காகபுசுண்டர்

ஞா னத்தையும் பக்தியையும் உருவகக் கதையின் மூலம் சொன்ன காகபுசுண்டர், அற்புதமான ஏழு கேள்வி களுக்குத் தெளிவாக விளக்கங்களைச் சொல்லி நமக்கு வழிகாட்டுகிறார். அந்த ஏழு கேள்விகள்:
1. கிடைத்தற்கு அரிய பிறவி எது?
2. துன்பங்களில் கொடுமையான துன்பம் எது?
3. இன்பங்களில் மேலான இன்பம் எது?
4. சாதுக்கள் - தீயவர்களின் இயல்பு என்னென்ன?
5. மிகப் பெரிய புண்ணியம் என்று வேதங்கள் எதைச் சொல்கின்றன?
6. பாவங்களில் கொடிய பாவம் எது?
7. எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் மனநோய்கள் எவை?
_ இவற்றுக்கு காகபுசுண்டர் கூறிய பதில்களைப் பார்ப்போம்.
1. பிறவிகளில் உயர்ந்தது, கிடைத்தற்கு அரியது மனிதப் பிறவியே. இதற்கு ஈடாக எந்தப் பிறவியையும் சொல்ல முடியாது.
‘ஜந்தூனாம் நரஜன்மம் துர்லபம்’, ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’, ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று வேதங்களும் அனுபவப்பட்ட ஞானிகளும் மனிதப் பிறவியின் மேன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அசை பவை - அசையாதவை ஆகிய ஜீவராசிகள் எல்லாம், மானிடப் பிறவியையே வேண்டுகின்றன. சொர்க்கம்- நரகம், அதற்கும் மேலாக முக்தி எனப்படும் அனைத்துக்கும் மனிதப் பிறவியே படிக்கட்டாக உள்ளது. தெளிந்த நல்லறிவு, பக்தி, வைராக்கியம் ஆகியவற்றைத் தரக் கூடியது மனிதப் பிறவியே. இவ்வளவு உயர்ந்த மனிதப் பிறவி கிடைத்தும்; பொறி புலன்களால் அனுபவிக்கும் சுகங்களையே நாடி, ஓடித் திரியும் மனிதர்களை என்ன சொல் வது? நம்மிடம் இருக்கும் பொருள், எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதன் அருமை தெரியாமல் அலட்சியப் படுத்துவோம். உதவாததை நோக்கி ஓடு வோம். அருமையான மனிதப் பிறவி கிடைத்தும் இப்படிச் செய்பவர்கள், கையில் இருக்கும் வைரக்கல்லை எறிந்துவிட்டு, தெருவில் கிடக்கும் உடைந்துபோன மண்பானைத் துண்டுகளைப் பொறுக்குபவனுக்கு இணையாவார்கள்.
2. மிகவும் கொடுமையான துன்பம் வறுமையே. அந்த வறுமையும் இளம் வயதில் ஒருவனை பாதித்தால், வேறு கொடுமையே வேண்டாம். அதனால்தான் ‘வறுமை கொடிது’ என்ற ஒளவையார், அதைத் தொடர்ந்து, ‘அதைவிடக் கொடுமை இளமையில் வறுமை’ என்றார். இளமை வேகம், துடிக்கும் ரத்தம் எதையெதையோ ஆசைப் படும். அந்த ஆசைகள் நியாயமானவையாக இருந்தா லும், வறுமையின் காரணமாக அவை நிறைவேறாது. தவறுகள் செய்யவும் தீயவற்றில் தீவிரமாகவும் தூண்டு வது வறுமை. கொடுமையான துன்பம் வறுமையே.
3.நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பதே மேலான இன்பம். ‘பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்’ என்பது முதுமொழி. தன் வேண்டுதலைச் சொல்லும் போது, ‘நல்லோர் இணக்கமும்’ என்கிறார் பட்டினத் தார். ‘சத்சங்கம்தான் உயர்ந்தது’ என்பது ஆதிசங்கரர் மொழி. நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பதைப் பற்றிப் பழந்தமிழ்ப் பாடல் ஒன்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது.
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதும் நன்றே
எனவே, நல்லவர்களின் சேர்க்கைதான் என்றும் மேலான இன்பம்.
4. முதலில் சாதுக்களின் இயல்பைப் பார்ப்போம்.
மனம், சொல், செயல் ஆகியவற்றால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதே சாதுக் களின் இயல்பு. இவர்கள் பிறருக்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்வார்கள். அடுத்தவர்களின் நல்வாழ்வுக்காகத் தங்களை இழக்கத் துணிவார்கள். மறந்தும் பிறன் கேடு சூழான் என் பதற்கு இணங்கப் பிறருக்குக் கெடுதல் நினைக்க மாட்டார்கள். இவர்களால் உலகம் வாழும்.
ஆனால், தீயவர்கள் இயல்பு இதற்கு எதிர்மாறானது. மனம், வாக்கு, செயல் ஆகியவற்றால் அடுத்தவர்களுக்குக் கெடுதல் செய்வதே இவர்களின் இயல்பு. இவர்கள் தங்கள் நலத்துக்காக மட்டுமல்ல; தங்களுக்கு பலன் இல்லை என்றாலும்கூட, அடுத்தவர்களுக்குத் துன்பம் செய்வார்கள். பிறரது துயரத் தில் மகிழ்வார்கள். இவர்களால் உல கம் உருப்படாது.
5. எல்லா வேதங்களும் ஒட்டு மொத்தமாகச் சொல்லும் மிகப் பெரிய புண்ணியம் அஹிம்சை.
6. அடுத்தவர்களைத் தூற்று வதே கொடிய பாவமாகச் சொல்லப்படுகிறது. சிவனையும் குரு வையும் தூற்றுபவர்கள் ஆயிரம் பிறவிகள் தவளையாகப் பிறப்பார்கள். பிரம்ம ஞானிகளைத் தூற்றுபவர், பலவிதமான கொடிய துன்பங்களை அனுபவித்து, பிறகு காக்கையாகப் பிறப்பர். தற்பெருமை பேசி வேதங் களைத் தூற்றுபவர்கள் கொடுமையான நரகத்தில் விழுந்து உழல்வார்கள்.
நல்லவர்களை இகழ்வதில் மகிழ்ச்சி அடைப வர்கள், கோட்டானாகப் பிறப்பார்கள். அறியாமை, மயக்கம் என்னும் இருளில் மூழ்கிக் கிடக்கும் அவர்களுக்கு, ஞானம் என்ற சூரிய ஒளி கிடைக்கவே கிடைக்காது. அடுத்தவர்களைத் திட்டு வதே முழுநேரத் தொழில் என்று இருப்பவர்கள், வெளவால்களாக பிறப் பார்கள்.

7. மனநோய்கள் பல உண்டு. நான் என்னும் அகம்பாவம் - சொறி, சிரங்கு. அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவது - அரிப்பு. துன்பமும் மகிழ்ச்சியும் - கழுத்து நோய். பிறரது மகிழ்ச்சியைக் கண்டு வெதும்புவது - காசநோய். கொடுமை, வஞ்சனை - குஷ்ட ரோகங்கள். திமிர் பிடித்து அகங்காரமாகத் திரிவது - அதிகமான துயரத்தைத் தரும் மூட்டு வலி. டம்பம் (பந்தா), வஞ்சனை, திமிர், தற்பெருமை இவையெல்லாம் - நாக்கில் புழு வருவது என்னும் நோய். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூன்று ஆசைகளும் - சுலபத்தில் நீங்காத அழுத்தமான நோய்கள். பொறாமையும் விவேகம் இல்லாமையும் இரு விதமான ஜுரங்கள். இவற்றைத் தவிர துயரம், மகிழ்ச்சி, அன்பு, பயம், பிரிவைத் தாங் காத தன்மை முதலான மன வியாதி களும் உண்டு.
இந்த வியாதிகள் எல்லோருக்கும் இருக் கும். ஆனால், இவை தனக்குள் இருப்பது, சிலருக்குத்தான் தெரியும் (இன்ன வியாதி என்று தெரிந்தால்தானே அதற்கான மருந்தை எடுத்துக் கொள்ள முடியும்? வியாதி இருப்பதையே உணராத வர்களுக்கு, மருந்து பற்றி எப்படித் தெரியும்? பல்லா யிரக்கணக்கான மக்களின் நிலை இதுதான்.)
இவ்வாறு மனோ வியாதிகளைப் பற்றி விவரித்த காகபுசுண்டர், அவற்றுக்குரிய மருந்துகளையும் குறிப் பிடுகிறார்: கட்டுப்பாடான வாழ்க்கை, நற்செயல்கள், நன்னடத்தை, துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல், தெளிந்த நல்லறிவு, யாகம், ஜபம், தானம் முதலானவையே நம் மன வியாதிகளைத் தீர்க்கக் கூடிய மருந்துகள்.
நம் உள்ளத்தில் உள்ள தீராத வியாதிகள் தீர்வதற் காக காகபுசுண்டர் சொன்ன மருந்துகளை நாம் உட்கொண்டால், நம்முடன் சேர்ந்து நம் சந்ததியும் நல்வாழ்வு பெறும். காலம் பல கடந்த காகபுசுண்டர் இவ்வாறு மக்கள் குலம் மேன்மை அடைய, பலப்பல உபதேசங்கள் செய்திருக்கிறார்.
காகபுசுண்டரின் ஸித்தி: காகபுசுண்டர் திருக் கயிலை சென்று கயிலைநாதனை தரிசித்து, ‘‘ஸ்வாமி! நான் முக்தி பெற வேண்டுகிறேன்!’’ என்றார்.
‘‘காகபுசுண்டா! இதோ, எதிரில் இருக்கும் பொய் கையில் மூழ்கு! நீ எங்கு கரை ஏறுகிறாயோ அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்!’’ என்று சிவபெருமான் அருளினார்.
அதன்படி பொய்கையில் மூழ்கிய காகபுசுண்டர் சீர்காழி தாலூகாவில் உள்ள ஆச்சாள்புரம் என்னும் திருத் தலத்தில் எழுந்தார். இங்கு திரு ஞான சம்பந்தருக்குத் திருமணம் நடந்தபோது உருவான ஜோதியில், அங்கிருந்த அனைவரும் கலந்து முக்தி அடைந்தார்கள். அவ்வாறு முக்தி பெற்றவர்களில் காகபுசுண்டரும் ஒரு வர். இங்கு காகபுசுண்டர் வழிபட்ட சிவனும் அம்பாளும் யோகீஸ்வரர், யோகாம்பாள் என்னும் திருநாமங்களில் எழுந்தருளி இருக்கிறார்கள். ஜடாமுடியுடன் காக முகம் கொண்டு, பத்மாஸன திருக்கோலத்தில் காகபுசுண்டரும் எழுந்தருளி இருக்கிறார்.
‘காகபுசுண்டரின் மனைவி பகுளாதேவி. இந்த தம்பதி, கள்ளக்குறிச்சி வட்டம் தென் பொன்பரப்பு கிராமத்தில் இருக்கும் ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் கோயிலில் ஜீவசமாதி அடைந்தார்கள்.’ என்று மற்றொரு தகவலும் உண்டு.
இவற்றில், ஏதாவது ஓர் இடத்தில்தான் காகபுசுண்டர் ஸித்தி அடைந்திருக்க முடியும். அது எந்த இடம்? குழம்ப வேண்டியது இல்லை. பல இடங்களில் ஸித்தி அடைந்த ஸித்த புருஷர்களைப் பற்றிய தகவல்களும் உண்டு. ‘ஸித்த புருஷர்(கள்) எங்கு ஸித்தி அடைந்தார்?’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாம். அவர்கள் ஸித்தி அடைந்ததும், ஸித்தி அடைய வேண்டியதும் நம் உள்ளங்களில்தான். காகபுசுண்டரும் நம் உள்ளத் தில் ஸித்தி அடைந்ததாகவே கொள்வோம்.
காரைக்காலில் இருந்து 7 கி.மீ. தூரத்திலிருக்கும் திருமலைராயன்பட்டினம் என்னும் ஊரில் காகபுசுண் டர்-பகுளாதேவிக்கு ஓர் அற்புதமான ஆலயம் அமைந் துள்ளது. இதுவே அருள்மிகு பகுளாதேவி உடனுறை காகபுசுண்டருக்கு முதன் முதலில் தோன்றிய ஆலயம். அதுவும் நமது தென்னாட்டிலேயே அமைந்திருப்பது நமது புண்ணியமே ஆகும்.
மேற்கண்ட இடங்களில் காக புசுண்ட ரின் அவதாரத் திருநாளான பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று விமரிசையான வழிபாடுகள் நடை பெறுகின்றன. நாமும் அந்த வழிபாட் டில் கலந்து கொண்டு க¬(ற)ரயில்லா கருணை பெறுவோம்.


Comments