திருப்பதி வேங்கடாசலபதி போன்ற நின்ற திருக்கோலக் கடவுள்கள் தூங்குவதில்லை. அவர்களுக்கு சுப்ர பாதம் பாடுவது அர்த்தமற்றது!’ என்று ஒரு பேச்சாளர் சொன்னார். எல்லாக் கடவுள்களுக்கும் சுப்ரபாதம் சரி தானா?

பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்தபடி ஸ்லோகம் சொல்லலாமா?
-                         
இரண்டு காரியங்களை ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், இரண்டுமே சரியான பலனைத் தராது. மனம் முழுவதையும் இறை பக்தியில் செலுத்தி ஐந்தே ஐந்து நிமிடம் மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள்! அதுவே போதும். பகவான் உங்களிடம் ‘இத்தனை மணி நேரம் என்னைத் துதித்துக் கொண்டே இரு!’ என்று உத்தரவு போடுவதில்லையே!
                        
ஒரு சிலர், வீட்டுக்கு அருகிலேயே சிறு சிறு விநாயகர் ஆலயங்களைக் கட்டிக் கொள்கிறார்களே... இது பலன் தருமா ?
-
‘எனக்கு பக்தி வந்துவிட்டது... தினப்படி நான் ஆராதனம் செய்யப் போகிறேன்!’ என்ற எண்ணம் வந்து விட்டால், எந்த இடத்திலும் எந்த அளவிலும் கோயிலைக் கட்டலாம். நாம் தினப்படி எழுந்ததும், ‘சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே’ என்று சொல்கிறோமே... எதை எழுதினாலும் முதலில் ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு ஆரம்பிக் கிறோமே... மனதில் விநாயகர் இருக்கிறார். சொல்லில் விநாயகர் இருக்கிறார். படத்தில் விநாயகர் இருக்கிறார். ஆத்தங்கரை அருகில் இருக்கிறார். குளக்கரையில் குந்தியிருக்கிறார். வீட்டுக்கு அருகில் இருக்கக் கூடாதா என்ன? தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.
விநாயகர் சுலபமான தெய்வம். அவர் இல் லாத இடமே இல்லை. வீட்டு வாசலில் மாத்திரம் இல்லாமல், எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம். இது நமது பக்தியையும் தேவையையும் பொறுத்தது; நமது பண்பாடும்கூட.
                        
இறைவனை ‘ஸ்வாமி’ என்று ஏன் சொல்கிறோம். வைணவர்கள் கடவுளை ‘உடையவர்’ என்கிறார்களே... அதற்கு என்ன அர்த்தம்?
-
கடவுளை எந்தப் பெயரைச் சொல்லியும் அழைக்கலாம். ‘சொம்’ என்றால் சொத்து. அதை உடையவன் ஸ்வாமி. சொத்து உடையவனாக இருப்பதால் ‘உடையவர்’.
                        
‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் போன்ற பள்ளிகொண்ட கடவுளரை சுப்ரபாதம் பாடி எழுப்புவது சரி. திருப்பதி வேங்கடாசலபதி போன்ற நின்ற திருக்கோலக் கடவுள்கள் தூங்குவதில்லை. அவர்களுக்கு சுப்ர பாதம் பாடுவது அர்த்தமற்றது!’ என்று ஒரு பேச்சாளர் சொன்னார். எல்லாக் கடவுள்களுக்கும் சுப்ரபாதம் சரி தானா?
-                          
சுப்ரபாதம் எல்லாம் நமக்கா கத்தான். கடவுளுக்கு இல்லை. ராமா யணத்தில் விஸ்வாமித்திரர், தனது யாகத்தைக் காப்பாற்றுவதற்காக ராம- லட்சுமணரை அழைத்துப் போகிறார். போய்க் கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் இடத்தில் படுத்து உறங்குகிறார்கள். ரிஷி விழித்துக் கொள்கிறார். ‘இன்றைய பொழுது தொடங்குகிறது. நான் உனக் குப் பணிவிடை செய்ய வேண்டும். எழுந்திரு!’ என்று விடிந்ததை வெளிப்படுத்துகிறார். இதுதான் சுப்ர பாதம். நாம் பாடுவதும் அந்த அர்த்தத்தில்தான். நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் எல்லாம் நம் பாவனை. அவர் நிற்கவுமில்லை, படுக்கவும் இல்லை. உருவமே இல்லாதவர் அவர். நாம்தான் உருவத்தைக் கொடுத்தோம். எங்கும் வியா பித்து இருக்கும் ஒருவரை நாம் எழுப்புகிறோம் என்பதில்லை. அவர்தான் நம்மை எழுப்புகிறார். எனவே நாம் நன்றாக இருக்க வேண்டுமானால், சுப்ரபாதம் பாடத்தான் வேண்டும். அது நமது கடமை!
பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, நாம் வேறு வீட்டுக்குக் குடி போகலாமா?
 
                         
கர்ப்பமாக இருக்கும்போது தம்பதி இருவர் அல்ல, மூன்று பேர் என்று பொருள். பழங்காலத்தில் கல்யாணமானவுடன் கிரகப் பிரவேசம் செய்வது வழக்கம். அப்போது இருவராகத்தான் புது மனை புகுவார்கள். வயிற்றில் குழந்தை இருக்கும்போது புது வீட்டுக்குப் போகக் கூடாது. குழந்தை பெரிதானதும் குடிபோகலாம். ஐந்து மாதம் தாண்டினால்தான் கர்ப்பம் நிலைத்திருக்கும். அதற்கு முன்னதாக கர்ப்பம் இருப்பதை ஒப்புக் கொள்ள முடியாது. அதுவரை புது வீட்டுக்குப் போவதில் தவறில்லை.
வாடகை வீட்டுக்குப் போகும்போது இதை எல்லாம் பின்பற்ற வேண்டியதில்லை. வாடகை வீடு நிரந்தரம் அல்ல; அடிக்கடி மாறிக் கொண்டு இருப்போம். அது கிரகப் பிரவேசமே அல்ல. நமது சொந்த வீட்டுக்குத்தான் கர்ப்பவதியாகப் போகக் கூடாது!
 
தமிழகத்தில் எந்தக் கோயிலிலாவது தல விருட்சமாக சந்தன மரம் உள்ளதா? கோயில் நந்தவனங்களில் கூட சந்தன மரங்கள் வளர்க்கப் படுவது இல்லையே, ஏன்?
 
சில வகை மரங்கள், சில இடங்களில்தான் வளரும். சில மண்ணில்தான் வளரும். திண்டிவனம் போனால் நிறைய புளிய மரங்களைப் பார்க்கலாம். சேலத்துக்குப் போனால் நிறைய மாமரங்கள் காணப்படும். ஓர் இடத்துக்குப் போனால் தென்னை ஜாஸ்தி, இன்னோர் இடத்துக்குப் போனால் தேக்கு. மண்ணின் வளத்தை ஒட்டி வளர்பவை இவை. எனவே, இங்கே சந்தன மரம் இல்லை என்பதோ, சந்தன மரம் இருந்தால் அதை ஸ்தல விருட்சமாக வைக்கக் கூடாது என்பதோ சாஸ்திரத்துக்குத் தொடர்பு இல்லாத விஷயங்கள். ஒவ்வொரு க்ஷேத்திரத்துக்கும் இதுதான் ஸ்தல விருட்சம் என்று நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். கோயிலைச் சுற்றி விருட்சங்கள் இருக்க வேண்டும். இன்ன மரம்தான் என்பது கிடை யாது. ஒரு கோயிலைச் சுற்றி சந்தன மரங்கள் இருந்தால் அப்படியே வைத்துக் கொள்ளலாம். சந்தனம் நமக்கு உபயோகப்படுகிறது, பகவானுக்கும் சார்த்துகிறோம் என்பதால், சந்தனத்தை ஸ்தல விருட்சமாக வைத்தாக வேண்டும் என்பதில்லை. சட்ட திட்டத்தோடு உருவாக்கப்படும் கோயில்களில் ஸ்தல விருட்சத்தை பெரியோர் நிர்ணயிப்பார்கள். தானே தோன்றும் கோயில்களில் சந்தன மரம் இருந்து, அதுவே ஸ்தல விருட்சமாகவும் இருந்திருக்கிறது. மற்றபடி சந்தனம் இல்லையே என்பது குறைபாடு ஆகாது.
 
இறந்தவர்களின் தகனக் கிரியையில் ஒரு சிறு சந்தனக் கட்டையை வைத்து எரிக்கிற வழக்கம் நிலவுகிறதே, இதன் தாத்பரியம் என்ன?
 
                         
இறுதிச் சடங்கு செய்யும்போது ஒரு நல்ல பொருளையும் வைத்து எரிப்போமே என்ற எண்ணத்தில் வந்த வழக்கம் இது. அவரவர் பொருளாதார வசதிப்படி சந்தனத் தின் அளவு மாறலாம். சந்தனத்தை பூமிக்கு இணையாகச் சொல்கிறது சாஸ்திரம். மனிதன் போகும்போது அவன் உடலில் இருக்கும் நீர், நீரோடு சேர்கிறது. அக்னி, ஆதித்யனோடு சேர்கிறது. உடல் பூமியோடு சேர்கிறது. அப்படி பூமியோடு ஐக்கியமாகும்போது பூமிக்கு இணையான சந்தனத்தையும் வைத்து எரிக்கிறார்கள்.
                        
எனக்கு 67 வயது. போலீஸாகப் பணியாற்றியவன். இளமைத் திமிரில் நான் செய்யாத தவறுகள், பாவ காரியங்கள் இல்லை. பிறகு மனமாற்றம் ஏற்பட்டு, அம்பாள் பக்தனாக மாறிவிட்டேன். பல கோயில்களில் அம்பாள் தரிசனம் செய்திருக்கிறேன். தினமும் ஸ்லோகங்களை மனப்பாடமாகச் சொல்வேன். ஆன்மிகப் புத்தகங்கள் பெரும்பாலானவற்றைப் படித்திருக்கிறேன். நான் வேற்று மதத்தைச் சேர்ந்தவன். இறை பக்தி ஏற்பட்ட பிறகு புலால் உண்பதையும் நிறுத்திவிட்டேன். குரு தீட்சை பெறவில்லை என்றால், இவை எதுவுமே பலன் தராது என்கிறார்கள். நான் குரு தீட்சை பெறுவது எப்படி?
 
                         
  நம் முன்னோர் எந்த தர்மத்தில் இருந்தார்களோ, எந்த நடைமுறையைக் கடைப்பிடித்தார்களோ, எந்த மதத்தைப் பின்பற்றினார்களோ அதையே நாமும் பின்பற்றினால், நல்ல கதியை அடையலாம் என்பது இந்து சாஸ்திரத்தின் அடிப்படைத் தத்துவம்.
‘தனக்குரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவன் மோட்சத்தை அடைவான்’ என்று சொல்கிறது பக வத் கீதை. தர்மத்தின் மேல் பிடிப்பும் ஈடுபாடும் ஏற் பட்டு அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால், சிலருக்கு வேறு ஒரு தர்மத்தின்மேல் அதிகப்படியான பிரியம் ஏற்பட்டு அதைப் பின்பற்ற வேண்டும் என்று தோன்றுவது உண்டு. ஒரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு வேற்று மதக் கடவுளை வழிபட்ட பலரைப் பற்றி சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. சபரிமலையில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவருக்குப் பிரசாதம் கொடுப்பது என்கிற நடைமுறை இருக்கிறது.
ஷீர்டி சாயிபாபாவை எந்த மதம் என்று சொல்வது? பார்ப்பவர்கள் எந்த மதமோ அந்த மதத்தைச் சேர்ந்தவர் போல் அவர் தோன்றுவார். மிகுந்த பக்தியோடு, பிற மதத்தை அதன் உண்மையான தத்து வத்தைப் புரிந்து கொண்டு அதற்கு மாறுபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் உங்களுக்கு சாக்தத்தின் மேல், அம்பாள் வழிபாட்டின் மேல் ஈடுபாடு வந்திருக்கிறது என்றால், அது ஏதோ பூர்வ ஜென்ம வாசனையாக இருக்கலாம்.
தன் பரம்பரையையும் பழைய நீண்ட கால நம்பிக்கைகளையும் மீறி இன்னொரு மதக் கடவுளின்மீது உங்களுக்கு ஈடுபாடு வந்திருக்கலாம். ஆதிசங்கரர் ஒரு குருவைத் தேடிக் கொண்டு போனார். எங்கேயோ வடக்கில் ஓர் இடத்தில் கோவிந்த பகவத் பாதாள் கிடைத்தார். குருவாக ஏற்றுக் கொண்டார்.
எல்லோருக்கும் ஒரு குரு அவசியம் தேவை. அம்பாளின் தத்துவத்தை குருவின் வாயால் வாங்கிக் கொள்வதன் பெயர்தான் குரு தீட்சை. சட்ட திட்டத்தோடு உள்ள குரு தீட்சை என்பது மிகப் பெரியது. இப் போது குருவின் வாயால் அம்பாளின் ஏதாவது ஒரு தத்துவத்தை சொல்லக் கேட்டாலே போதும்.
நீங்கள் குருவைத் தேடி அலைய வேண்டியதும் இல்லை. சௌந்தர்யலஹரிக்குப் பன்னிரண்டு விரிவு ரைகள் எழுதப்பட்டு ஒரே புத்தகமாகக் கிடைக்கிறது. அம்பாளின் தனித் தன்மை, பீஜாட்சரம், மந்திரம் ஆகியவற்றை ஒரு குரு, சிஷ்யனுக்குச் சொல்லி அருள வேண்டும். தனது விரிவுரையில் இவை அனைத்தையும் அப்பட்டமாக விளக்கிச் சொல்லியிருந்தார் ஒரு வியாக்கியான கர்த்தா. இதைப் பார்த்த ஒருவர், ‘ஒரு குரு சொல்லி இன்னொருவர் அறிந்து கொள்ள வேண்டியவற்றை இப்படி எழுதலாமா?’ என்று கேட் டார். ‘நான் எழுதியதைப் படித்தார் அல்லவா..? நான் அவருக்கு குரு ஆகிவிட்டேன்!’ என்றார் வியாக் கியான கர்த்தா.
வால்மீகி இருந்தார். ஒரு நாள் அவருக்கு தவம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால், என்ன மந்திரத்தைச் சொல்வது என்று தெரிய வில்லை. அப்போது அங்கே வந்த நாரதர், ‘ராமா’ என்று சொல் என்றார். அவர் குரு ஆகி விட்டார். வால்மீகியும் ராமா, ராமா என்று ஜபித்து பெரிய மகரிஷியாக மாறிவிட்டார்.
ஒரு குருவைக் கண்டுபிடித்து அவருக்குப் பணி விடைகள் செய்து தீட்சை பெறவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். நான் சொன்ன புத்தகத்தைப் படித்தாலே தெளிவு கிடைக்கும். ஒருமித்த மனதோடு அம்பாளை நினைத்து வழிபடுங்கள், நீங்கள் விரும்பும் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்!
                        
செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் முடி வெட்டிக் கொள்ளக் கூடாது என்கிறார்களே... ஏன் ?
-                        
  முடி, உடலின் பகுதிகளில் ஒன்று. நாம் பிறக்கும்போதே இருப்பது அது. பல்கூட அப்புறமாகத்தான் முளைக்கும். மீசை பிறகுதான் வரும். கடைசிக் காலம் வரை முடி நம்மோடு இருக்கிறது. அதனால்தான் பழைய காலத்தில் இருந்தவர்கள் முடி வளர்த்தார்கள். நம் உடற்பகுதிகளை எந்தெந்த நாட்களில் இழக்கலாம் என்பதற்கு சாஸ்திரத்தில் விஸ்தாரமான விளக்கங்கள் இருக்கின்றன. நாள், கிழமை, நட்சத்திரம் போன்றவை எல்லாம்கூட அதில் இருக்கும்.
காலப்போக்கில் கிழமையை மட்டும் பார்த்தால் போதும் என்றாகி விட்டது. எனவே, இன்னின்ன கிழமைகளில் முடி வெட்டக் கூடாது என்பதைப் பின்பற்றுகிறோம். ‘குஜதின மதிஷ்டமிதி’ என்று ஜோதிட சாஸ்திரம் இதைக் குறிப்பிடும்.
செவ்வாய், சனி ஆகியவை குஜ தினங்கள். நல்ல காரியம் செய்வதைத் தவிர்க்க வேண்டிய தினங்கள். வெள்ளிக் கிழமை அன்று நல்ல நாள். ஆனாலும் ஒரு நல்ல நாளிலா இதைச் செய்வது என்கிற சிந்தனையில் வெள்ளியும் அதில் சேர்ந்து கொண் டது. வெள்ளிக்கிழமை முடி வெட்டக் கூடாது என்பது எல்லோருக்கும் பொருந்தாது. தகப்பனார் இல்லாதவர்கள், வெள்ளிக் கிழமை முடி எடுக்கலாம். அவர்களும் செவ்வாய், சனிக் கிழமைகளில் முடி வெட்டிக் கொள்வது கூடாது.

Comments