கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?

ஸ்ரீ மத் ராமாயணத்தில் உத்தர காண்டத்தில், கலியுகத்தில் என்னென்ன நடக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது. அவை:

1. மனம் போனபடி நடப்பதே வழி என்பார்கள்.
2. ஒவ்வொருவருக்கும் தனித் தனி நியாயம்.
3. நீதி நூல்கள் படிக்கக் கிடைக்காது.
4. அறங்கள், தீயவர்களின் தூண்டுதல் மற்றும் பேராசையில் நடத்தப்படும்.
5. சுய விளம்பரம் செய்பவன் அறிவாளி ஆவான்.
6. போலிகள் புகழும் பெருமையும் பெறுவார்கள்.
7. உள்ளன்று வைத்துப் புறம் பேசுவோர் மகான்கள் ஆவார்கள்.
8. ஊரார் பொருளைக் கொள்ளையடிப் பவர்கள் கெட்டிக்காரர்கள் ஆவர்.
9. நெறிப்படி நடப்பவர் அறிவிலிகள்.
10. துறவிகள் அநியாயமாக செல்வம் சேர்ப்பர்.
11. ஞானம், தவம் ஆகியவை கேலிக்குள்ளாகும்.
12. பொய் பேசுபவர்கள் புலவர்கள்.
13. உண்மையாக உழைப்பவர்கள் ஏழையாக இருப்பார்கள்.
14. தற்பெருமைக்காக தானம் வழங்குவர்.
15. ஆயுதங்கள் முக்கியமாகும்.
16. விரசமான நூல்கள் பெருகும்.
17. மக்கள் உடலை வளர்ப்பார்கள்; உறுதியை மதிக்க மாட்டார்கள்.
18. மனைவி வந்த பின் பெற்றவர்களை அலட்சியப்படுத்துவார்கள்.
                       
சர்வ யக்ஞ பீடம்!
ஆ தி சங்கரர் யாகம் செய்த இடம் கொல்லூர்-குடகாத்திரி மலை. இதன் உச்சியில் உள்ள சிறிய கருங்கல் மண்டபத்தில் ஆதிசங்கரர் உலக நல னுக்காக பல யாகங்கள் செய்தார். அந்த இடம் ‘சர்வ யக்ஞ பீடம்’ எனப் படுகிறது.
இங்கிருந்து மேற்குப் பக்கம் உள்ள மலைச் சரிவின் கீழே ஒரு கி.மீ. தூரம் சென்றால், ஒரு குகை உள்ளது. இந் தக் குகையிலும் ஆதிசங்கரர் தவம் செய்திருக்கிறார். இது ‘சித்திர மூலைக் குகை’’ என வழங்கப்படுகிறது.
 
முஸ்தாபி சூரணம்!
வி ருத்தாசலத்துக்கு அருகில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, நாள்தோறும் ‘முஸ்தாபி சூரணம்’ என்ற மகா நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படுகிறது.
கோரைக்கிழங்கு, சர்க்கரை, பசுநெய், பச்சைக் கற்பூரம், ஏலக்காய்ப் பொடி ஆகிய பொருட்களால் செய்யப்படும் இந்தப் பிரசாதம், பல நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது!
 
மௌனம் காத்திடுங்கள்!
ஸ் நானம் செய்யும்போது பேசுகிறவனது சக்தியை, வருணன் அபகரிக்கிறார்.
ஹோம காலத்தில் பேசுகிறவனது சம்பத்தை (செல்வத்தை) அக்கினி பகவான் அபகரிக்கிறார்.
போஜன காலத்தில் பேசுகிறவனது ஆயுளை எமன் அபகரிக்கிறார்.
ஆகையால், குறிப்பாக இந்த மூன்று வேளைக ளிலும் மௌனம் சாதிப்பவன் பல நன்மைகள் பெறுகிறான்.

- மநு தர்மசாஸ்திரம்
                        
 
 
 

 
 
 

 

       

Comments