இல்லங்கள் நிறையும் இதயங்கள் பூரிக்கும்! - தை மாத சிறப்பு தொகுப்பு

உ லகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை பாரத நாட்டுக்கு மட் டுமே இருக்கிறது. அது, உலக நாடுகள் அனைத்துமே பாரத நாட்டை ‘ஆன்மிக பூமி’ என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான்!
வேதங்களும் இதிகாச- புராணங் களும் தழைத்து ஓங்கும் இங்கு, ஆறு வகையான வழிபாடுகள் இருக்கின்றன. அவை: சௌரம் (சூரிய வழிபாடு), சைவம் (சிவ வழி பாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), வைஷ்ணவம் (விஷ்ணு வழிபாடு).
இவற்றுள் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி, ஏக (ஒரே) தெய்வத்தை வழிபடுவோர், மற்ற தெய்வங்களை வழிபட மாட்டார்கள். ஆனாலும் விதிவிலக்காக அனைவரும் ஏற்றுக் கொண்டு வழிபடும் ஒரே தெய்வம் - சூரியன். நாம் நேரில் காணக்கூடிய ஒரே தெய்வம் சூரியன்.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் நடத்தும் வழிபாடே பொங்கல் திருநாள் எனும் பண்டிகை.
சூரியனைப் பற்றிப் புகழாத ஞான நூல்களே இல்லை. ஆம், நம் முன்னோர்கள் சூரிய னைப் பற்றியும் சூரியனின் சக்தியைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்ததுடன், தாங்கள் உணர்ந்து அனுபவித்ததை, ஞான நூல்கள் மூலம் நமக்கு வழங்கியும் இருக்கிறார்கள்.
வாருங்கள்... அதோ, சூரியனின் பயணம் தொடர்கிறது. அதைக் கவனிப்போம்.
உத்தராயணம்!
சூ ரியன், தன்னுடைய பாதையில் மகர ராசியில் பிரவேசிப்பது ‘மகர ரவி’ எனப்படும். அதுவே உத்தரா யண புண்ணிய காலம். உத்தர அயனம் என்றால், வடக்குப்புற வழி என்று பொருள்.
சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்று சொன்னாலும், தட்சிண அயனம் என் னும் காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தர அயன காலத்தில் சற்று வடக்குப் புறமாக வும் சூரியனின் சஞ்சாரம் இருக் கும்.
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் என்றும் சொல்லப்படும். மங் கள கரமான காரியங்களைச் செய்ய உத்தராயணமே சிறந்த காலம். இறப்பது கூட உத்தராயணத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும். எனவேதான், தட்சிணாயண காலத்தில் (பாரதப்போர் நிகழ்ந்தபோது) அடிபட் டுக் கீழே விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயண புண் ணிய காலம் வரும் வரை காத்திருந்து உயிர் நீத்தார்.
உத்தராயண புண் ணிய காலம் தை மாதம் தொடங்குகிறது. தை மாதப் பிறப்பு ‘பொங்கல்’ திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாள் நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது. அவை: போகி, பொங்கல், மாட்டுப் பொங் கல், காணும் பொங்கல்.
போகிப் பண்டிகை: பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற் கும் முகமாக போகி, முதல் நாளன்று (மார்கழி மாதக் கடைசி நாளன்று) கொண்டாடப்படுகிறது.
உதவாத பழைய பொருட்களை எல்லாம் தீயில் இட்டுப் பொசுக்கி, வீட்டைத் தூய்மை செய்து வெள்ளை அடிப்போம். நம்மை வாழ விடாத, நமக்கு உதவாத, கெடுதல் செய்யக் கூடிய தீய குணங்களை எல்லாம், தூய்மை யான அறிவு என்னும் ஞானத்தீயில் இட்டுப் பொசுக்கி, உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் உட்பொருள். தீயவற்றைப் போக்கு வதால், இந்த பண்டிகை, ‘போக்கி’ எனப்பட்டு, ‘போகி’ என மருவி வழங்கப்படுகிறது.
போகிப் பண்டிகை வட நாட்டிலும் கொண்டாடப்படு கிறது. அங்கே இந்திரனைப் போற் றும் முகமாக இதை ‘இந்திர விழா’ என்று கொண்டாடுகிறார்கள். இந்திரனுக்குப் ‘போகி’ என்ற பெயரும் உண்டு. அதனால் அங்கே இந்திர விழா, போகிப் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. ‘லோரி கொளுத்துவது’ என்ற பெயரில் (நம் தமிழ்நாட்டைப் போலவே) கட்டைகளைப் போட்டு நெருப்பு மூட்டுவதும் உண்டு. (மார்கழி மாதத்தின் சிறப்புகளை விவரிக்கும் சக்தி விகடன் 15.12.2005 இணைப்பில் போகிப் பண்டிகையைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.)
பொங்கல்: உழவுத் தொழிலின் மேன்மையை உலகுக்கு உணர்த்து வது பொங்கல் பண்டிகை. தை மாதம் தொடங்குவதற்குள் அறுவடை எல்லாம் அநேகமாக முடிந்துவிடும். அறுவடை ஆன பொருட்களை வைத்து, அனைத்து உயிர்களும் வாழ அருள் புரியும் பிரத்தியட்ச தெய்வமான சூரியனை வழிபடுவதே பொங்கலின் அடிப் படைக் கோட்பாடு.
சூரிய பூஜை; காலையில் எழுந்த தும் நீராடி, அதன் பிறகு பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் அன்று தலைக்குக் குளிக்க வேண் டும். எண்ணெய் தேய்த்துக் குளிக் கக் கூடாது.
புது பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை ஆகியவற்றைக் கட்டி வைக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பார்கள்.
பொங்கல் பொங்கி வழியும் போது, ‘‘பொங்கலோ பொங்கல்!’’ என்று குரலெடுத்துக் கூவுவார்கள். சில இடங்களில் பொங்கல் பொங்கி வழியும் திசையை வைத்து, ‘நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா?’ என்று தீர்மானிப்பார்கள். அது தவறு. அவ்வாறு செய்யக் கூடாது! சமையல் முடிந்ததும், நைவேத்தி யப் பொருட்களையும் வைத்து சூரிய பூஜை செய்ய வேண்டும்.
சுருக்கமாக கணபதி பூஜையை முடித்துக் கொண்டு அதன் பிறகே சூரிய பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ய வேண்டிய இடத்தில் (திறந்த வெளியில்) அரிசி மாவால் அழகாகக் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து வைத்து (கோலம் போட்டும்) பூஜை செய்ய வேண்டும்.
ஒரு தலைவாழை இலை யில், சமைத்து வைத்ததை எல்லாம் போட்டுப் பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போடும் வழக்கமும் உண்டு. அப் போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவுவார்கள்.
பொங்கல் அன்று - பொங்கல் செய்த பானையையோ, சாதம் வடித்த பாத்திரத்தையோ காலி செய்யக் கூடாது!
கணுப் பண்டிகை: பொங்கலுக்கு மறுநாள் செய்யப்படும் ஒரு விசேஷ நிகழ்ச்சி இது. பெண்களுக்கு உரியது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இல்லாதபட்சத்தில் கணவனிடமே மஞ் சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.
கணுப்பிடி வைக்கும் முறை: இரண்டு மஞ்சள் இலைகள் (அல் லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ (மொட்டை மாடியிலோ) கணுப்பிடி வைப் பார்கள்.
கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்வார்கள். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைப்பார்கள். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றப்படும்.
வெற்றிலை-பாக்கு,பழம்,தேங் காய், கரும்பு (துண்டு களாக), மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக் கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் (மஞ்சள், சுண்ணாம்பு, குங்குமம் கலந்து கரைத்த நீர்) தயா ராக வைக்கப்பட்டிருக்கும்.
கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இனி பூஜை: அட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), ‘‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல் லாம் கல்யாணமாம் கல்யாணம்’’ என்று சொல்வார்கள். அதன் பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள்.
கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்-பூனை போன்றவை எச்சில் பண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சம் சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறும்.
கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட் டார்கள் என்பது மரபு. இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுகிறது (கணுப்பிடி). ஆதலால், ‘‘உடன்பிறந் தவர்கள் எந்தக் குறையும் இல் லாமல் நன்றாக இருக்க வேண்டும்!’’ என்று வேண் டிக் கொள்வார்கள். இதன் உண்மையை, ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என் னும் பழமொழி விளக்கும்.
கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம்.
பிறந்த வீட்டுச் சீராகப் பெண் களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். உள் ளூரிலேயே இருப்பவர்கள், தாய் வீட்டுக்குப் போய் மதியம் உணவு உண்பது வழக்கம்.
ஜல்லிக்கட்டு!
பொ ங்கலை முன் னிட்டு, ஜல்லிக்கட்டு என் னும் வீர விளையாட்டு பெரும்பாலான கிரா மங்களில் நடைபெறு கிறது.
இந்த வீர விளை யாட்டு எதற்காக நடத்தப்படுகிறது? என் பதற்கு நம் முன்னோர்கள் சுவாரஸ்யமான ஒரு கதை சொல்வார்கள்.
தை மாதம் பிறந்தது. பாடுபட்டு உழைத்துப் பலனைக் கண்ட ஓர் உழவர், நெல்லும் கரும்புமாகக் கொண்டு வந்து வீட்டு முற்றத்தில் குவித்தார். துண்டை உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டு மனைவியை அழைத்தார்.
நெற் குவியலையும் கரும் புக் கட்டுகளையும் காட்டி, ‘‘பார்த்தாயா? எப்படி? எல்லாம் என் உழைப்பால் விளைந்தவை!’’ என்று பெருமிதம் பொங்கக் கூறினார்.
அப்போது அருகில் இருந்த உழவரின் மாடு எதற்காகவோ பலமாகத் தலையை ஆட்டியது.
அதைப் பார்த்த உழவரின் மனைவி, ‘‘ஹுக்கும்! என்னத்தப் பாக்கறது? நீங்க சொல்றத உங்க மாடே ஒப்புக்கல. தலய ஆட்டுது பாருங்க! இவ்வளவும் வந்தது, தனது உழைப்பால்தான்னு மாடு சொல்லுது!’’ என்று பரிகாசம் செய்தாள்.
உழவருக்குக் கோபம் வந்து விட் டது. ‘‘மாட்டுக்கு பலம் அதிகமா? மனிதனுக்கு பலம் அதிகமா? பார்த்து விடுவோம்!’’ என்று சொல்லி, மாட்டுடன் போட்டி போடத் தொடங்கி விட்டார்.
அதுதான் ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டுப் போட்டியாக நடந்து வருகிறது.
‘மாடா? மனிதனா?’ என்று போட்டி துவங்கி விட்டதே தவிர, இன்றுவரை அதற்கு விடை கிடைக்கவில்லை.
காரணம், மாட்டை மனிதன் அடக்கிய நிகழ்ச்சிகளும், மனி தனை மாடு முட்டிக் கொன்ற நிகழ்ச்சிகளும் இன்னும் நடந்து கொண்டுதானே இருக் கின்றன?!
மாட்டுப் பொங்கல்: பல விதங்களிலும் நமக்கு உதவி புரிந்து, நம்மை வாழ வைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தி, அவற்றைப் பெருமைப் படுத்துவதே மாட்டுப் பொங்கல். மாடுகளைப் பற்றியும், அவற்றைத் துன்புறுத்தக் கூடாது, அவற்றிடம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் காரண - காரியங்களுடன் விரிவாகச் சொல்கின்றன நமது நூல்கள்.
பல விதங்களில் மனிதனுக்காக உழைப்பது மாடு. உழவுத் தொழிலுக்கு உதவுவது மாடு. மனிதன் பிறந்த நாள் தொடங்கி அவனது உணவுக்காகப் பால் தருவது மாடு. அவற்றைத் துன்புறுத்தக் கூடாது என்கிறது பின்வரும் பாடல்:
நோவன செய்யன்மின் கொடிவன கேண்மின் விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து நெடுநில மருங்கில் மக்கட்கு எல்லாம் பிறந்த நாள் தொட்டு சிறந்த தன் தீம்பால் அறந்தறா நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
- சிலப்பதிகாரம்
நம் நாட்டு இலக்கியம் சொன் னதைப் பார்த்தோம். இனி, அயல் நாட்டு அறிஞர் சொல்வதைப் பார்க்கலாம்.
‘‘பசுக்களைக் கொல்வது, பெருத்த நஷ்டத்தை உண்டாக்கும்’’ என்று விவரிக்கத் தொடங்கிய ரெவரண்ட் டாக்டர் ஜான் மாரிஸன் என்பவர், ‘‘பசுக்கள், குறைந்தது பதினான்கு அல்லது பதினைந்து ஆண்டுகள் உயிர் வாழும். ஒரு பசு தரும் பால், அதன் கன்றுக்குட்டிகள் வளர்ந்தபின் அவை தரும் பால்- ஆகியவை 15,440 பேருக்கு ஒரு நாளைக்கு உண்டான பாலை வழங்கக் கூடியவை. ஆகையால் பசுக்களைக் கொல்வது பெரும் நஷ்டத்தை உண்டாக்கும் என்பதை உணருங்கள்!’’ என்று வருத்தத்தோடு அறிவுறுத்தி இருக்கிறார்.
மாட்டுப் பொங்கல் அன்று மாடு களைக் குளிப்பாட்டி அவற்றுக்கு சந்தனம்-குங்குமம் வைத்து, மாலை யிட்டு அலங்காரம் செய்து கோ பூஜை செய்வார்கள்.
ஒரு தலைவாழை இலையில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கரும்புத் துண்டங்கள், வாழைப் பழங்கள் முதலியவற்றை வைத்து மாடுகளுக்கு விசேஷ விருந்து படைப் பார்கள்.
தமிழ்நாட்டுக்கே உரித்தான வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று. இது, கொல்லேறு தழு வுதல், மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப் படுகிறது.
‘‘இந்தக் காளையை அடக்கு பவனுக்குத்தான் என் மகள் மாலை யிடுவாள்!’’ என்று பெண்ணைப் பெற்றவர் சொல்ல, அவர் வீட்டுக் காளை சீறிப் பாய்ந்து கிளம்பும். ஓரளவு அனைவருக்குமே தெரிந்தது தான் இது.
விவரம் தெரிந்த நாள் முதல் பெண் ஒருத்தி, ஒரு காளைக் கன்றைச் செல்லமாக வளர்த்து வருவாள். அவளுக்குத் திருமணப் பருவம் வரும்போது, கன்று வளர்ந்து காளை மாடாக கொழுகொழுவென்று இருக்கும். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர், அந்தக் காளை மாட்டை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்தத் தகவலை, தூநிற வெள்ளை அடர்ந்தாற்கு உரியள் இப் பூவைப் புது மலராள் எனச் சிலப்பதிகாரம் சொல்கிறது.
ஜல்லிக்கட்டு என்பது வெறும் வீர விளையாட்டு மட்டுமல்ல. பார்ப்பவர் களுக்குக்கூட உற்சாகத் தையும் மன ஊக்கத்தையும் தரும் நிகழ்ச்சி அது.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள் ளும் மாடுகளை முன்னாலேயே தயார் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள், கூராக இருந்தாலும், இன்னும் அழகாகச் சீவி எண் ணெய் தடவிப் பக்குவம் செய் யப்பட்டு வண்ணம் பூசப்படும். கொம்புகளில் கூரான கொப்பிகள் பொருத்தப்படும். இந்தக் கொப்பி கள் அவரவர் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு என்னும் ஏதாவது ஓர் உலோகத்தில் அமைந்து இருக்கும்.
மாடுகளுக்குச் சந்தனம் பூசி, மருக்கொழுந்து மாலை போட்டு, கொம்பில் சிறு (புது) துண்டைச் சுற்றி வைப்பார்கள். கழுத்தில் புதிய ஒரு சிவப்புத் துணியைக் கட்டி விடுவார்கள். அவற்றில் பணத்தையோ அல்லது பொரு ளையோ வைத்துக் கட்டுவதும் உண்டு.
பளபளவென்ற கொம்புகளுடனும் கழுத்தில் மாலை களுமாகக் கம்பீரத்து டன் ஜல்லிக்கட்டுக் காளைகள் போராட் டக் களத்தில் நுழை யும். ஜல்லிக்கட்டு நடை பெறும் இடத்தின் நுழைவாயில் ‘வாடி வாசல்’ எனப்படும்.
அங்கே ஊர்ப் பெரியவரான நாட் டாண்மைக்காரர் மாடுகளுக்கு மாலை போட்டு மரியாதை செய்வார். அதற்கு முன், ஊரில் உள்ள அம்மன் கோயில்களில் எல்லாம் ‘செவ்வாய் சார்த்துதல்’ என்ற பெயரில் பூஜை நடக்கும்.
மாடுகளுக்கு மாலை, மரியாதை முடிந்தவுடன் அவற்றின் கயிறுகள் அவிழ்க்கப்பட்டுக் களத்தில் இறக்கப்படும். முதன்முதலில் களத்தில் நுழைவது கோயில் மாடுதான். அதை யாரும் பிடிக்க மாட்டார்கள்.
பிறகு, நெற்றிப் பட்டயத்தில் பணம், கழுத்தில் பணம், கொம்பில் பணம் என விதவிதமாகக் காளை கள் களத்தில் பாயும்.
ஜல்லிக்கட்டுக் காளைகள் களத்தில் இறங்கியதும் அவற் றுக்கு வேகத்தையும் வெறியையும் ஊட்டுவதற்காகத் தாரை, தப் பட்டை, ஊதுகொம்பு முதலியவை முழங்கும்.
ஒவ்வொரு காளையைப் பற்றிய தகவல்களும் சொல்லப்படும். ‘இது இத்தனை போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற போட்டிகள் இத்தனை; இத்தனை பேரைக் குத்திக் கிழித்திருக்கிறது’ போன்ற தகவல்கள் எல்லாம் அதில் இடம்பெறும்.
சீறிப் பாயும் இந்தக் காளைகளின் மீது, வாலிபக் காளைகள் உயிரையும் பொருட்படுத்தாமல் பாய்வார்கள்.
மாடுகளின் கழுத்தில் உள்ள துணியை உருவி எடுக்க முயற்சிப்பார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது அவரவர் பலத்தையும், நேரத்தை அனுசரித்து இயங்கும் திறமையையும் பொறுத் தது. வாட்டமின்றி வாகாக வளைய வரும் காளைகள், களத்தில் இருக்கும் வாலிபர்களைத் தூக்கிப் பல முறை கொம்பினால் வீசிப் பந்தாடிவிட்டு ஓடும்.
ஓடாமல் ஒரே இடத்தில் இருந்தபடி, ‘வா! வந்து என்னைப் பிடி! பார்க்கிறேன்!’ என்று எதிர் சவால் விட்டுப் பாய்ந்து விரட்டும் காளைகளும் உண்டு. இவற்றுக்கு ‘நின்று குத்திக் காளை’ என்று பெயர்.
காளையை அடக்கி அதன் கொம்பிலோ அல்லது கழுத்திலோ உள்ள துண்டையும் பணத்தையும் எடுத்துவிட்டால், அது காளையை அடக்கிய வீரனுக்கே சொந்தம். பார்வையாளர்களிடம் இருந்தும் பரிசு கிடைக்கும்.
மாடுகளின் திமிலைக் கெட் டியாகப் பிடித்தபடி, குறிப்பிட்ட தூரம் வரை அவற்றுடன் சேர்ந்து ஓடுபவர்கள் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படு வார்கள். தங்கள் கால்கள் தரையில் பட்டும் படாமலும், மாட்டின் மீது உரசியபடியே குறிப்பிட்ட தூரம் ஓடினாலும் அதுவும் வெற்றி பெற்றதாகவே கருதப்படும்.
யாராலும் அடக்க முடியாமல் களத்தையே கலக்கி வெற்றிபெறும் காளைகள், சில நேரங்களில் அங்கேயே ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுவதும் உண்டு.
மாட்டுப்பொங்கல்-2: இது வரை பார்த்து வந்த மாட்டுப் பொங்கல் வைபவத்தில் இருந்து மாறுபட்டது இது. பல பேருக்குத் தெரியாது. நாம் தெரிந்து கொள்வதற்காகவும் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காகவும் விசேஷமான இந்த ‘மாட் டுப் பொங்கல்’ இங்கே படைக்கப்படுகிறது.
மாட்டுப் பொங்கல் அன்று மாலையில், ஊரி லுள்ள மாடுகள் எல்லாம் ஒரு மந்தையில் கூடும்.
ஊரில் இருக்கும் பெரியவர்கள் வீடு வீடாகப் போய், ஒரு வீடு கூட விட்டுப்போகாமல் வெல்லம், அரிசி, தேங்காய், தயிர், பழம், சீயக்காய், எண்ணெய் முதலானவற்றை வாங்கிச் சேகரித்துக் கொண்டு வருவார்கள்.
சேகரிக்கப்பட்ட அரிசியை (மந்தையிலேயே ஓர் ஒதுக்குப் புறமாக) மிச்சம் மீதி வைக்காமல், பிரமாண்டமான பாத்திரங்களில் போட்டுப் பொங்கல் செய்வார் கள்.
மந்தையின் மேற்புறத்தில் மண் ணால் செய்யப்பட்ட பெரும் மேடை ஒன்று இருக்கும். அதில் வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் நீள நீளமான, நுனியுடன் கூடிய வாழை இலைகளை வரிசையாக விரித்து வைப்பார்கள். அந்த வாழை இலை களில், அங்கேயே தயார் செய்யப்பட்ட பொங்கலைப் பரப்பி வைப்பார்கள்.
பிறகு தயிர், உரித்த வாழைப்பழங்கள், தேங்காய் பத்தைகள், வெல்லம் ஆகியவற்றைப் பொங்கலுடன் சேர்த்துக் கலக்கு வார்கள். கலவையான அந்தப் பொங்கல் ஒரு மலையாகக் குவிக்கப்பட்டு, சிவலிங்கம் போல் காட்சி தரும். இந்தச் செயல்களை எல்லாம் வாயில் துணி கட்டி மறைத்தபடியே செய்வார்கள். தவறிப் போய் வாயில் இருந்து எச்சில் தெறித்து, புனிதம் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது.
பொங்கல் குவிக்கப்பட்ட அந்தப் பெரிய மண்மேடைக்குத் ‘திட்டாணி’ என்று பெயர். அதற்கு நேராக, கீழ்த் திசையில் ‘கள்ளி வட்டம்’ என்பது இருக்கும்.
அங்கே கிளை கிளையாகப் படர்ந்திருக்கும் திருகுக் கள்ளியை ஒடித்துக் கொண்டு வந்து, அவற்றில்- எண்ணெயில் நனைக்கப்பட்ட ஏராளமான திரிகளைச் சர விளக்குகளைப் போலச் செருகி வைத்திருப்பார்கள். இங்கே ஒரு பெரிய சட்டியில் சாம்பிராணியும் புகைந்து கொண்டிருக்கும். இவற் றுக்குப் பாதுகாவலாக ‘திட்டாணிக் காவலர்’ என்று ஒருவர் அங்கேயே அமர்ந்து இருப்பார்.
பொங்கல் கொட்டி வைத்திருக் கும் பெரிய மண் மேடைக்கும் (சற்று முன் பார்த்த) கள்ளி வட்டத் துக்கும் நடுவே மாடுகள் எல்லாம் கொண்டு வரப்படும்.
‘வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாகி விட்டதா?’ என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு ‘மாட் டுப் பொங்கல்’ வைபவம் ஆரம்ப மாகும்.
முதலில் மாடுகளுக்கு முடி (சவரம்) எடுப்பார்கள். அதாவது மாடுகளின் வாலில் இருந்து சிறி தளவு முடி, நறுக்கி எடுக்கப்படும். அதன்பின் அவற் றின் முதுகில் கொஞ்சம் கொஞ்சம் எண்ணெய் தடவி, சீயக்காய்த் தூளைத் தேய்ப்பார்கள். பிறகு தண்ணீர் நிரம்பிய சொம்புகளில் மாவிலையை நனைத்து மாடுகளை நோக்கி வீசுவார்கள். இது குளிப்பாட்டும் நிகழ்ச்சி.
இது முடிந்ததும்... வாயைக் கட்டியபடி இருக்கும் பெரியவர் ஒருவர், மலை போன்ற பொங்கல் குவியலில் இருந்து பொங்கலை எடுத்து, அங்குள்ளவர்களிடம் கொடுப்பார். வாங்கியவர்கள் அதை மாடுகளுக்கு ஊட்டுவார்கள். பிறகு, ‘‘மாலை கட்டலாம்’’ என அறிவிப்பு வரும். மாவிலை, ஆவாரம் கொத்து, பிரண்டை, பீளைப் பழம் ஆகியவற்றைக் கோரையில் மாலையாகக் கட்டி மாடுகளுக்கு அணிவிப்பார்கள்.

வண்ண மயமான நெட்டி மாலைகளும் போடப்படும். கற் றாழை நாரால் ஆன வண்ணக் குஞ்சங்களை சிறுவர்கள் மாடுகளின் கொம்புகள், கழுத்து, கால்கள் ஆகியவற்றில் கட்டுவார்கள். அவ் வப்போது ஆரவாரம் எழும்.
அடுத்ததாக, அங்கிருப்பவர்கள் வரிசையாக நிற்க, ஒருவர் கையில் தீச்சட்டி இருக்கும். மற்றொருவர் சேகண்டியை (வெண்கலத்தால் ஆன தட்டையான, நூல் கட்டப் பட்ட இசைக் கருவி) பிடித்து இருப்பார். இன்னொருவர் கையில் சங்கு இருக்கும். ஒருவர் நீர் நிறைந்த சொம்பில் மாவிலையைப் போட்டு வைத்திருப்பார். நல்ல குரல் வளம் மிக்க ஒருவர் ‘மாட்டுப் பொங்கலை’ வாழ்த்திப் பாடுவார். அதை அப் படியே பின்பற்றி மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்திசையாகப் பாடுவார்கள்.
வரிசையாக அணி வகுத்து நின்றவர்கள் மாட்டு மந்தையைச் சுற்றி வட்டமாக வலம் வரு வார்கள். சேகண்டி ஒலி எழுப்பும். சங்கு முழங்கும். தண்ணீர்ச் சொம்பில் இருந்து மாவிலையால் தண்ணீர் எடுத்து, மாடுகளின் மீது தெளிக் கப்படும்.
இந்த ஊர்வலம்- கள்ளிவட்டம், பொங்கல் கொட்டி வைக்கப் பட்டிருந்த பெரிய திட்டாணி என்னும் பள்ளயம் ஆகியவற்றை மூன்று முறை வலம் வரும்.
அப்போது ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவுவார்கள்.
இந்தச் சத்தம் வீட்டில் இருக்கும் பெண்களின் காதுகளில் விழுந் ததும், (இந்த வைப வத்தின்போது பெண்கள் மந்தைக்கு வருவதில்லை) அவர்கள் பலகாரங்கள் பலவற்றுடன் கூடிய படையலை, வீட்டில் தெய்வத்துக்குப் படைப்பார்கள். இது நடைபெறும்போது இரவு மணி இரண்டு, மூன்று கூட ஆக லாம். அதுவரை பெண்கள் தூங்க மாட்டார்கள்.
இதன் பிறகே மாடுகள் மந்தையில் இருந்து வீடு திரும்பும். அப்போதும், மந்தையில் இருந்து அனைவரும் வீடு திரும்ப மாட்டார்கள். வீட்டுக்கு ஒருவர் என்று, மந் தையிலேயே இருப்பார்கள். ஒவ் வொருவர் கையிலும் ஒரு பாத்திரம் இருக்கும்.
திட்டாணியில் இருக்கும் பொங்கல் கவளங்களாக உருட்டப்பட்டு, பாத்திரம் வைத்திருப்பவர்களுக்கு ஒவ் வொரு கவளம் தரப்படும். அனைவருக்கும் தந்த பிறகு மீதி இருக்கும் பொங்கலை அங்கு இருக்கும் மற்றவர்களுக்கும் சிறு சிறு உருண்டைகளாகக் கொடுப் பார்கள்.
‘பெருமாள் சோறு’ என்று சொல்லி, அதை எல்லோரும் அங்கேயே சாப்பிடுவார்கள். மந்தையில் இருந்து, விழா முடிந்து மாடுகள் வீடு திரும்பும்போது, பெண்கள் தங்கள் வீட்டின் எல் லையில் சிறிதளவு வைக்கோலைப் போட்டுக் கொளுத்தி, ஓர் உலக்கையையும் குறுக்காகப் போட்டு வைப்பார்கள். மாட்டுக்கு திருஷ்டி படக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. வியாதிகள் வராமல் இருக்கவும், நல்ல விளைச்சல் கிட்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இவ்வாறு செய்யப்படுகிறது. நமக்கெல்லாம் நன்கு பழக்கப்பட்ட மாட்டுப் பொங்கலில் இருந்து மாறு பட்ட ‘மாட்டுப் பொங்கல் விழா’ இது!
காணும் பொங்கல்
தை மாதம் மூன்றா வது நாளன்று ‘கன் னிப் பொங்கல்’ கொண் டாடப்படும். இதை ‘கன்றுப் பொங்கல்’ என் றும் சொல்வார்கள். இரண்டுக்கும் பெயர்க் காரணங்கள் உண்டு.
கல்யாணம் ஆகாத பெண்களுக்கு உரியது இது. ஆகையால் இது ‘கன்னிப் பொங்கல்’.
கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு(ம்) உரியது இது. ஆதலால் இது ‘கன்றுப் பொங்கல்’ எனவும் அழைக்கப்படுகிறது.
கல்யாணம் ஆகாத இளம்வயதுப் பெண்கள் எல்லோரும், வெள்ளைத் துணியால் மூடப்பெற்ற தாம்பாளங்களை எடுத்துக் கொண்டு மாலை நேரத்தில் ஓரிடத்தில் கூடுவார்கள். ஒவ்வொருவர் தாம் பாளத்திலும் கரும்புத் துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவை இருக்கும்.
எல்லோரும் கும்மியடித்துப் பாடல்களைப் பாடியபடியே ஊரில் உள்ள ஆற்றங்கரை, குளக் கரை, ஏரிக்கரை (ஏதாவது ஒன்றை) நோக்கிச் செல்வார்கள். பக்க வாத்தியமாக மேளமும் போகும்.
தண்ணீர்க் கரையை அடைந்த வுடன் அங்கே ஒரு சிறிய மண் மேடை அமைப்பார்கள். இது திட்டாணி எனப்படும். கொண்டு வரப்பட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய தாம்பாளங்களை, அந்த மண் மேடையின் மீது வரிசை யாக அடுக்கி வைப்பார்கள்.
தாம்பாளங்கள் கொண்ட அந்த மண் மேடையைச் சுற்றி வட்டமாக நின்றபடி கும்மியடித்துப் பாட்டுப் பாடுவார்கள். பாடல்கள் பாடி முடிந்ததும், அவரவர் தாம்பாளங்களில் இருக்கும் பச்சரிசியில் சர்க்கரையைச் சேர்த்து, நீர் வார்த்துக் கலந்து வைப்பார்கள்.
கற்பூரம் ஏற்றிக் கடவுள் வழிபாடு செய்வார்கள். ‘‘சீக்கி ரம் திருமணம் நடக்க வேண்டும்’’ என்று வேண்டிக் கொள்வார்கள். அவர்களுக்கு அந்த வருடத்திலேயே கல்யாணம் நடந்து விடும் என்றும் சொல்வார்கள்.
சர்க்கரை கலந்த பச்சரிசி, அங்கு வேடிக்கை பார்க்க வந்திருக்கும் எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படும்.
கன்னிப் பெண்கள் கொண்டாடிய ‘கன்னி பொங்கலை’ பார்த்தோம். ‘கன்றுப் பொங்கல்’ என்றால் என்ன, தெரியுமா?
கட்டிளங் காளை ஒருவன் காளையை அடக்கித் தன் வீரத்தை வெளிப்படுத்துவான். காளையைக் கன்று என்று கூறுவதும் உண்டு. இதை முன்னிட்டு இவ்விழா ‘கன்றுப் பொங்கல்’ எனக் கூறப் படுகிறது.
கன்னிப் பொங்கல் - 2: கன்னிப் பொங்கலைப் பற்றி விரிவாகவே பார்த்தோம். சற்றே வித்தியாசமான கன் னிப் பொங்கலும் உண்டு. அது:
இளம் வயதுப் பெண்கள் கூட்டமாகக் கூடிக் கும்மியடித்துப் பாட்டுப் பாடியபடி ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். அங்கே, இஷ்டப்படி ஆடல், பாடல் என விளை யாடி விட்டுக் கூட்டாஞ்சோறு சமைப்பார்கள்.
அதை ஆற்றுக்குப் படைத்துப் பூஜை செய்வார்கள். ஆற்றுக்குக் ‘கன்னி’ என்று பெயரும் உண்டு. ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ என்று பெருமை பெற்று, வான் மழை பொய்த்து விட்டாலும் தன்னுடைய ஊற்று நீரால் அனைவரையும் வாழ வைக்கும் ஆற்றை, கன்னி அம்மனாகவே நினைத்துப் பூஜை செய்வார்கள்.
நதிகளுக்கு, நவ கன்னிகைகள் வடிவில்-கங்கை, யமுனை, சரஸ் வதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, நர்மதா, துங்கபத்ரா, சரயூ என்னும் ஒன்பது திருநாமங்களில் வழிபாடு நடக்கும்.
இந்த நவ கன்னிகைகளின் அழகிய விக்கிரகங்களைக் கும்பகோணத்தில் மகாமகக் குளக்கரையில் இருக்கும் விஸ்வநாதஸ்வாமி கோயிலில் தரிசிக்கலாம்.
வழிபாடு முடிந்ததும் கூட்டாஞ்சோறை அங்கேயே சாப்பிட்டு விட்டுக் குதூகலத்துடன் வீடு திரும்புவார்கள் பெண்கள்.
கன்னிகள், கன்னிக் (ஆற்றங்) கரையில், கன்னியை (ஆற்றை)க் குறித்துச் செய்யும் கன்னிப் பொங் கல் இது.
காணும் பொங்கல்: நெருங்கிய நண் பர்களையும் உறவினர்களையும் பார்த்து, நலம் விசாரித்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் பண்டிகை இது.
சென்னை முத லான கடற்கரை உள்ள பகுதிகளில், குடும்பத்துடன் கடற் கரைக்குப் போய்க் கூட் டத்தோடு கூட்டமாக மகிழ்ச்சியோடு பொழு தைக் கழிப்பதும் உண்டு.
இதைவிட விசே ஷமான நிகழ்ச்சி: உழைப் பாளர்களும், இசை மற்றும் நாடகக் கலைஞர்களும், ஜமீன் தார்கள், பிரபுக்கள் முதலான பெருந்தனக்காரர்களைப் போய்ப் பார்ப்பார்கள்.
‘வாழ்நாள் எல்லாம் நமக்காகப் பல விதங்களிலும் உழைப்பவர்கள் இவர்கள்’ என்ற எண் ணத்துடன் வேட்டி, சேலை, அரிசி, பணம் முதலானவற்றைக் கொடுத்து அவர் களை மகிழ்வுறச் செய்வார்கள் பணக்காரர்கள். தெருக்கூத்துக் கலை ஞர்கள் கௌரவிக்கப் படுவார்கள்.
இவ்வாறு அடுத்தவர்கள் மனமும் முகமும் மகிழ்ச்சியில் மலர்வதைக் காண்பதே உண்மையான ‘காணும் பொங்கல்’.
ஸபலா ஏகாதசி
ச ம்பாவதீ நகர மன்னர் மாஹிஷ்மதனுக்கு ஐந்து பிள்ளை கள். லும்பகன் என்பவன் மூத்த வன்; பாவங்களுக்கு எல்லாம் இருப்பிடம் ஆனவன் அவன். தந்தையின் பெரும்பாலான செல்வத்தை மது, மங்கையரிடம் கொண்ட ஆசைக்காகவே செலவு செய்தான் லும்பகன்.
‘‘தெய்வமாவது ஒன்றாவது? ஸ்வாமிக்குப் பூஜை செய்கிறேன், அது இது என்று அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்!’’ என்று வாய்போன போக்கில் தெய்வத்தையும் அடியார்களையும் திட்டுவதே, லும்பக னின் தினசரி நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருந்தது.
குடிமக்களை எல்லாம் குறையின்றிக் காத்து வந்த மன் னர், மைந்தனின் நடவடிக்கைகளால் மனம் நொந்தார். வேறு வழியற்ற நிலையில் காவலாளிகளை அழைத்து, ‘‘லும்பகனைக் கொண்டு போய்க் காட்டில் விட்டுவிடுங்கள்!’’ என்று உத்தரவிட்டார் மன்னர்.
காட்டுக்குப் போயும் லும்பகன் திருந்தவில்லை. காட்டில் இருந்த படியே அவ்வப்போது நகரத்துக்குள் நுழைந்து திருட ஆரம்பித்தான். திருடுவதும் தப்புவதும் அவனுக்குக் கைவந்த கலையாகிவிட்டது.
ஒரு நாள்... தன் வழக்கப்படி திருடிக் கொண்டு லும்பகன் திரும்பும் நேரம். காவலர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவனை அடித்துத் துவைத்தார்கள் காவலர்கள்.
‘‘அடிக்காதீர்கள்! அடிக்காதீர் கள்! நான் மாஹிஷ்மத மன்னனின் மகன். என் பெயர் லும்பகன்!’’ எனக் கதறினான். அரசன் மகன் என்பதால் கருணையுடன் லும்பகனை விட்டுவிட்டனர் காவ லர்கள்.
அடிபட்ட லும்பகன் திருந்தி னான். ‘நல்லவேளை! அரசன் மகன் என்பதால் விட்டார்கள். இல்லாவிட்டால்? நம்மைக் கொன் றிருப்பார்கள். இனிமேல் திருடக் கூடாது’ எனத் தீர்மானித்தான்.
மனம் திருந்திய லும்பகன் மரத்தடியிலேயே வசித்தான். காட் டில் கிடைத்த கனிகளையும், கிழங்குகளையும் உணவாகக் கொண்டான்.
அடுத்தவர்களை அல்லல்படுத்தி வாழ்ந்து வந்தவனுக்கு, அந்த உணவு போதுமானதாக இல்லை. உடல் மெலியத் தொடங்கியது. குளிர் காலம் வந்தது. நன்கு வெயில் ஏறி, குளிர்போன பிறகே, வெளியே கிளம்பி உணவு தேடுவதை வழக்க மாகக் கொண்டான்.
ஒரு நாள்... லும்பகனுக்கு ஏதும் கிடைக்கவில்லை. அந்தி சாயும் வரை அலைந்து திரிந்தும் ஒரு சில பழங்கள்தான் கிடைத்தன. மரத்தடிக்குத் திரும்பிய லும்பகன், இரவு முழுவதும் குளிராலும் பசியாலும் வாடினான். தூக்கம் வரவில்லை. கிடைத்த ஒரு சில பழங்களையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்தான்.
பொழுது விடிந்தது. ஆகா யத்தில் ஓர் அசரீரி ஒலித்து,
‘‘லும்பகா! நேற்று ஸபலா ஏகாதசி. நீ தங்கியிருந்தது அரச மரத்தின் அடியில். இரவு முழுவதும் நீ தூங்கவில்லை. கிடைத்த பழங்களையும், பசி யோடு இருந்தும் நீ உண்ணவில்லை. பகவானுக்கு அர்ப் பணம் செய்தாய்! உன் பாவங்கள் அனைத்தும் பறந்தோடின. காட்டை விடு. நாடு திரும்பு. அரச பதவி உனக்குத்தான்!’’ என்றது.
அசரீரி சொன்னது போல், லும்பகனின் எதிரில் அவன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், பட்டத்து யானையுடன் வந்தனர்.
‘‘மன்னர் மறைந்து விட்டார். தாங்கள் வந்து தரணி ஆள வேண்டும்!’’ என்று வேண்டி, லும்பகனை பட்டத்து யானையின் மேல் ஏற்றிப் பரிவோடு அழைத்துப்போய், பட்டாபிஷேகம் நடத்தி வைத் தார்கள்.
நல்ல முறையில் நாட்டை நிர்வாகம் செய்த லும்பகன் எதிர்காலத்தில் பிள்ளையிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு வைகுண்டம் அடைந்தான்.
தை மாதம் வரும் தேய்பிறை ஏகாதசியின் மகிமையை விளக்கும் லும்பகன் சரிதம் இது. ஸபலா ஏகாதசி என்னும் இந்த ஏகாதசி பாவங்களை எல்லாம் போக்கும்.
புத்ரதா ஏகாதசி
தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா ஏகாதசி’ எனப்படும். அதன் மகிமை: பத்ராவதி நகரின் அரசர் சுகேதுமான். அவர் மனைவி சம்பகா. ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!’ என வாழ்த்துவது வழக்கம். கலையாத கல்வி, குறை யாத வயது, ஒரு கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணி இலாத உடல், சலியாத மனது, அன்பு அகலாத மனைவி, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாத நிதியம், கோணாத கோல், ஒரு துன்பமும் இல்லாத வாழ்வு, தெய்வபக்தி- என்னும் இந்தப் பதினாறு பேறுகளில் ஒன்பதாவதான ‘புத்திரப்பேறு’ மட்டும், சுகேதுமானுக்கும் சம்ப காவுக்கும் வாய்க்கவில்லை. ‘பிள்ளை இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை’ என்ற சாஸ்திரத்தை உணர்ந்த மன்னர் வருந்தினார்.
இதன் காரணமாக மன வருத்தத்துடன் மன்னர் செய் யும் சிராத்தத்தை அவரின் முன்னோர்கள், துன்பத்துடன் ஏற்றார்கள். இதுவும் மன்னரின் மன வருத்தத்தை அதிகரிக்கச் செய்தது.
‘‘போன பிறவியில் நாம் செய்த தீவினைதான் இந்தப் பிறவியில் இவ்வாறு நம்மைப் படுத்துகிறது’’ என்று புலம்பிய மன்னர், அதை நீக்குவதற்காக யாகம்- ஹோமம் முதலானவற்றைச் செய்தார். பலன் இல்லை. மன்னர் மனம் கலங்கியது. பைத்தியம் பிடித்தவரைப் போலக் குதிரை மீது ஏறி விரைந்தார். ‘எங்கு போகிறோம்? எதற்காகப் போகிறோம்?’ என்பதெல்லாம் மன்னருக்குத் தெரியவில்லை.
பாய்ந்து ஓடிய குதிரை காட் டுக்குள் நுழைந்து அழகான ஒரு குளத்தின் அருகில் நின்றது. குதி ரையை விட்டுக் கீழே இறங்கினார் மன்னர். குளமும் அதைச் சுற்றியிருந்த ஆசிரமங்களும் அலைபாய்ந்த மன்னரின் மனதை அமைதிப்படுத்தின.
ஓர் ஆசிரமத்துக்குள் நுழைந் தார் அரசர். சூரியனைப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த முனிவர்களை வணங்கினார். ‘‘முனிவர்களே! தாங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்?’’ எனக் கேட்டார்.
‘‘மன்னா! நாங்கள் விச்வே தேவர்கள். மாசி மாதம் வரப் போவதை முன்னிட்டு, இங்கே நீராட வந்தோம். இன்று புத்ரதா ஏகாதசி. உபவாசம் இருந்து இன்று மகாவிஷ்ணுவை பூஜை செய்தால், உத்தமமான பிள்ளை பிறக்கும்!’’ என்று சொன்னார்கள் முனிவர்கள்.
அந்த பதிலிலேயே தன் மனக் கவலைக்கான மருந்து இருப்பதை மன்னர் உணர்ந்தார். முனிவர்களுடன் சேர்ந்து தானும் நீராடினார். உபவாசம் இருந்தார். முனிவர்களை வணங்கி நாடு திரும்பினார்.
ஏகாதசி விரதத்தின் பலனாக மன்னரின் மனைவிக்கு மணி வயிறு வாய்த்தது. பத்தாவது மாதத்தில் அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். மன்னர் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்.
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கு இணங்க, ‘‘இந்த நாட்டிலுள்ள அனைவரும் இந்த (புத்ரதா) ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும்!’’ என்று கட்டளையிட்டார் மன்னர். ‘‘என்னைப் போலவே என் மக் களும், குறை இல்லாமல் இருக்க வேண்டும்!’’ என்றும் கூறினார்.
நல்ல பிள்ளையை அளிக் கக் கூடிய விரதம் இது.
ரத சப்தமி விரதம்
ஆ ரோக்கியம், நோய் இல் லாமை, செல்வம், புத்திரப் பேறு, நீண்ட ஆயுள், புண்ணியம், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, சொத்து (நிலம்), தானியம் முதலியவற்றைத் தரக் கூடிய விரதம் இது. மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும்.
வந்த விதம்: ஒரு முறை, ஜோதி வடிவமான ஈஸ்வரன், தான் ஒருவன் மட்டும் சகல உலகங்களுக்கும் பெரிய சுடராகப் பிரகாசிப்பது போதாது என எண்ணினார். உடனே மற்றொரு சுடரை உண்டாக்கினார். அதுதான் சூரியன்.
அப்போது சூரிய மண்டலம் மிகப் பெரிதாக இருந்து, உலகத்துக்கு சுகத்தையும் வெளிச்சத்தையும் தந்தது. ஏராளமான ரிஷிகளும் தேவர்களும் அதிலேயே வசித்து, சூரிய பகவானைத் துதித்து வந்தார்கள்.
யுகங்கள் பல கழிந்தன. திடீரென்று சூரியனின் ஒளி குறைந்தது. தேவர்கள் துயரத்தில் ஆழ்ந்தார்கள். பிரம்மதேவரிடம் போய், ‘‘நான்முகக் கடவுளே! சூரியன் ஒளி மங்கிப் போய் விட் டான். அவன் மறுபடியும் ஒளிபெற வேண்டும். அருள் செய்யுங்கள்!’’ என வேண்டினர்.
பிரம்மதேவர், இந்திரன் முதலா னோர் ஆலோசித்தார்கள். ‘விஸ்வ கர்மாவின் சாணை பிடிக்கும் இயந்திரத்தில் இந்தச் சூரியனைக் கடைந்தால், முன்போல் சூரியன் ஒளி பெற்று விளங்குவான்’ என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி செய்ததும் சூரியன் பழையபடியே ஒளி பெற்று விளங்கினான்.
சூரியனைக் கடைந்த அந்த நாளே ‘ரத சப்தமி’. அதே நாளில் மஹாவிஷ்ணு ஒரு சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை சூரியனுக்குக் கொடுத்தார்.
உண்மையிலேயே சூரியன் வடக்கு நோக்கித் தன் பயணத் தைத் தொடங்குவது இந்த நாளில் தான். இருள் கூட்டி மழை பெய்த மாரிக்காலம் முடிந்து, சூரியன் இப்படி ‘பளிச்’சென்று வெளிப்படுவதையே முன்னோர்கள் நமக்குக் கதையாகத் தந்தார்கள்.
தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ‘ரத சப்தமி’ கொண் டாடப்படுகிறது.
ரத சப்தமி அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். ஒரு வேளை சப்தமி திதி - இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் இருக்கும்படி வந்தால், முதல் நாளிலேயே விரதத்தையும் பூஜை யையும் செய்ய வேண்டும்.
ரத சப்தமியன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலான ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண் ணெய் வார்த்து தீபம் ஏற்ற வேண்டும். சூரிய வடிவத்தை வரைந்து (அல்லது பிம்பமாக வைத்து) பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்தத் தீபத்தை கங்கை-காவிரி முதலான புண்ணிய நதிகளில் விட வேண்டும். இதன் பிறகு பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பணம் முதலானவற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்வதன் மூலம் ஏழு ஜன்ம பாவங்களும் விலகிப் போகும்.
ரத சப்தமி அன்று குளிக்கும் முறை: ஏழு எருக்கு இலைகள், ஏழு இலந்தை இலைகள் எடுத்து ஒன்று சேர்த்து அவற்றுடன் அட்சதை, மஞ்சள்தூள் சேர்த்துத் தலையில் வைத்தபடி பெண்கள் நீராடுவது மரபு.
ஆண்களாக இருந்தால் மேலே சொன்னவாறு எருக்கு, இலந்தை இலைகளுடன் அட்சதை மட்டும் சேர்த்து உச்சந் தலையில் வைத்து நீராடுவது மரபு. பெற்றோர் இல்லாதவர்கள் மேற் சொன்ன இலைகளுடன் பச்சரிசியும் எள்ளும் சேர்த்து வைத்து நீராட வேண்டும்.
இப்போது வரும் ரத சப்தமி (04-02-06), ஆயிரம் சூரிய கிரகணங்களுக்குச் சம மானது. ஆகையால் இதுவரை பார்த்தவற்றில் முடிந்தவரை செய்தால் பன்மடங்கு பலன்கள் உண்டு.
சாவித்ரி கௌரி விரதம்
தை மாதம் பிறந்த மறுநாள்- அதாவது தை மாதம் இரண்டாம் நாள் செய்ய வேண்டிய அற்புதமான விரதம் இது.
விரதத்தன்று அதிகாலையில், காக்காய் கரைவதற்கு முன்னா லேயே எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வரவேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இவ் வாறு (தொடர்ந்து) ஒன்பது நாட்கள் பூஜை செய்து, ஒன்பதாவது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும்.
இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில் (ஒவ் வொன்றிலும்) ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும்.
அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும்.
இவ்வாறு செய்பவர்கள் பேரன்-பேத்தி காலம் வரை சகல விதமான ஐஸ்வரியங்களையும் பெற்று மங்கல வாழ்வு வாழ்வார்கள். அதாவது - நீண்ட ஆயுள், செல்வம் முதலானவற்றைத் தருவதுடன், தவறாத சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம் என்பதே வெளிப்படையான பொருள்.
பெண்களுக்கான இந்த விரதத் தைச் சொன்னவர் மார்க்கண் டேயர். சிவபெருமானால், ‘‘என் றும் பதினாறாக இரு!’’ என வாழ்த்தப்பட்ட மார்க்கண்டேயர் சொன்னதைக் கேட்டவர் - தரும புத்திரர்.
‘‘இறந்தவர்களையும் உயிருடன் கொண்டுவரக் கூடியது இந்த விரதம்’’ என்கிறார் மார்க்கண்டேயர். அத்துடன் ‘‘இந்த விரதத்தைப் பற்றிக் கேட்டவர்களும், கேட்கும் படியாகச் செய்தவர்களும் சிவ சாயூஜ்யத்தை அடைவார்கள்’’ என்றும் கூறியிருக்கிறார்.
தை அமாவாசை
ஆ டி அமாவாசையைப் போல், தை அமாவாசையும் சிறப்பானது. இந்த நாளில் கடல், ஆறு முதலானவற்றில் நீராடி பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது நல்லது. குடும்பத்தைப் பிடித்திருக்கும் தீவினைகள் நீங்கும்.
பைரவ விரதம்
தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. செவ்வாய்க் கிழமையை மங்கல வாரம் என்று அழைப்பார்கள். செக்கச் செவேல் என்று சிவந்த ஒளி வீசுவதால் இந்தக் கிரகம் ‘செவ்வாய்’ எனப் பெயர் பெற்றது. சித்திரை மாத பரணி நட்சத்திரமும், ஐப்பசி மாத பரணி நட்சத்திரமும் பைரவ விரதத்துக்கு உரிய நாட்களாகும்.
வீரபத்திர விரதம்
ம ங்கலவாரம் எனப் படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் கடைப் பிடிக்க வேண்டிய விரதம் இது. வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது நல்லது. வீரபத்திரரைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதம் நீங்காத தடைகளை எல்லாம் நீக்கும். பகையைப் போக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் முதலானவற்றில் இருந்து விடுதலை அளிக்கும். கிரகங்களினால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் விரதம் இது
தை கிருத்திகை!
உ த்தராயண புண்ணிய காலத்தில் வரும் (ஆடிக் கிருத்திகையைப் போல்) தை மாதக் கிருத்திகை மிகவும் விசேஷம். ‘‘தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். முக்தி யையும் கொடுப்பேன்!’’ என்று சிவபெருமானே வாக்குறுதி அளித் திருக்கிறார்.
தைப்பூசம்!
சி வபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் இது. தைப்பூசம், வியாழக்கிழமை, மத்தியான வேளை... ஆயிரம் முகங்களை உடைய பானுகம்பர், ஆயிரம் சங்குகளை ஊதினார். ஆயிரம் தோள்களை உடைய வாணாசுரன் குடமுழவு என்னும் வாத்தியத்தை இசைத்தான். மேலும், ஐந்து வகையான துந்துபி வாத்தியங்கள் ஒலிக்க, கந்தர்வர்கள் கீத ஒலி எழுப்ப, வேத ஒலி முழங்கிட சிவபெருமான் அம்பிகையோடு ஆனந்தத் தாண்டவம் ஆடியருளி னார்.
வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, திருவுடை அந்தணர் மூவாயிரம் பேர் என எல்லோரும் அந்த ஆனந்த நடனத்தை தரிசித்தார்கள். மெய் சிலிர்த்தது. உள்ளம் உருகியது, ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
‘‘சிவபெருமானே! இங்கேயே உமாதேவியருடன் இன்று முதல் எப்போதும் இந்த ஆனந்தத் தாண்டவத்தை எல்லோரும் தரிசிக்கும்படியாக அருள் புரிய வேண்டும்’’ என வேண்டினார் பதஞ்சலி முனிவர்.
சிவபெருமான் உடன்பட்டார். அதன் பின் சிவபெருமானின் உத்தரவுப்படி அங்கேயே பொன்னாலான ஒரு சபை உண்டாக்கப்பட்டது. அன்று முதல் அந்தக் கனக சபையில் (சிதம்பரத்தில்) வியாக்ரபாதர், பதஞ்சலி முதலான எல்லோரும் வணங்க, அம்பிகையுடன் தன் திருநடனக் காட்சியை எப்போதும் தரிசிக்கும்படி தந்தருளிக் கொண்டு இருக்கிறார் சிவன்.
பூச நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். ஞான வடிவம் இவர். பூச நட் சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவகுருவின் அருளைப் பரிபூரணமாகப் பெற லாம். அதுவும் புண்ணிய காலமான தைப்பூசத்தன்று செய்யும் வழிபாடு மிக மிக விசேஷம்!
தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவிடைமருதூரில் தைப்பூசம் விசேஷம். இங்கு கோயிலில் உள்ள சித்த தீர்த்தத்தில் மூழ்கி, வில்வ மரத்தை வலம் வந்து இடை மருதீசனைத் தரிசித்தால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
திருநெல்வேலியில்- அம் பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூரில் தைப் பூசத்தன்று தாமிரபரணியில் நீராடி திருப்புடைமருதூர் ஈசனைத் தரிசிப்பது விசேஷம். அளவிட முடியாத புண்ணியம் கிடைக்கும். மிகவும் அமைதியான தலம் இது. அமைதியைத் தரும் தலமும் இது.
தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படும். இது ஏன் என்பதற்கு ஒரு தகவல்:
சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் துயரத் தில் துடித்தார்கள். அவர் களின் துயரங்களை தேவ குருவான வியாழ பகவான், முருகப் பெருமானிடம் காரண - காரியங்களுடன் விவரித்துச் சொன்னார்.
குறை கேட்ட குமரன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களின் துயரங்களைத் தீர்த்தார்.
தேவகுருவான வியாழ பகவான், இப்படி தன் சீடர்களின் துயரங்களை முருகனிடம் எடுத்துரைத்தது தைப்பூசம் அன்றுதான். அதனால்தான் நம் குறைகளையும் தீர்ப்பதற்காக முருகப் பெருமானிடம், தைப்பூசத் திருநாளில் விசேஷமான கோரிக்கைகளை வைக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.
இன்னொரு தகவலும் உண்டு. அது:
பூசம் நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். அந்த குருவுக்கும் குருவாக இருப்பவர் குமர குருபரனான முருகப்பெருமான். அதனால்தான் உத்தராயணம் பிறந்ததும் புண்ணிய காலமான தை மாதத்திய பூச நட்சத் திரத்தன்று முருகனை வழிபடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
தைப்பூசத்தன்று கும்பல் கும்ப லாகப் பாதயாத்திரை செய்து முரு கன் திருத்தலங்களுக்குச் சென்று விசேஷ பூஜை செய்வார்கள்.
உண்மையான ஆன்மிகவாதிகள் அடுத்தவர்களுடன் எந்தக் கார ணத்தை முன்னிட்டும் சண்டை போட மாட்டார்கள். சண்டை போடும் மற்றவர்களையும் ஒற்றுமைப்படுத்தவே முயல் வார்கள். இதற்காகவே அவதரித்த ஒரு திருவடிவம் ராமலிங்க சுவாமிகள் எனப்படும் வடலூர் வள்ளலார்.
இவர் உத்தர ஞான சிதம்பரம் என்று வடலூரில் ஒரு ஞான சபை யைக் கட்டினார். அதில் 25.1.1872 தைப்பூச நாள் அன்று முதன்முதலாக வழிபாடு தொடங்கியது. வள்ளல் பெருமானால் காட்டப்பெற்ற அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தை எல்லோரும் கண்டு மகிழ்ந்தார்கள். இன்றும் தைப்பூச ஜோதி தரிசனம் வடலூரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தை வெள்ளி!
ஆ டி வெள்ளியைப் போலவே உத்தராயண புண்ணிய கால தொடக்கமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளும் விசேஷம்.
இந்த நாட்களில் அம்பிகையை வழிபடுவது சிறப்பு.
அபிராமி அந்தாதி, மீனாட்சி யம்மை கலி வெண்பா, சௌந்தர்ய லஹரி, லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அம்மைப் பதிகம் முதலி யவற்றில் ஏதாவது ஒன்றைப் பாராயணம் செய்வது நன்மையைத் தரும்.
தியாகராஜ சுவாமிகள்!
அ ன்பு மயமான பக்தி இருந்தால் இந்த கலியுகத்திலும் நேருக்கு நேராக தெய்வத்தை தரிசனம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து நமக்கு வழிகாட்டியவர் சங்கீத மும்மூர்த்திகளில் பிரபலமான சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள். இவரது காலம் 1767-1847.
தியாகராஜ ஸ்வாமி களுக்காக தெய்வம் நடத்திக் காட்டிய திருவிளையாடல்கள் ஏராளம். அவற்றில் ஒன்று:
ஸ்ரீரங்கத்தில் சித்திரை விழா நடந்து கொண்டிருந்தது. தியாகராஜ ஸ்வாமிகள் அப்போது தெற்கு வீதியில் தங்கி இருந்தார்.
அங்கு தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வரும் பெருமாளின் அழகை, ராஜு வெடலெ என்ற கீர்த்தனையில் வர்ணித்துப் பாடினார். ஏராளமான கும்பல். பக்கத்தில் போய் ஸ்வாமியை தரி சிக்க தியாகராஜ ஸ்வாமிகளால் முடிய வில்லை. ஆனால், ஸ்வாமியின் பவனி இவரைக் கடந்து, மேற்கு வீதியில் திரும்பியவுடன், திடீ ரென்று நின்று விட்டது. வாகனத்தைச் சுமந்து வந்த ஆட்கள் என் னென்னவோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. திருஷ்டி கழித்துப் பார்த்தார்கள். பலன் இல்லை.
அப்போது அர்ச் சகர் ஒருவர் மேல் ஆவேசம் வந்தது: ‘‘தெற்கு வீதியில் ஒரு சிறந்த பக்தன் தரி சனம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறான். அவனை அழைத்து வாருங்கள்’’ என்று உத்தரவு வந்தது. உடனே, அங்கிருந்தவர்கள் வேகமாகப் போய் தியாகராஜ ஸ்வாமிகளை அழைத்து வந்தார்கள். அருகில் நின்று அரங்கனின் திருக் கோலத்தை ஆனந்தமாக தரிசித்த தியாகராஜ ஸ்வாமிகள் மனமுருகி தேவகாந்தாரி ராகத்தில் ஒரு கீர்த்தனை பாடி முடித்தார். அதன் பிறகே அரங்கனின் பவனி தொடர்ந்தது. தியாகராஜரின் பக்தியையும் அதற்குத் திருவரங் கன் நடத்திக் காட்டிய லீலையை யும் கண்டு அனைவரும் வியந் தார்கள்.
தியாகராஜ ஸ்வாமிகள் தை மாதம் தேய்பிறை பஞ்சமி அன்று (6.1.1847) தன் வழிபாட்டு தெய்வமான ராமரின் திரு வடிகளை அடைந்தார்.
இதை முன்னிட்டு இப்போதும் வருடா வருடம் திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆராதனை நடை பெற்று வருகிறது.
அதில் கலந்து கொள் வதையும் அங்கு போய் ஒரு பாடலாவது பாடுவதையும் சங்கீத வித்வான்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள்!

Comments