திருச்சி மணப்பாறை, சிவன் ஆலயங்களின் தலைநகரமாகவே திகழ்கிறது. ஊரின் எந்த மூலைக்கு திரும்பினாலும் பழம்பெருமை வாய்ந்த சிவ ஆலயங்கள் மணப்பாறையை அலங்கரிக்கின்றன.
மணப்பாளை சீகம்பட்டி குளக்கரையில் உள்ள திருமுக்தீஸ்வரர் ஆலயம், மணப்பாறையின் மையத்தில் அருள்பாலிக்கும் நாகநாதசாமி கோயில், ஊரின் எல்லையில் மலைமேல் குடியிருக்கும் அகத்தீஸ்வரர் ஆலயம். மாமுண்டி ஆற்றங்கரையில் சிதிலமாகி கிடக்கும் கலிதீர்த்த ஈஸ்வரர் என நான்கு முக்கிய பிரதான சிவன்ஆலயங்களை கட்டி வழிப்பட்டதாக வரலாறு உண்டு. இது குறித்து மணப்பாறையை சார்ந்த ஆன்மிகவாதியான டாக்டர் கரு.ராஜகோபாலனிடம் பேசினோம்.
திருமுக்தீஸ்வரர் ஆலயம்.: மூன்று ஊர்களின் பிரதான சந்திப்பான மணப்பாறை புதுக்கோட்டை சாலையில் பொன்முச்சந்தியில் உள்ளது. இக்கோயில், வில்வம் ஸ்தல விருட்சம், கி.பி. 1356ல் குலசேகர பாண்டியனின் நேரடி பார்வையால் கட்டிய மிக பழமையான கோயில். இது ரு கட்டத்தில் பாண்டிய நாட்டின் எல்லையை குறிக்கும் கோயிலாக இருந்துள்ளது. பங்குனி உத்திரம் மகா சிவராத்திரி, விஜயதசமி, தைப்பூசம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா என்பதெல்லாம் இங்கு பிரசித்தி பெற்றவை. குலசேகரப்பாண்டியன் இப்பகுதியில் கட்டிய 108வது சிவன் கோயில் என முக்தீஸ்வரர் கோயிலுக்கு மற்றொரு தகவலும் உண்டு. கடைசியாக இப்பகுதியை விஜயநகர பேரரசு ஆண்டது.
இன்அ இக்கோயில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பரிகார தலமாக இருக்கிறது. குழந்தை வரம் தருவதில் திருச்சி மாவட்டத்தில் இது ஒரு முக்கிய கோயிலாக இருக்கிறது. மேலும் கிரதோஷ சாந்தி திருத்தலமாகவும் இருக்கிறது. இங்குள்ள அம்மனின் பெயர் அந்தாள பரமேஸ்வரி. அதாவது அழகிய பாதங்களை உடையவள் என்று பொருள். இந்த அம்பாளுக்கு விஷக்கடி அம்பிகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. வயல்வெளி சூழ்ந்த இப்பகுதியில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷப் பிராணிகள் கடித்தால் இப்பகுதி மக்கள் முதலில் நாடுவது இக்கோயிலைத்தான். மக்களுக்கு பெரும் நம்பிக்கை திருத்தலமாக இருக்கிறது. இங்கு தரப்படும் விபூதியும் குங்குமமும் விஷக்கடிக்கு அருமந்து என கோயிலை சுற்றி வாழும் கிராமத்து மக்கள் சொல்கின்றன. இன்று இக்கோயில் இப்பகுதியில் ஆற்றுப்பதினெட்டு கிராமங்களுக்கு பிரதான கோயிலாக இருக்கிறது.
நாகநாதசாமி கோயில்: நாகநாத அய்யர் என்பவரால் திருப்பணி செய்யப் பெற்ற பெருமை கொண்டது. விராலிமலை சுப்பிரமணியசாமி திருக்கோயில் போல ஆடிமாதம் இரண்டாவது வெள்ளியில் அருணகிரி நாதர் இசைவிழா ஆண்டுதோறும் நடைபெறும் ஒரே கோயில் இப்பகுதியில் இந்த கோயில் மாத்திரமே.
மணப்பாறை நகரின் மையத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில். சிவபெருமான், நாகநாதர் என்னும் பெரயில் எழுந்தருள்கிறேன் என விருப்பங்கொண்டு தானாகவே சொல்லி எழுந்த கோயில் என்பது இதற்கான வரலாறு. இங்குள்ள அம்மன் மாதுளாம்பிகை. அதாவது மாதுளை முத்துக்கறை போல புன்சிரிப்பால் பக்தர்களின் உள்ளம் குளிர வைப்பதால் இப்பெயர் திருமுக்தீஸ்வரர் ஆலயம் போல வள்ளி, தெய்வானை, முருகனோடு இக்கோயிலும் சிவன் குடும்பத்தோடு காட்சியளிக்கிறது.
தடைப்பட்ட மாங்கல்ய தோஷத்தை நீக்கி திருமண பந்தத்தை உருவாக்கும் மிக முக்கிய கோயில். ஏராளமான இளம் பெண்கள் வேண்டி வழிபட்டு விளக்கேற்றுகிறார்கள். தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பின் ரோஜாப்பூ மாலை சாற்றுவது இக்கோயிலுக்கான முக்கிய ஐதீகம். நாகநாதசாமி முன் திருமணம் செய்து.
கலிதீர்த்த ஈஸ்வரர் கோயில்: மாமுண்டி ஆற்றங்கரையில் சேரர்களால் உருவாக்கப்பட்டு பாண்டியர்களால் பராமரிக்கப்பட்டு வந்து கோயில் இது. பின், காலப்போக்கில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு கைமாறியது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோயில், முற்பிறவியில் செய்த பாவங்களை போக்கும் சிவலாயம் இது.
1977ல் உள்புகுந்த பெருவெள்ளம் கோயிலில் அமைப்பை மாற்றிப்போட்டது. அது. பின்னர் பராமரிக்கப்படாமல் போகவே இன்று ஆடுமாடுகள் மேய்க்கும் இடமாக மாறிவிட்டது. கோயிலில் இருந்த சிலைகள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. இப்போது எஞ்சி இருப்பது சிவலிங்கம் மட்டுமே. கோயிலுக்கு செல்லும் வழி நெடுக எருக்கம் செடியும் முற்காடும் பரவிக்கிடக்கிறது.
கோயிலுக்குள்ளும் அடர்ந்த வனம் போலவே இருக்கிறது. கோயிலின் ஒருபகுதி செங்கற்கள் தான். மதில் சுவரை தாங்கி பிடித்துள்ளன. பராமரிக்கப்படாததால் எலும்புகூடு போலவே காட்சியளிக்கிறது. மணப்பாறையின் மிகப்பழமையான இக்கோயிலில் தற்போது பக்தர்கள் பிரதோஷ காலத்தில் பெருமளவு கூடி வணங்கி வருவது இச்சிவன் கோயில் இனி சீராகும் என்பதை உணர்த்துவது போல் உள்ளது.
மணப்பாறையை சுற்றி வாழும் நூற்றுக்கணக்கான கிராமங்களின் நம்பிக்கை தலங்களாக இந்த நான்கு கோயில்களும் காட்சியளிக்கின்றன.

Comments
Post a Comment