குதிரை சிலந்தி கழுகு உடும்பு
குரங்கு நரி ஈ எறும்பு
மதுவண்டு அலவன் கரி அரி ஆ
மஞ்ஞை எகினம் புறா ஆந்தை
ததி என்காமை முயல் கோம்பி
தத்தை கேழல் அர்ச்சிப்ப
விதியும் விலக்கும் கடந்தார்க்கு
விதியாலொன்றை விதிப்பார் யார்?
குதிரை, சிலந்தி, கழுகு, உடும்பு, குரங்கு, நரி, ஈ, எறும்பு, தேனீ, நண்டு, யானை, சிங்கம், பசு, மயில், அன்னம், புறா, ஆந்தை, கரடி, ஆமை, முயல், பச்சை ஓணான், கிளி, பன்றி ஆகிய உயிர்கள் இறைவனைப் பூசித்ததைப் பற்றி இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் கமலை ஞானப்பிரகாசர்.
பற்பல திருக்கோயில்களின் பெருமான்களெல்லாம், ஆங்காங்கே வழிபட்ட உயிரினங்களின் பெயர்களைத் தாங்கி எழுந்தருளி இருப்பதையும் காணலாம். சேலத்தில் கிளிகள் வழிபட்டதால் சுகவனேஸ்வரர், திருக்கேழம்பத்தில் குயில் வழிபட்டதால் கோகிலேஸ் வரர், சக்கரப்பள்ளியில் சக்கரவாகப் பறவைகள் வழிபட்டதால் சக்கரவாகேஸ்வரர், கூகையூரில் ஆந்தைகள் (கூகை-ஆந்தை) வழிபட்டதால் கூகேஸ் வரர், புறவார் பனங்காட்டூர், திருவோத்தூர், எறும் பூர் போன்ற இடங்களில் பறவைக் கூட்டங்கள் வழிபட்டதால் பட்சீஸ்வரர், வலிவலத்திலும் திருவலிதாயத்திலும் வலியனான கரிக்குருவி வழி பட்டதால் வலிதாயேஸ்வரர், உறையூரான கோழியூரில் சேவல் வழிபட்டதால் கோழீஸ்வரர், காளத்தியில் சிலந்தியும் யானையும் பாம்பும் வழிபட்டதால் காளத் தீஸ்வரர், திருந்துதேவன் குடியில் நண்டு வழிபட்டதால் கர்க்கடேஸ்வரர், காஞ்சிபுரத்தில் முத்துச்சிப்பிகள் வழிபட்டதால் சிப்பீஸ்வரர், மாகறலில் உடும்பு வழிபட்டதால் மாகறலீஸ்வரர், பற்பல தலங்களில் மீனும் ஆமையும் வழிபட்டதால் மச்சேஸ்வரர் மற்றும் கச்சபேஸ்வரர், மப்பேடில் மான் வழிபட்டதால் ஸ்ருங்கேஸ்வரர், மங்கலக்குடியில் குதிரை வழிபட்டதால் ஹயவந்தீஸ்வரர், திருந்நெடுங்களத்தில் ஒட்டகம் வழிபட்டதால் நெடுங்களேஸ்வரர், ஈழநாட்டுக் கீரிமலையில் கீரி வழிபட்டதால் நகுலேஸ்வரர், வட குரங்காடுதுறை, தென் குரங்காடுதுறை, குரக்குத் தளி, குரங்கணில் முட்டம் போன்ற இடங்களில் குரங்குகள் வழிபட்டமையால் வாலீஸ்வரர், சுக்ரீஸ்வரர் மற்றும் ஹனுமீஸ்வரர், மயிலாப்பூரில் மயில் வழிபட்டதால் மயூரேஸ்வரர் என்று இத்தகைய திருநாமங்களுடன் இறையனார் காட்சி கொடுப்பதைப் பார்க்கலாம்.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திருத்தலங்களுள் ஒன்றுதான், எறும்புகள் வழிபட்ட தலமான திரு எறும்பியூர். திருச்சிக்குக் கிழக்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம். எறும்பியூர் என்பது காலப்போக்கில் எறும்பூர் ஆக (திருவெறும்பூர்), அதுவும் சற்றே தேய்ந்து அரம்பூர் (திருவரம்பூர்) ஆகி விட்டது. பி.ஹெச்.இ.எல் தொழிலகத்தாலும் தேசிய பொறியியல்-தொழில்நுட்பக் கழகத்தாலும் (பழைய ஆர்.இ.சி) இன்று பிரபலமாக விளங்கும் திருவெறும்பியூருக்குப் புறப்படு வோம் வாருங்கள். திருவெறும்பூர் என்றே திருச்சி- தஞ்சை மார்க்கத்தில் ஒரு ரயில் நிலையம் உள்ளது.
இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடுதுன்பமும் உடனே வைத்த சோதியான்அன்பனே அரனே என்றரற்றுவார்க்குஇன்பனாகும் எறும்பியூர் ஈசனே - என்று
நாவுக்கரசர் பாடிய எறும்பியூர் தலம்.
சிறிய குன்றாக இருக்கும் மலையின் கிழக்கு அடிவாரத்தில் நிற்கிறோம். அடிவார விநாயகரை வணங்கி, கோயிலின் பிரதான வாயிலை அடைகிறோம். மலையின் உச்சியில்தான் திருக்கோயில். சற்றே வளைந்து, பின் னர் நேரே செல்லும் படிகள். சுமார் 90 படிகள் ஏறிச் செல்கிறோம். ஆங்காங்கே இளைப்பாறவும், உட்கார்ந்து பேசுவதற்கும் ஏற்றபடி மேடைகளும் திண்ணைகளும் உள்ளன. சிலர், படிகளைத் தாண்டிச் சென்று, குன்றின் சரிவுகளில் சாய்ந்து உட்கார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு, இந்தக் குன்றுதான் பூங்காவும் கடற்கரையும் போலும்!
அடிவாரத்தில், குன்றின் கிழக்குப் பகுதியில் தொடங்கிப் பின்னர், குன்றின் வடக்குப் பகுதியில், இந்தப் படிகள் ஏறுகின்றன. மேல் நிலையை அடைந்ததும், படிகளுக்குத் தெற்காக ஒரு வாசல். உள்ளே நுழைந்து திரும்பினால், நமக்கு இடது புறம் ஒரு சந்நிதி. சற்று தள்ளி கொடிமரமும் நந்தியும். எதிரில், உள் கோயிலுக்குச் செல்லும் வழி. ஆமாம். படிகளிலிருந்து உள்ளே நுழைந்தவுடன், இப்போது, திருக்கோயிலின் வெளிப் பிராகாரத்தை அடைந்திருக்கிறோம்.
வெகு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கிற பிராகாரம். குன்றின் மீது அமைக்கப்பட்டிருக்கும் கோயிலைச் சுற்றியுள்ள மதில், ஒரு கோட்டை மாதிரியான அமைப்பில் உள்ளது. சோழர் காலத்தில், இத்தகைய கட்டுமானம் இங்கு கட்டப்பட்டிருக்க வேண்டும்; பிற்காலங்களில், இவை செப்பனிடப்பட்டிருக்கக் கூடும். வெளிப் பிராகாரத்தில் தனிச் சந்நிதிகள் ஏதும் இல்லை என்றாலும், இங்கிருந்து பார்த்தால் தூரத்தில் திருவரங்க கோபுரமும், மலைக்கோட்டையின் உச்சிப் பிள்ளையார் கோயிலும் நன்றாகவே தெரிகின்றன.
வெளிப் பிராகாரத்தை வலம் வரும் போது, நாம் படிகளைக் கடந்து உள்ளே வந்தபோது பார்த் தோமே, இடதுபுறச் சந்நிதி, அந்த அம்மன் சந்நிதியையும் வலம் வந்து, கொடி மரத்தை அடைகிறோம். கொடி மரம், பலி பீடம், நந்தி மண்டபம்- இவற்றுக்குப் பின் னால், மதில் சுவரில் ஒரு சாளரம். இதன் வழியாக எட்டிப் பார்த்தால், கீழே நாம் முதன்முதலில் நுழைந்த படிக்கட்டு நுழைவாயில் தெரிகிறது. அப்படியே எதிர்ப்புறம் பார்வையைத் திருப்பினால், மூலவர் சந்நிதிக்குப் போவதற்கான உள்வாயில். கிழக்கு நோக்கியது. சிறிய கோபுரத்துடன் கூடிய இந்த வாயிலை அடைந்து உள்ளே நுழைந்தால், விசாலமான மண்டபம் போன்ற இடம். உண்மையில் இது உள் பிராகாரம். உள்ளே கருவறையில் காட்சி தரும் அருள்மிகு எறும்பீஸ்வரரை இங்கிருந்தபடியே வணங்கிவிட்டு, வலத்தைத் தொடங்குகிறோம். கிழக்குச் சுற்றிலல்லவா நிற்கிறோம். அப்படியே நடந்து, தெற்குச் சுற்றில் திரும்ப, முதலில், வடக்கு நோக்கியவர் களாக நால்வர். அடுத்து, ஒரு சிறிய வாசல்; இது கோயில் மடைப்பள்ளி செல்வதற்கான வழி. தாண்டிச் சென்றால், சப்தமாதர்கள். தென் மேற்கு மூலையை அடைய, அங்கு விநாயகர் சந்நிதி. மேற்குச் சுற்றில், வரிசையாக காசி விசுவநாதர், வள்ளி- தெய்வானை உடனாய ஆறுமுகர், மீண்டும் காசி விசுவநாதர், கஜலட்சுமி. வடக்குச் சுற்றில் திரும்பி நடக்கிறோம். வடகிழக்குப் பகுதியில் தென்முகமாக அமைந்த நடராஜ சபை. சிவகாமி உடனுறை ஆடல் வல்லானை வழிபட்டுத் திரும்பினால், நவக்கிரகச் சந்நிதி. கிழக்குச் சுற்றில், கயிலாசநாதர், பைரவர், பாணலிங்கம், சூரியன், விநாயகர்.
பரிவார தெய்வங்களை வழிபட்டுவிட்டு, மூலவர் கருவறைக்குள் நுழைய யத்தனிக்கிறோம். வாயிலில், ஒரு புறம் விநாயகர்; மறு புறம் மயிலும் வேலும் உடனாய முருகர். வணங்கி உள்ளே நுழைந்தால், மூலவர் மகா மண்டபம். மகா மண்டபத்தின் வலது பக்கத்தில் உற்சவ விக்கிரகங்கள். அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்து உள்ளே நோக்க... அருள்மிகு எறும்பீஸ்வரர். கிழக்கு நோக்கிய திருமேனி. அழகான வட்ட வடிவ ஆவுடையார். வெகு கோலாகலமான அலங்காரத்துடன் காட்சி தரும் எறும்பீஸ்வரர்.
'பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்எண்ணோடு பண்ணிறைந்த கலைகளாயதன்னையும் தன் திறத்தறியாய் பொறியிலேனைத்தன்திறமும் அறிவித்து நெறியும் காட்டிஅன்னையையும் அத்தனையும் போல அன்பாய்அடைந்தேனைத் தொடர்ந்தென்னை ஆளாக் கொண்டதென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன்
நானே' _ என்று நாவுக்கரசர் போற்றிய ஐயனை வணங்கி நிற்கிறோம். திருக்கோயில் படிகளேறி வந்தபோது, அங்கு கண்ட ஒரு படம் மனதிலேயே இருக்க, அதுபற்றி அர்ச்சகரிடம் கேட்க முனைகிறோம். அவர் விளக்குகிறார்.
ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரர்கள்: அரக்கர்களான கரன், தூஷணன், திரிசிரா ஆகியோர். ஜன ஸ்தானம் எனப்பட்ட தென்னாட்டுப் பகுதியை (கோதாவரிக்குத் தெற்காக உள்ள தக்காணப் பகுதி) சூர்ப்பணகைக்குக் கொடுத்திருந்தான் ராவணன். கணவனை இழந்த சூர்ப்பணகைக்கு உதவியாக, ஜனஸ்தானத்தைக் கரன் ஆள வேண்டுமென்றும் பணித்திருந்தான். கரனுக்குத் துணையாக தூஷணனும் திரிசிராவும் இருந்தனர். கரன், ராவணனை விடவும் பெரிய வீரன் (தனக்குக் கரனால் நேரடியாக எந்த இடர்ப்பாடும் வரக்கூடாதென்பதற்காகத்தான், அவனை இலங்கையில் வைத்துக் கொள்ளாமல் ஜனஸ்தானத்துக்கு அனுப்பிவிட்டான் என்பாரும் உண்டு). கரனால் கொடுமைக்குள்ளான தேவர்களும் முனிவர்களும் இறையனாரை நேரே வந்து வணங்க முடியவில்லை. அவர்கள் எங்கு வந்தாலும், கரன் அவர்களை விரட்டுவான்; துன்புறுத்துவான். என்ன செய்வதென்று புரியாத தேவர்களும் முனிவர்களும் இறையனாரை வேண்ட, கரனுக்கு அடையாளம் தெரியாதபடி அவர்களை வரச் சொன்னார் இறையனார்.
அடையாளம் தெரியாவிட்டாலும் பெரிய வடிவத் தில் வந்தால் அவர்களைக் கரன் சும்மா விட மாட் டான். எனவே, யாருமே எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி, சின்ன சின்ன இடைவெளிகளில் ஊர்ந்து வரக்கூடிய முறையில் எறும்புகளாக வந்து வழிபட்டனர் தேவர்கள். சின்ன வடிவங்களாயிற்றே - அவை பெரிய சிவலிங்கத்தை வழிபடுவது எப்படி சாத்தியம்? அதற்காக, அந்த எறும்புகளையும் தம்மீது ஊரவிட்டு, அவை ஊர ஊர அவற்றுக்காகச் சாய்ந்து, ஆங்காங்கே எறும்புகள் ஊரிய தடத்தால் பள்ளமும் மேடுமாகி, பாணமே ஒரு பக்கமாகச் சாய்வுற்று... மேடும் பள்ளமுமான சிவலிங்கத் திருமேனி சாய்ந்திருப்பது போன்ற படத்தையே படியேறும் போது பார்க்கலாம். (கோயிலில் காணப்படும் சில படங்களில், எறும்பியூருக்குக் காரணமானவன் தாருகாசுரன் என்று காணப்படுகிறது. ராவணனுக்கு, அவன் தாய் வழியில் வரும் ஒன்று விட்ட சகோத ரர்கள் ஏராளம். அவர்களுள் ஒருவன் தாரகன். அவனையே தாரகாசுரன் என அழைத்திருக்கக் கூடும். 'சூரபதுமனின் தம்பியான தாருகனே இவன்!' என்பாரும் உண்டு. இந்த தாருகாசுரனும் தென் னிந்திய பகுதியை ஆட்சி செய்தான். இவனை முருகப்பெருமான் வதைத்த இடம் திருப்போரூர். ஆயினும், 'திரிசிரா' என்ற பெயரில் இருந்து திருச்சிராபள்ளி என்று வருவதால் ராவணனின் சகோதரனையே இந்தத் தலத்துக்குக் காரணமாகக் கொள்ள வேண்டியுள்ளது.)
எறும்புகள் வழிபட்ட வரலாற்றை விளக்கிய அர்ச்சகர், லிங்கத் திருமேனியின் கவசத்தை நீக்கிக் காட்டுகிறார். திருக்கோயில் படிகள் ஏறி வந்தபோது, நாம் பார்த்த படத்தில் உள்ளது போன்றே பரமனார் இங்கு திருமேனி காட்டுவதை தரிசிக்கிறோம். லிங்கத் திருமேனி சற்றே வலது பக்கமாகச் சாய்ந்துள்ளது.எத்தனை அருள், எத்தனை கருணை! லிங்கத் திருமேனிக்குப் புனுகுச் சட்டம் இடுவதுண்டு. ஆவுடையாருக்கு அபிஷேகம். சில நேரம், கவசம் இட்டு பாணத்துக்கும் அபிஷேகம் செய்வது உண்டாம். எறும்புகள் புற்று உண்டாக்கி வர, அவை வந்த இடத்திலேயே புற்றில் இருந்து இறையனார் வந்தார். எனவே, சுயம்புவாகத் தோன்றிய இவருக்கு வன்மீகேஸ்வரர் (புற்று நாதர்) என்றும் திப்பிலியேஸ் வரர் என்றும் திருநாமங்கள் உண்டு. ஐயனுடைய அருளை எண்ணியபடியே அர்த்த மண்டபத் தூண் களைக் காண்கிறோம். அகலமான தூண்கள். மகா மண்டபத்திலும் நல்ல பெரிய தூண்கள்.
'எறும்பியூர் மலைமேல் மாணிக்கம்' ஆன மகா நாதரை வணங்கி வழிபட்டு, மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்களாக தெற்கில் விநாயகர் மற்றும் கல்லால மரத்தடி தட்சிணாமூர்த்தி; அதி சாந்த ஸ்வரூபியாக இருக்கிறார். மூலவருக்குப் பின்னாலிருக்கும் மேற்குக் கோஷ்டத்தில் ஹரிஹரன்; அதாவது, ஹரியான விஷ்ணுவும் ஹரனான சிவனும் இணைந்த கோலம்; இடது பக்கம் விஷ்ணுவும் அவருக்கே உரித்தான ஆயுதங்களும், வலது பக்கம் சிவனும் அவரது ஆயுதங்களும். ஹரிஹர மூர்த்தம் மனதைக் கொள்ளை கொள்கிறது. வடக்குக் கோஷ்டத்தில் பிரம்மாவும் துர்கையும். தனிச்சந்நிதியில் நிர்மால்ய நாயகரான ஸ்ரீசண்டேஸ்வரர். மூலவர் சந்நிதிக் கட்டுமானம் கருத்தைக் கவர்கிறது. கருவறையைச் சுற்றி ஆழமில்லாத அகழி. அகழியில் நிற்கும் தூண்கள். இந்தத் தூண்கள், உள் பிராகாரக் கூரையைத் தாங்குபவை.
தமிழகப் பண்பாட்டிலும் வரலாற்றிலும் திருவெறும்பூர் பகுதிக்கு முக்கிய இடமுண்டு. தல புராணக் கதைகளின்படி, இந்தத் தலத்தில் கரனின் சகோதரனான தூஷணனும் வழிபட் டான். இன்னொரு சகோதரனான திரிசிரா வழிபட்டதால், திரிசிராப்பள்ளி எனும் பெயர் வந்ததாகச் சிலர் சொல்வர். பிரம்மாவும் திரு மாலும் இங்கு வந்து வழிபட்டதாகவும் கர்ண பரம்பரைச் செய்திகள் உள்ளன.
இந்தக் கோயிலின் மண்டபம், வெளிப் பிராகாரம், மலையடிவார மண்டபம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகளும் பிற சான்றுகளும், சோழர் கால ஆட்சிமுறையைப் பற்றி தகவல் களைத் தருகின்றன. 10-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்த ஆவணம் ஒன்றில், குன்றின்மீது கோயிலை எழுப்பித்த சிற்றரசனான செம்பியன் வேதி வல்லன், கோயில் குளத்தை ஆழப் படுத்துவதற்குத் தங்கம் தர ஒப்புக் கொண்ட தகவல் காணப்படுகிறது. பாண்டியர்களும் இங்கு திருப்பணி செய்துள்ளனர். நைமிச முனிவர் இத்தலத்தில் வழிபட்டார்.
மகா மண்டபத் தூண்களையும், உள் பிராகாரச் சிற்பங்களையும் பார்த்துக் கொண்டே நிற்கும்போது, இந்தப் பழங்காலச் செய்திகளெல்லாம் நினைவுக்கு வருகின்றன. திருவெறும்பூர் கோயில் தூண்கள் பலவற்றிலும் யாளி உருவங்களைக் காண முடிகிறது. தலைகளுக்கு மேலே தூண் பட்டிகையைத் தாங்கிய படியே யாளிகள் நிற் கின்றன. உள் பிராகாரத்தில், சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரேயுள்ள பகுதியில், மேற் கூரை விதானத்தில் எட்டு கோணங்களைக் கொண்ட அஷ்டாங்க அமைப்பு கண்ணைக் கவர்கிறது.
உள் பிராகாரத்திலிருந்து நம்மை மடைப்பள்ளி பக்கம் அழைத்துப் போகிறார் அர்ச்சகர். வடக்குச் சுற்றிலிருந்து சற்றே நீட்டிக் கொண்டிருக்கும் மடைப் பள்ளியில், சில படிகள் ஏதோ சுரங்கம் போல கீழே இறங்குகின்றன. படிகளில் போனால், கீழே இரண்டு வழிகள் உண்டாம். ஒன்று திருச்சி மலைக்கோட்டைக்கும், மற்றொன்று தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும் செல்கின்றனவாம். இரண்டு தலைமுறைக் காலமாக யாரும் போனதில்லை என்றாலும், பெரியவர்கள் சொல்லிக் கேட்டதுண்டாம்.
கோயில் வெளிப் பிராகாரத்தில் அம்மன் சந்நிதி. தெற்கு நோக்கிய இந்தச் சந்நிதியில், பெரிய முன் மண்டபம். ஒரு பக்கத்தில் நந்தி. முன் மண்டபத்தின் ஒரு பக்கத்தில் பள்ளியறை. இங்கேயும் நிறைய தூண்கள். அர்த்த மண்டப வாயிலில் விநாயகர். உள்ளே, சந்நிதியில், அருள்மிகு நறுங்குழல் நாயகி. நின்ற திருக்கோலம்; நான்கு திருக்கரங்கள்; அபயமும் வரமும் காட்டி நிற்கும் அம்பாள். சௌரப்ய குந்தளாம்பாள் என்றும் திருநாமம். அம்பாளை வழிபட்டு, திருக்கோயில் வெளிப் பிராகாரம் அடைகிறோம். ஒரு பக்கத்தில் சுவாமி சந்நிதியும், இன்னொரு பக்கத்தில் அம்மன் சந்நிதி விமான மும் தெரிய மனமெல்லாம் ரம்மியமாகிறது.
படிகளில் கீழிறங்கி வரும்போது, குன்றின் வடக்குப் பகுதியில் (இப்போது படிக்கட்டுகள் இருப்ப தற்கு இன்னும் வடக்காக) மண்ட பம் இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன. அம்மன் சந்நிதி முன் மண்டபத்தில், சிதிலப்பட்ட அம்மன் சிலையன்று உள்ளது. இஸ்லாமியப் படையெடுப்புகளின் போது சிதைவுபட்ட சிலை. அதே நேரத்தில்தான், இந்த மண்டபமும் வெடிகளால் தகர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்றான திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளிப் பகுதியில் மூன்று சிகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. எப் படி? திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில், திருஈங்கோய்மலை கோயில், திருவெறும்பூர் கோயில் - இந்த மூன்றும் உயரத்தில், மலைக் குன்றுகளில் அமைந்திருப்பதால், மூன்று சிகரங்களாக உள்ளன என்று சொல்லலாம். வைகாசி மாதம் வெகு சிறப்பாக பிரம்மோற்சவம் நடைபெறும் இத்தலத்தில், துன்பங்கள் தீரவும், வறுமை நீங்கவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் பிரார்த்தித்துக் கொண்டால் கண்டிப்பாக நிறைவேறும்.
'புழுவாகப் பிறந்தாலும், இறைவா, உன் நினைவு மனதிலிருந்து வழுவாதிருக்க வேண்டும்' என்பார்கள். எறும்பாக வந்தாலும், ஊர்ந்து வந்தாலும் விடை யேறியான பரமேஸ்வரர் பாரபட்சம் இன்றி ஏற்றுக் கொள்வார் என்பதையும், தொலைந்து போன ராஜ்ஜியத்தையும் செல்வத்தையும் பெருமிதத்தையும் வேண்டி நின்ற தேவர்களுக்கு அவற்றை மீண்டும் அளித்தார் என்பதையும் நிறைவாகப் புரிய வைக்கும் திருவெறும்பூர் திருத்தலத்திலிருந்து மெள்ள ஊர்ந்து ஊர்ந்து விடைபெறுகிறோம்.குதிரை சிலந்தி கழுகு உடும்பு

'புழுவாகப் பிறந்தாலும், இறைவா, உன் நினைவு மனதிலிருந்து வழுவாதிருக்க வேண்டும்' என்பார்கள். எறும்பாக வந்தாலும், ஊர்ந்து வந்தாலும் விடை யேறியான பரமேஸ்வரர் பாரபட்சம் இன்றி ஏற்றுக் கொள்வார் என்பதையும், தொலைந்து போன ராஜ்ஜியத்தையும் செல்வத்தையும் பெருமிதத்தையும் வேண்டி நின்ற தேவர்களுக்கு அவற்றை மீண்டும் அளித்தார் என்பதையும் நிறைவாகப் புரிய வைக்கும் திருவெறும்பூர் திருத்தலத்திலிருந்து மெள்ள ஊர்ந்து ஊர்ந்து விடைபெறுகிறோம்.
Comments
Post a Comment