பஞ்சமுக விநாயகர்

பிரிந்தவர் ஒன்று சேர...
இராஜபாளையத்துக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது பெத்தவநல்லூர் மாயூரநாதர் திருக்கோயில். கருத்தரித்த தாமார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை வேண்டிக் கொண்டால், ஈசன் தாமே முன்வந்து உதவிடுவார் என்பது நம்பிக்கை. பிரிந்து வாழும் தம்பதியினர் இக்கோயிலுக்கு வந்து 48 நாட்கள் பள்ளியறை பூஜையின்போது ஏலக்கா போட்ட இனிப்பான பால் நைவேத்தியம் செய்து வழிபட்டால் ஒன்று சேர்ந்து வாழ்வர் என்பது ஐதீகம்.
நரிக்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள புளிச்சக்குளத்தில் அமைந்துள்ளது பஞ்சமுக விநாயகர் கோயில். பொதுவாக விநாயகர் சிலையை, அமர்ந்த நிலையில், ஒரு முகத்தோடுதான் பார்த்திருப்போம். ஆனால், இங்கு விநாயகர் ஐந்து தலை, பத்து கரங்களுடன் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை திருமணத் தடை உள்ளவர்கள் வணங்கிட, திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
-
தீப இலை திரி
வத்திராயிருப்பு சதுரகிரி மலையில் உள்ளது சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோயில். இம்மலையின் அடிவாரத்தில் ‘ஜோதி விருட்சம்’ என்ற மரம் உள்ளது. இந்த மரத்தின் இலையை ஒரு கிண்ணத்தில் வைத்து எண்ணெய் ஊற்றி திரிபோல எரிய விடுகிறார்கள். ஓர் இலை சுமார் 15 மணி நேரம் எரியும் தன்மை வாந்தது என்றும் சொல்வர்.

சந்தான பாக்கியம் பெற...
ராஜபாளையத்துக்கருகில் உள்ளது தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில். குழந்தைப் பேறு இல்லாதோர் தம்பதி சமேதராக இக்கோயில் வளாகத்திலுள்ள நாகலிங்க மரத்திலுள்ள மூன்று பூக்களைப் பறித்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்தப் பூக்களை பிரசாதமாக பெற்றுச் சென்று பசும்பால் அல்லது மோரில் கலந்து மூன்று நாட்கள் இரவில் பருகிவர குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 

Comments