மதுரையில் இருந்து ஸ்ரீவிநாயகரின் திருவுருவச் சிலையை எடுத்து வரும் வழியில், ஓரிடத்தில் அச்சு முறிந்து அங்கேயே நின்றது மாட்டுவண்டி. அப்போது, ''நான் இங்கேயே இருக்கிறேன்'' என அசரீரி கேட்க... விநாயகருக்கு அங்கே அற்புதமான கோயில் அமைந்தது என்கிறது ஸ்தல வரலாறு.
ஈச்சங்காடாக இருந்த இடத்தில் அமைந்த அந்த விநாயகர், ஈச்சங்காட்டு விநாயகர் என அழைக்கப்பட்டார். அதுவே பின்னாளில் ஈச்சனாரி விநாயகர் என அமைந்ததாகச் சொல்வர்.
கோவையில் இருந்து பொள்ளச்சி செல்லும் வழியில் அமைந்து உள்ளது இந்தத் திருத்தலம். நினைத்ததை ஈடேற்றித் தரும் ஈச்சனாரி விநாயகர் சந்நிதியில், புதிதாக வாகனம் வாங்கியவர்கள், சாவியை திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர். அதேபோல், அந்தச் சாலை வழியே செல்பவர்களுக்கு வழித்துணையாகவும் வருகிறார் விநாயகர் என்கிறார்கள் பக்தர்கள்!
இங்கு, 27 நட்சத்திரங்களுக்குமான நட்சத்திர பூஜை வெகு பிரசித்தம். அவரவர் நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்கினால், வளமும் நலமும் பெற்று வாழலாம் என்பர்.
தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு என்று தனியே தங்கத்தேர் இங்கு செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு தங்கத்தேரில் உலா வரும் வைபவம் நடைபெறுகிறது.
விநாயக சதுர்த்தி நாளில், ஈச்சனாரி பிள்ளையாரைத் தரிசிக்க, கோவை, ஈரோடு, பொள்ளாச்சி என பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். அன்றைய நாளில், சர்வ அலங்காரத்தில் ஜொலிக்கும் விநாயகப் பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும் எனப் பூரிப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்!
ஜெகந்நாதப் பிள்ளையார்
ஜெ கந்நாதப் பிள்ளையார் ஆலயம், கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தின் அருகே உள்ளது. பழைமையான இந்த ஆலயத்தில் நவராத்திரியின்போது கொலு வைப்பதுடன், ஒவ்வொரு நாளும் பிள்ளை யாருக்கு ஒவ்வோர் அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன.
_
ஸ்ரீஅபீஷ்டவரத மகா கணபதி
தி ருவையாறு மேட்டுத் தெருவில் வீற்றி ருக்கிறார் ஸ்ரீஅபீஷ்டவரத மகா கணபதி. சமுத்திர ராஜன் மகள் திருமணத்தை நடத்தி வைத்தவர் என் பதால், இவரை வழிபட்டால், தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலின் முன் புறமுள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்னர்தான் அப்பர் சுவாமிக்கு ஈசன் திருக் கயிலாயக் காட்சி கொடுத்ததாக தல புரா ணம் கூறுகிறது.
_
துணையிருந்த விநாயகர்!
திருவாரூரை அடுத்த திருப்பனையூரில் உள்ள விநாயகர் பெயர் ‘துணை இருந்த விநாயகர்’. கரிகால் சோழனின் இளம் வயதில் அவனைக் கொலை செய்ய பகைவர்கள் சூழ்ச்சி செய்தனர்.
அதனால் கரிகாலன், தாய்மாமன் இரும்பிடர்த் தலையாருடன் தலைமறைவாக வாழ்ந்தார். விநாயகர் அவருக்கு எல்லாவிதத்திலும் துணை இருந்து காப்பாற்றி அருளியதால் ‘துணை இருந்த விநாயகர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
டிரான்ஸ்ஃபர் விநாயகர்!
கோ வை மாவட்டம் கணியம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர்களுள் ‘டிரான்ஸ்ஃபர் விநாயகர்’ மிகவும் பிரசித்தம். விருப்பமான ஊர்களுக்கு மாறுதல் விரும் பும் பணியாளர்கள், இவரை வழிபட்டு பிரார்த்தித்துக் கொண்டால், அவர்களது கோரிக்கையை இவர் நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை.
-
வன்னி மரத்தடி பிள்ளையார்
ம துரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழக் கோபுர வாசல் வழியே சென்று, சிறிது தூரத்தில் இடப் பக்கமாக திரும்பினால் ஒரு பிள்ளையார் சந்நிதி வரும். இவரை வன்னி மரத்தடி பிள்ளையார் என்று அழைப்பர். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தல விருட்சம் இருக்கும். ஆனால், இங்கு ஒன்பது தல விருட்சங்களைக் காணலாம். அவை: வன்னி, நெல்லி, அரசு, வேம்பு, வில்வம், கொன்றை, மந்தாரை, அத்தி, பவழமல்லி.
உலக விநாயகர்
ம துரை கே. புதூர் உலக நாதன் சேர்வை தெருவில் அமைந்துள்ளவர் உலக விநாயகர். தேர்வுக்குச் செல்லும் மாணவ - மாணவியர், திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஆகியோர் இவரை வணங்கினால், நினைத் தது நிறைவேற பரிபூரண ஆசி வழங்குகிறார் இந்த விநாயகர்.
குளத்தில் மூழ்கும் பிள்ளையார்!
தி ருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை யில் பத்தரராவிப்பேட்டை தெருவில் வீற்றிருந்தவர் காரியசித்தி விநாயகர்.
ஊரில் மழை வேண்டும் என்றால் பெருமாள் கோயிலின் முன்புறமுள்ள தரிசன புஷ்கரணி யில் அவரை இறக்கி விடுவார்கள். மழை நின்றதும் மறுபடி பழைய இடத்துக்கு வந்துவிடுவார். இவர் இப் போது பேட்டைத் தெருவில் வாசம் செய்கிறார்.
கையடிந்த கணபதி!
சி தம்பரத்தில் செங்கழுநீர் பிள்ளையார் சந்நிதி உள்ளது. திப்புசுல்தான் காலத்தில் முகம்மதியர்கள் இவரது கையை உடைத்து விட்டனர்.
பொதுமக்கள், வேறு சிலை வைக்க முயன்றனர்.
அப்போது பிள்ளையார் அவர்களுள் ஒருவரது கனவில் தோன்றி, ‘‘கையடிந்த உன் மகனை விரட்டி விடுவாயா?’’ என்று கேட்டார்.
மக்கள் இறைவனின் திருவுள்ளத்தை உணர்ந்து கை ஒடிந்த கணபதியாகவே இன்றும் வழிபடுகின்றனர்!
குட்டுப்படும் பிள்ளையார்!
த ஞ்சையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் நரிமணம் என்னும் ஊர் உள்ளது. நரிமணம் என்பது ஹரிவனம் என்பதன் திரிபு என்பார்கள். இந்த ஊரில் உள்ள பிள்ளையார் தினமும் பக்தர்கள் கையால் குட்டுப்படுகிறார். இங்கு பிள்ளையாரை வணங்குபவர்கள் அவர் தலையில் குட்டி விட்டே வணங்கு வார்கள். அப்படி வணங்கினால்தான் காரியம் கைகூடுமாம்.
-
Comments
Post a Comment