"ஓம் ஸ்கந்தாய நமஹ, ஓம் குமாராய நமஹ, ஓம் கார்த்திகேயாய நமஹ, ஓம் காங்கயோய நமஹ...'
"சாமீ எனக்கு ஒரு சந்தேகம்! இப்போ நீங்க சொன்னது முருகனுக்கு உரிய போற்றி தானே?'
ஆமாம்! அதுல என்ன சந்தேகம்?
நீங்க சொன்ன திருநாமங்கள்ல, காங்கேயாய நமஹனும் வந்துச்சே... கங்கையின் மைந்தன்கற அர்த்தம் வர்ற அந்த பேர், பீஷ்மருக்கு உரியதுன்னு மகாபாரதத்துல படிச்சிருக்கேன். முருகனுக்கு எப்படி அந்த பெயர் பொருந்தும்னு தான்..
ரொம்ப நல்ல கேள்வி கேட்டே... ஆறுமுகனுக்கு அன்னை, உமாதேவி. அதனால உமைபாலன் சொல்றது சரி. கங்கை எப்படி அம்மா? இந்தக் கேள்விக்கு விடை, ராமாயணத்துல இருக்கு. கந்தனோட வரலாற்றை சொல்லும்போதே இந்தப் பெயரை வால்மீகி பயன்படுத்தியிரக்கிறார். சிவபெருமானோட தேவியர்ல கங்கையும் ஒருத்தி அப்படிங்கிறதால, கங்கையும் முருகனுக்கு ஒரு தாய்தான். இந்த விளக்கத்தை ஸ்கந்த புராணத்துலயும் பார்க்கலாம். அருணகிரிநாதரோட திருப்புகழ்லயும் காணலாம். இதுமட்டுமல்லாம, கங்கை ஆறுமுகனை சுமந்து தாலாட்டினதாக ஒரு தலபுராண சம்பவம்கூட இருக்கு!
அட.. அப்படியா? அது என்ன புராணக் கதை சாமி?
ஒரு சமயம் கங்காதேவிக்கு ஒரு ஏக்கம் வந்துச்சாம். தான் என்னதான் புண்ணிய நதியா இருந்தாலும், அரனோட அனல்விழியில் தோன்றின ஆறுமுகனைத் தாங்கிய பாக்யம், சரவணப் பொய்கைக்குதானே கிடைச்சது! அதோட சங்கரி மாதிரி ஷண்முகனைத் தூக்கி அரவணைக்கிற வாய்ப்பும் தனக்குக் கிடைக்காமலே போனதால் ரொம்பவே மனசங்கடப்பட்டா, கங்கை. ஒருநாள் அதை ஈஸ்வரன்கிட்டே சொன்னா.
பூவுலகுல இருக்கிற புனித தலத்துல தன்னை வழிபடும்படியும் உரிய காலத்துல அந்த பாக்யம் கிட்டும்னும் சொன்னார் சொக்கநாதர். சிவவழிபாடு செய்ய ஏற்ற இடத்தைத் தேடி வந்த கங்கை, ஒர தலத்துல தேவர்கள், முனிவர்கள், மானுடர்கள்னு எல்லாரும் சேர்ந்து இறைவனை வணங்கிட்டு இருக்கறதைப் பார்த்தா. எல்லாரும் அங்கே ஒன்றி இருக்கக் காரணம் என்னன்னு அங்கே இருந்த ஒரு தவசிகிட்டே கேட்டா.
மூன்றாம் பிறை நாள்ல அந்தத் தலம் வந்து சிவவழிபாடு செய்யும் ஜீவங்களுக்கும் சிவபெருமான் தன் சிரசுல இருக்கற மூன்றாம் பிறைச் சந்திரனோட அமுக கிரணத்தால சகல நலமும் அளிப்பார்னும், அதற்காகத் தான் அனைவரும் அங்கே வந்திருக்கிறார்கள் எனவும் சொன்னார் அந்த முனிவர்.
முனிவர் சொன்னதைக் கேட்ட கங்காதேவிக்கு அதுதான் தான் தவம் செய்ய ஏற்ற தலம்னு தொணிச்சு. அதேசமயம் அதை முழுமையா தீர்மானிக்க நந்தியம்பெருமானோட உதவியை வேண்டினா கங்கா மாதா. முக்கண்ணனை பூஜிக்க உகந்த தலம் அதுதான்னா, தனக்கு அவரோட திருக்காட்சியைப் பார்க்க உதவணும்னு அவர்கிட்டே கேட்டா. சரியா அதேசமயம் வானத்துல மூன்றாம் பிறை உதிச்சு வந்துது. சட்டுன்னு தலை உயர்த்தி அந்தச் சந்திரனை பார்த்தார், நந்திதேவர். கங்கையும் அந்த திசை நோக்கினா. இப்போ, சந்திரனைச் சூடின சந்திரசேகரனா அங்கே காட்சி தந்தார். சங்கரன் நமஸ்கரிச்ச கங்கை அங்கேயே ஒரு சிறிய குளமகத் தேங்கி நமசிவாய மந்திரம் சொல்லி சிவ தவம் இருந்தா.
உரிய காலத்துல அந்தக் குளத்துல ஒரு தாமரை மலர்ந்துச்சு. கங்கை ஆசைப்பட்ட மாதிரியே அந்தப் பூவுல பூ மாதிரியான பாப்பாவா, பாலமுருகன் தோன்றினான். பூரிச்சுப் போன கங்கை சின்னச் சின்னதா அலை எழுப்பி சிங்காரவேலனைத் தாலாட்டினா சீராட்டினா.
உமாதேவி சகிதரா காட்சிதந்தார், சிவன். கங்கை அவர்களைப் பணிஞ்சா. உமைபாலனான முருகனுக்கு கங்கைபாலனும் ஒரு திருநாமம் ஏற்படணும்னும், தான் தவம் பண்ணின இடத்துல சிவாலயம் ஒன்று அமைக்கணும்; அங்கே இருந்து ஈசன் அருள்பாலிக்கணும்னும் வேண்டினா. "அப்படியே ஆகட்டும்'னு ஆசிர்வதிச்சு மறைஞ்சாங்க, சிவதம்பதியர்.
இறைவன் தந்த வரத்தின் படியே அங்கே ஒரு கோயில் அமைஞ்சுது. சிறிய குளமாக தவம் பண்ணின கங்கையே அந்தத் தலத்துக்கு தீர்த்தமாகவும் ஆச்சு. ஆகம பூஜைகளும் ஆராதனைகளும் அமர்க்களமா நடந்துச்சு. ஆனா, நடப்பதெல்லாம் இறைவன் செயலேங்கறதால காலப்போக்குல அந்தக் கோயில் பூமியில புதைஞ்சுது. அங்கே இருந்த குளம் வற்றிக் குட்டையாக மாறி, பிரிட்டிஷ் ஆட்சி காலத்துல "துபாஷி குட்டை'ன்னு அழைக்கப்பட்டுச்சு.
அந்நிய ஆதிக்கம் விலகியதும் சொந்த மண்ணுல சுதந்திரமா விவசாயம் செய்யத் தொடங்கினாங்க மக்கள். அந்த சமயத்துல இந்தப் பகுதியில ஒருவர் உழவுப் பணியைத் தொடங்கினார். அதையே தன் கோயிலுக்கான உழவாரப் பணியாக நினைச்சுகிட்டு தன்னை வெளிப்படுத்திக்கிட்டார் ஈசன்.
சிவலிங்கத் திருமேனியைக் கண்டதும் ஊரே திரண்டு வந்து அகழ்ந்து பார்த்ததுல பழைய கோயிலோட சிதிலமடைஞ்ச பகுதிகள், அங்கிருந்த சிலா திருமேனிகள் எல்லாம் கிடைச்சுது. தொல்பொருள் ஆய்வாளர்கள் தயவுல புராண வரலாறும், புராதனமும் தெரிய வந்துச்சு. ஊர் மக்கள் கூடி சிதைஞ்சு கோயிலை ஓரளவு செப்பனிட்டு, பூஜைகள் நடத்தத் தொடங்கினாங்க. அந்த சமயத்துல சித்தர் ஒருவர் இந்தக் கோயிலுக்காகவே அமைச்சு வைச்ச சிவ சிலைகள், பக்தர் ஒருத்தர் மூலம் வந்துசேர்ந்துச்சாம்.
கங்கை இங்கு வந்து பாலமுருகனை பத்ம மலர்ல சுமந்து தாலாட்டினதை நினைவுப்படுத்தறவிதாமா, பத்மபீடத்துல பச்சிளம் குழந்தையாக காட்சி தர்ற முருகன் மூன்றாம்பிறை சூடி முக்கண்ணன் காட்சி தந்ததை கங்கைக்கு உணர்த்தின வடிவத்துல தலைநிமிர்த்தி பிறை பார்க்கும் நந்தியம்பெருமான் பிறை சந்திரன்ல தோன்றின அம்மையப்பர் திருப்பாததø"தை குறிக்கும்படியா, ஒரே பீடத்துல அமைஞ்ச சிவ பார்வதி திருப்பாதங்கள் அவறறை காத்து நிக்கற நாகம், இப்படிதல புராணக்கதையை சிற்பங்களாகவே வடிச்சு வைச்சிருக்கார் அந்த சித்தர். குறிப்பிட்ட காலத்துல அங்கே சேர்க்ணும்னும் இந்த சிலைகளை அங்கே சேர்க்கணும்னும் பல நூறு ஆண்டுகளக்கு மு"னானலயே சுவடியில எழுதி வைச்சிருந்தார். அஙண்கே சித்தர் ய÷ாரா ஒரு பெரிய வர் எல்லாவற்றையும் தன்கிட்டே தந்ததாக சொல்லி பக்தர் கொண்டுவந்த சிலைகளை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டாங்க. எல்லாரும் இன்னொரு முக்கியமான வினுயம். அந்த தினத்துலதான் அன்னியில இருந்து இந் கோயில்ல மூன்றாம்பிறை தரிசன வழிபாடு ரொம்பவே சிறப்பா நடக்குது.
மழலையை சுமக்கும் வரத்தை கங்கைக்கு தந்த இறைவன் காட்சி தர்ற தலம் என்பாதல இங்கே வந்து வழிபட்டா மகப்பேறு நிச்சயம் கறது நம்பிக்கை. ஒரே பீடத்துல அமைச்ஞ "ர்த்தநாரீஸ்வரர் திருப்பாதங்களை வணங்கி இல்லறத்துல இனிமை நிலவ பெற்றவங்க எண்ணிக்கை ஏராளம்னு சொல்றாங்க. மூன்றாம்பிறை தோன்றும் நேரத்துல இறைவன் காட்சிதந்ததால மாலை நேரத்துல தான் இங்கே பூஜைகள் நடத்தப்படுது. குறிப்பா மூன்றாம்பிறை தினத்துல இங்கே வந்து தரிசிக்கிறவங்க எண்ணம் எல்லாம் ஈடேறும்கறது நிச்சயம்.
பழமையான திருக்கோயில் தாமரை பீடத்துல சின்னஞ்சிறு பாலகனா காட்சிதரும் முருகன். தலை உயர்த்தி பிறை பார்க்கும் நந்தி, மலர் ஏந்திய கணபதில நாகபீடத்துல அமைஞ்ச அர்த்தநாரீசர் திருப்பாதம், தலை திருப்பிய நந்திபகவான், செதுக்க முடியாத கல்லுல தானாகவே பதஞ்ச இறைவன் திருவடி 'ப்படி பார்த்து பரவசப்படவும், பக்தியோட கும்பிட்டு வரம்பெறவும் நிறையபேர் வர்றாங்க
ரொம்ப சந்தோஷம்.. மத்தவங்களுக்கம் சொல்றேன் நானும் அந்த கோயிலுக்கு அவசியம் போயிட்டு வரேன்.

Comments
Post a Comment