ஸ்ரீ ராமானுஜரின் மாமாவான திருமலைநம்பி திருமலையில் தங்கியிருந்து திருமாலின் திருமஞ்சனத்துக்காக தினமும் பாபநாச தீர்த்தத்திலிருந்து மண் குடத்தில் அபிஷேக தீர்த்தம் கொண்டு வருவார். ஒரு நாள் தலையில் சுமந்து வந்த குடத்தின் கனம் குறைந்தாற் போலிருந்தது. இறக்கிப் பார்த்தார். குடம் காலியாக இருந்தது. காரணம், குடத்தில் சிறு ஓட்டை. திருமலை நம்பி சுற்று முற்றும் பார்த்தார். சற்றுத் தூரத்தில் ஒரு வேடுவச் சிறுவன் வில்லும் கையுமாக நின்று அவரைப் பார்த்துக் குறுநகை புரிந்தான்.
‘மீண்டும் பாபநாச தீர்த்தம் சென்று அபிஷேகத் தீர்த்தம் கொண்டு வரப் புறப்பட்டால் திருமஞ்ச னத்துக்குக் காலதாமதமாகி விடும்!’ என்று திரு மலைநம்பி கலங்கினார். அந்தச் சிறுவன் அவர் அருகே வந்து, ‘‘தாதா! கவலை வேண்டாம். அரு கில் ஆகாச கங்கை தீர்த்தம் இருக்கிறது. வாருங்கள், காண்பிக்கிறேன்!’’ என்று சொல்லி அவரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றான். ஆகாச கங்கை இருக்கும் பகுதியை அடைந்தவுடன் சிறுவன் மாய மாக மறைந்து விட்டான். அப்போதுதான், வேடனாக வந்து தம்மை ஆட்கொண்டது திருமலை கோயிலில் குடியிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளே என்பதைப் புரிந்து கொண்டார் திருமலைநம்பி. திருமஞ்சனத்துக்காக திருமலைநம்பி தொலைதூரம் சென்று தீர்த்தம் கொண்டு வரும் கஷ்டத்தைக் குறைக்கவே எம் பெருமான் இப்படி விளையாடினார் என்பதை உணர்ந்த திருமலைநம்பி புளகாங்கிதம் அடைந்தார்.
பகவானே அன்போடு ‘தாதா’ என்று அழைத்ததால் திருமலைநம்பிக்கு ‘தாதார்யர்’ என்ற சிறப்புப் பெயர் ஏற் பட்டது. இன்றும் இவருடைய வம்சத்தினர் ‘தாதாசார்யர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
எந்த புத்தி நல்ல புத்தி?
மா ணவர்களின் புத்திக் கூர்மையை சிலா புத்தி, தாரு புத்தி, வேணு புத்தி என்று மூன்று வகை (சிலா- சிலை; தாரு-மரம்; வேணு-மூங்கில்) படுத்தலாம்.
கல்லை உளியால் கொத்தி, செதுக்கிக் கடும் உழைப்பில் சிலையை உருவாக்குவதைப் போன்று மிகவும் அக்கறையுடன் பல முறை எடுத்துக் கூறிய பின் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வது சிலா புத்தி.
அதை விட சுலபமாகவும் சுத்தமாகவும் மரத்தில் செய்ய முடியும். அதே மாதிரி ஒரு தடவை ஒரு விஷயத்தைக் கூறி னால், அதை உள்வாங்கிக் கொள்ளும் புத்தி-தாரு புத்தி.
மூங்கிலை உளியால் ஒரு பக்கம் பிளக்கும் போதே மறுபக்கம் தானே பிளந்து கொள் ளும். அது போல், ஒரு விஷயத்தைத் தெளிவாக்கும்போதே, அதன் முழு விவரங்களையும் இன்னதென நன்கு அறிந்துகொள்ளும் சூட்சும புத்திக்கு வேணு புத்தி என்று பெயர்.
Comments
Post a Comment