ஒருமுறை திருப்புவனம் சென்று பூவனநாதரை வழிபட்டார். பிறகு, கானப்பேர் காளீசரைத் தரிசிப்பதற்காகப் பயணப்பட்டார். வழியில், மாலை நேர பூஜைக்காக ஓரிடத்தில் அமர்ந்து, சிவபூஜையில் ஈடுபட்டார். முன்னதாக அங்கே ஊற்று ஒன்றைத் தோற்றுவித்து, நீரை உருவாக்கினார். அந்த நீரைத் தனது கமண்டலத்தில் நிரப்பிக் கொண்டு வழிபட்டார்.
செண்பகப் பூ விழா!
ஸ்ரீராமரை பூஷிக்கும் ஆதவன்!
அப்போது, கமண்டலத்தில் இருந்த நீர், அருகில் இருந்த செடி மீது பட்டு பூநீராகப் பெருகியதாம்! இது, சித்த மருத்துவத்தில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுமாம்!
சித்தர்கள் மற்றும் சித்த வைத்தியர்கள் வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி நாளில், சிவகங்கை அருகில் உள்ள கோவனூர் முருகப்பெருமான் தலத்துக்கு வருகின்றனர். முதலில் முருகப் பெருமானை தரிசித்து வணங்கிவிட்டு, பூநீரையும் சேகரித்துச் செல்வார்களாம்!
செண்பகப் பூ விழா!
திருவாரூர் அருகேயுள்ளது திருச்செங் காட்டங்குடி. இங்கு பிரமாண்டமான ஸ்ரீஉத்தரா பதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாத திருவோண நட்சத்திர நாளில், இங்கே செண்பகப் பூவின் நறுமணம் கமழ, திருக்காட்சி தந்தாராம் ஈசன். எனவே இந்த நாளில், செண்பகப்பூ விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவனாருக்குப் பன்னீர் அபிஷேகம் மற்றும் செண்பகப்பூ மாலை சார்த்தி வழி பட்டால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்!
ஸ்ரீராமரை பூஷிக்கும் ஆதவன்!
சேலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள அயோத்தியாபட்டணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீராமர் கோயில். பிரசித்திபெற்ற தலமான இங்கு சித்ரா பௌர்ணமி நாளில் மட்டும் ஸ்ரீஆஞ்சநேயர் சந்நிதியின் கிழக்குப் பகுதியின் துவாரம் வழியே சூரிய ஒளியானது தனது கிரணங்களால் ஸ்ரீராமரின் திருமேனியை வருடி வழிபடுவதைத் தரிசிக்கலாம்.
Comments
Post a Comment