறன் கூடும் செயலாற்றல் கூடும்.
ஸரஸ்வதீ த்வியம் த்ருஷ்டா வீணா புஸ்தக தாரிணி
ஹம்ஸவாஹ ஸமாயுக்தா வித்யா தானகரீ மம
ப்ரதமம் பாரதீ நாம த்விதீயஞ் ச ஸரஸ்வதீ
த்ருதீயம் சாரதா தேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ
பஞ்சமம் ஜகதீக்யாதா ஷஷ்ட்டம் வாணீச்வரீ ததா
கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா அஷ்டமம் பரம்ஹசாரிணீ
நவமம் புத்திதாத்ரீ ச தசமம் வரதாயினீ
ஏகாதசம் க்ஷுத்ரகண்டா த்வாதசம் புவனேச்வரீ
ப்ராஹ்ம்யா: த்வாதச ;நாமானி த்ரிஸந்த்யம் ய: படேன் நர:
ஸர்வ ஸித்திகரீ தஸ்ய ப்ரஸன்னா பரமேச்வரீ
ஸாமே வஸது ஜிக்வாக்ரே பிரஹ்ம ரூபா சரஸ்வதீ
அனுமன் துதி
புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதாத் |
அஜாட்யம் வாக்படும் த்வம் ச
ஹனூமத் ஸ்மரணாத்பவேத் ||
தினமும் காலை 5 முறை வீதம் இந்தத் துதியைச் சொல்லிவருவது நலம். சனிக்கிழமைகளில் ஆலயம் சொன்று அனுமனை 12 முறை வலம் வந்து வழிபடுவதும் சிறப்பான பலனளிக்கும்.
Comments
Post a Comment