வேதங்களும் வாழ்க்கையும்

சா ந்தி கல்யாணத்தில் ஏற்பட்ட சந்திப்பு, மணமகளை கர்ப்பவதியாக மாற்றிவிடும். இப்போது அவள், வயிற்றில் குழந்தை யோடு இருப்பவள். தொண்ணூறு நாட்கள் தாண்டிவிட்டால் கர்ப்பம் நிலைத்துவிடும். அதன் பிறகு ‘பும்ஸுவனம்’ என்கிற சம்ஸ்காரத்தைப் பரிந் துரைக்கிறது தர்மசாஸ்திரம் (பும்ஸுவனம் வ்யக்தே கர்பே திஷ்யேண).
குழந்தையை உருவாக்குவதில் இருவரின் சம அளவிலான பங்கும் தேவைப்படுகிறது. உருவாகி வளரும் தறுவாயில் பீஜத்திலும் (ஆணின் விதை) சோணிதத்திலும் (பெண்ணின் விதை) இருக்கும் இடையூறுகளை அகற்ற இந்த சம்ஸ்காரம் உதவும். குழந்தையின் உடல், உள்ளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஆதாரமான சுக்ல-சோணிதங்களான மூலப் பொருளில் இருக்கும் எல்லாக் குறைபாடு களும் பும்ஸுவனத்தில் அகன்றுவிடும் என்கிறது தர்மசாஸ்திரம் (பைஜிகம் கார்பிகம் ச ஏனோ அபமிருஜ்யதே).
விளைநிலத்தை உழுது பயிரிட வேண்டும். விதையை விதைக்க வேண்டும். விதைகளில் குறை இருக்கக் கூடாது. பயிரின் செழிப்பான வளர்ச்சிக்கு இவை உதவும் என்பது நாம் அறிந்ததே. அது சம்ஸ் காரமாக மாறும்போது நம்பிக்கையான வளர்ச்சிக்கு உத்தரவாதம் கிடைத்து விடுகிறது. நான்காவது மாதத்தில் பும்ஸுவனம் செய்ய வேண்டும் (த்ருதீயே வா சதுர்த்தேவாமாஸி பும்ஸுவனம்).
கர்ப்பம் நிலைப்பதற்கு மூன்று மாதங்கள் தேவைப்படுவதால், நான்காவது மாதத்தில் பும்ஸுவனம் நடத்துவது நம்பிக்கைக்கு உரியது. கர்ப்பம் இருந்தால், பும்ஸுவனம் செய்ய வேண்டும். இல்லாமல் செய்வது வீண். ஆகையால் கர்ப்பம் நிலைத்த பிறகு செய்வது பொருத்தம் என்பது ரிஷி களின் கருத்து.
நட்சத்திரங்களில் ஆண்-பெண் பாகுபாடு உண்டு. ஆண் நட்சத்திரங்களில் செய்வது சிறந்தது. (யத: பும்ஸாநக்ஷத்ரேண சந்திரமாயுக்த: ஸ்யாது.) சந்திரன், புருஷ நட்சத்திரத்தோடு விளங்கும் வேளையில் அது நடைபெற வேண்டும்.
பும்ஸுவனம் என்ற சொல்லுக்கு ஆண் குழந்தையை ஈன்றெடுப்பவள் என்று பொருள் (புமாம்ஸம் ஸ¨யதே).
குலம் வளர ஆண் குழந்தை தேவை. ஆகையால், அதற்கு முன்னுரிமை. பெண் குழந்தையும் தேவை. குலத்தை வளர்ப் பதில் பெண்ணுக்கும் பங்கு உண்டு. தனது வம்ச விருத்திக்கு முதலில் ஆண் குழந்தையும் பிறரது வம்ச விருத்திக்கு உதவ ஒரு பெண் குழந்தை யும் தேவை என்கிறது தர்மசாஸ்திரம்.
இரு வம்சங்களின் வளர்ச்சியிலும் ஈடுபாடு உடையது நமது கலாசாரம். மாமன், அத்தை என்ற உறவுகள் இரு வம்சத்தின் பிணைப்புக்கு எடுத்துக் காட்டு. கல்யாணத்தில் தாய்மாமனுக்குத் தனி மரி யாதை. குழந்தை பிறந்து காப்புக் கல்யாணத்தில் அத்தைக்குத் தனி மரியாதை. இவை நமது கலா சாரத்தின் தனிப்பொலிவுக்குச் சான்று.
அழகான கண்கள்; ஆனால், பார்வை இல்லை. நல்ல அமைப்போடு இணைந்த காதுகள்; ஆனால், கேட்காது. நாக்கு ஆறு சுவைகளையும் சுவைக்கிறது; ஆனால், பேசாது. கால்கள் இருக்கின்றன; நடக்கும் தகுதி இல்லை. கைகள் இருக்கின்றன; ஆனால், செயல்படா. இப்படி... புலன்கள் இருந்தும் திறமை அற்றவையாக இருப்பது உண்டு. பிறப்பிலேயே இந்த ஊனங்கள் தென்படுவதால், மருத்துவரும் கைவிரித்து விடுவார். வளர்ந்த பிறகும் அவற்றைச் சரி செய்ய மருத்துவரால் இயலாது. அந்தக் குறைகள் பும்ஸுவனத்தில் அகற்றப்படுகின்றன. ‘ஏன:’ என்ற சொல்லுக்குப் பாவம் என்று பொருள். கண்ணுக்குப் புலப் படாத குறைகளை பாவம் என்று தர்மசாஸ்திரம் குறிப்பிடும். உடல் உறுப்புகளில் பாவம் பற்றிக் கொண்டு அலைக்கழிக்கும் என்று வேதம் கூறுகிறது (அங்கே அங்கே வை புருஷஸ்ய பாப்மோபச்லிஷ்ட:).
தாய்- தந்தையின் தவறு குழந்தையிடம் குறையாகத் தென்படும். அதை நிவர்த்தி செய்ய பும்ஸுவனத்துக்கு மட்டுமே தகுதி உண்டு. அதை அலட்சியப் படுத்துவது தாய்க்கும் சேய்க்கும் தகப்பனுக்கும் வருத்தத்தை விளைவிக்கலாம். பீஜத்தில் இருக்கும் குறைபாடு குழந்தையில் தென்படும் என்று ஆயுர்வேதம் எச்சரிக்கிறது (பீஜோபதப்ததா).
ப்ரமேஹம் (சர்க்கரை வியாதி), ரக்த ஸம்மர்த்தம் (ரத்த அழுத்தம்) போன்ற பிணிகள், மாலைக்கண், அலித் தன்மை, சொட்டை விழுதல் முதலிய குறைபாடுகள் விதையின் எதிர்விளைவுகள் என்று ஆயுர் வேதம் குறிப்பிடும். பிறக்கும் குழந்தை பொலிவுடன் திகழ, தாய்- தந்தையின் நடத்தையும் இயல்பும் பெருமைப்படத் தக்க தாக இருக்க வேண்டும். பூச நட்சத்திரத்தில் பும்ஸுவனம் செய்ய வேண்டும் ‘வ்யக்தே கர்பே திஷ்யேண’ என்கிறார் ஆபஸ்தம்பர். குழந்தைக்கு வீரத்தையும் ஆண்மையையும் புலனடக்கத்தையும் பூசம் என்கிற புருஷ நட்சத்திரம் அளிக்க வல்லது என்பது வேத வாக்கு (திஷ்யாயஸ்வாஹா ப்ரம்மவர்சஸாய ஸ்வாஹா... ஸ¨விர் யஸ்யபதய: ஸ்யாம).
புலன்களை அடக்கும் திறன், ஆண்- பெண் இருவருக்கும் பிறக்கும்போதே முளைக்க வேண்டும். அவர்களது வாழ்க் கைக்குச் செழிப்பூட்டுவது மட்டுமல்லாமல், சங்கடங்களைச் சந்திக்கும் வேளையில் சலிப்பு இல்லாமல் முன்னேற உதவும். சட்டியில் இருந் தால் அகப்பையில் வரும். பிறப்பிலேயே இருந்தால்தான் பிற்பாடு வளரும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
ஆலம் மொட்டை சிதைத்து அரைத்து அதன் பாலை அவளது மூக்கு வழியாக செலுத்த வேண்டும். ஆயுர்வேதத்தில் ‘நஸ்யம்’ என்ற முறைப்படி உட்கொள்ள வேண்டும். அந்தப் பால் மருத்துவ குண முடையது. ஆண்-பெண் சந்திப்புக்குப் பிறகு ஒரு வார காலம் ‘தயிர்’ போன்ற வடிவத்தை அடையும் அவர் களது வீர்யங்கள். அதற்கு ஆயுர்வேதத்தில் ‘கலலம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அந்த நிலையில் ஆலம் மொட்டின் பால், ஆணாக மாற்றும் தகுதி படைத்தது என்று ஆயுர்வேதம் கூறும். ஆயுர்வேதம், சந்தித்த ஒரு வாரம் கழித்து பும்ஸுவனம் செய்யச் சொல்லும். ஆணாகவோ பெண்ணாகவோ மாறுவதற்கு முன்னமேயே பும்ஸுவனம் வேண்டும் என்று சொல்லும். ஆணும் பெண்ணும் நமக்குத் தேவை. பாகுபாடில்லை என்ப தால் இயற்கையில் நுழைய மனமில் லாமல் கர்ப்பம் நிலைத்த பிறகு பண்ணினால் போதும் என்று பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம். இருவரிடமும் சம நோக்கு இருக்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் எண்ணம்.
ஆலம் மொட்டு மட்டும் போதாது. அதன் கீழே கோலி வடிவில் தொங்கிக் கொண்டு இருக்கும் ஒரு சிறு பகுதியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தறியில் இருந்து நேரடியாக வந்த புதுப் புடைவை வேண்டும். அம்மியில் வைத்து ஆலம் மொட்டை உருண்டைகளோடு சேர்த்து அம்மிக் குழவியை இரு சிறு பெண் குழந்தைகள் எதிரும் புதிருமாக இருந்து ‘‘ஆண் பிள்ளை, ஆண் பிள்ளை’’என்று அவர்களைச் சொல்ல வைத்து அவர்களே அதை அரைக்க வேண்டும். அரைத்த ஆலம் மொட்டை புதுப்புடைவையின் தலைப்பில் கட்ட வேண்டும். கணவர், மல்லாந்து இருக்கும் அவள் வலது மூக்கு துவாரத்தில் தன் கட்டை விரலால் அழுத்தி பாலை விட வேண்டும். தும்மல் வராமல் பார்த்துக் கொள்வதற்கு பெண்ணின் மூக்கைக் கசக்கிவிட வேண்டும். ‘பும்ஸுவனமஸி’ என்கிற மந்திரத்தைக் கணவன் சொல்ல வேண்டும்.
மனமும் செயலும் ஆண் குழந்தை வேண்டும் என்கிற விருப்பத்தில் திளைத்திருப்பதாலும் கூடியிருக்கும் வேத வித்துகளின் ஆசியாலும் பெரி யோர்களது அனுக்கிரகத்தாலும் அவர்களது எண்ணம் நிறைவேறிவிடும் என்கிறது தர்மசாஸ்திரம்.
படைப்பின் ரகசியங்கள் புலன்களுக்கு எட்டாதவை. புலன்களால் அறியப்படும் அறிவு மிக மிகக் குறைவு. புலன்களுக்கு எட்டாத விஷயங்கள் ஏராளம் ப்ரத்யக்ஷம் அல்பம். அனல்பம் அப்ரத்யக்ஷம் என்று ஆயுர் வேதம் கூறும்.
கண்கள் உருவத்தை நமக்கு விளக்குகின்றன. கண்களின் பார்க்கும் பகுதி அதாவது புலன், கண்களுக்குப் புலப்படாது. செயல்பாட்டின் வாயிலாக அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. புலன்க ளுக்கு எட்டாத விஷயங்களை வேதம் விளக்கும். வேதக் கருத்துகளைக் கற்று உணர்ந்த ரிஷிகளின் பரிந்துரையே பும்ஸுவனம்.
மாற்றுக் கலாசாரத்தால் கலங்கிய மூளை, வேதக் கருத்துகளை வாங்கிக் கொள்ள மறுக்கும். வாழ்க்கைக்கு யுக்தி வாதம் பயனளிக்காது. குழந்தையை ஈன்றெடுப்பது பெற்றோரின் மகிழ்ச்சிக்காக மட்டும் அல்ல.நாட்டை நடத்திச் செல்ல நல்லவனை அளிப்பது ஆகும் என்கிற கருத்தை வேதம் விளக்குவதைக் கவனிக்க வேண்டும்.
குடிமகன் நாட்டைக் காக்கும் வீரனாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறது வேதம். ஆஸ்மின் ராஷ்ட்ரேராஜன்ய... சூரோ மஹாதோஜாயதாம்.
பொறுப்பு உடையோர், பொறுமையாக ‘பும்ஸுவனம்’ என்கிற சம்ஸ்காரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

Comments