இறைவன் போட்ட திட்டம்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒரவராகவும் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகவும் மதிக்கப்படும் திருமூலர், புகழ்பெற்ற நூலான திருமந்திரத்தின் ஆசிரியர்.
ஆனால் அந்த நூலை அவர் எழுதியது தம் உடலிருந்தல்ல, இன்னொருவர் உடலிலிருந்து இத்தகைய பல விந்தையன சம்பவங்களை உள்ளடக்கிய திருமூலரது துறவு நெறியின் சிறப்பு இதோ...
பொதிகை மலையில் தவம் நிகழ்த்தி சித்தராக பெரும் புகழுடன் விளங்கினார் அகத்தியர். தமிழை தோற்றுவித்தவர் என்று புகழப்படும் அவர், வேத வேதாந்தங்களிலும் யே õக சாத்திரங்களிலும் வல்லவர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்னும் பழமொழி, குறுமுனி என அழைக்கப்படும் அவருக்கு பொருந்துவது போல் வேறு யாருக்கும் பொருந்தாது.
அவரிடம் குருகுல முறையில் ஆன்மிகம் பயின்றார்கள் சில மாணவர்கள். அவர்களில் ஒருவர்தன் , மதுரையை சேர்ந்த சந்தரநாதர். கொஞ்ச கால பயிற்சியிலேயே தமது அளவற்ற மன ஒருமைப்பாட்டால் சுந்தரநாதர் அணிமா, மகிமா, லகிமா முதலிய அட்டமா சித்திகளும் கைவரப் பெற்று விட்டார். வேதவேதாந்தஙண்கள் அனைத்தையும் வேண்டிய அளவு கற்று கொண்டு விட்டார். அவர் முகத்தில் தவப்பொழிவு நாளுக்கு நாள் கூடி வந்தது. தன் சீடனின் கல்வி குறித்து அகத்தியர் மன நிறைவடைந்தார்.சுந்தரநாதா நம்மிடம் நீ கற்றளவை போதும். உடன் வட திசை நோக்கி சென்று திருக்கயிலைத்தை அடைவாய் அங்கு நந்திகேஸ்வரரிடம் மேலும் பயில வேண்டிய உயர் கல்வியை பயில்வாய். தமிழில் நீ படித்து தேர்ந்தவை தவிர வடமொழி சார்ந்தும் நீ படிக்க வேண்டியவை இன்னும்ஏராளம் உள்ளன. என வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
வட திசை சென்ற சுந்தரநாதர் அகத்தியர் விரும்பியபடி நந்திகேஸ்வரரிடம் ஏற்கனவே சனகாதி முனிவர்கள், பதஞ்சலி உள்ளிட்ட பல மாணவர்கள் பயின்று வந்தனர். அவர்களோடு இணைந்து தம் கல்விலய முடித்து கொண்ட பின் நந்திகேஸ்வரரின் ஆசியோடு விடைபெற்ற சுந்தரநாதர், தம் குரு அகத்தியரை மீண்டும் சந்திக்கும் எண்ணத்துடன் தென்திசை நோக்கி திரும்பி வரலானார். குருவை பிரிந்து எத்தனை காலமாயிற்று? நாம் புதிதாய் கற்றறிந்தவை குறித்து குருவிடம் தெரிவிக்க வேண்டாமோ? அந்த உன்னதமான சீடரின் உள்ளம் குருவை விரைவில் காணவேண்டும்.
லகிமா என்னும் ஸித்தியின் மூலம் உடலை கனமில்லாமல் மிக மெல்லியாதக ஆக்கி கொள்ளும் கலையும், சுந்தரநாதருக்கு தெரியும். எனவே அக்கலை மூலம் நாம் கனமற்ற நிலையை அடைந்தால் விண்ணில் பறந்தே சென்று இறங்க வேண்டிய இடங்களில் இறங்கலாம். தன் குருவான அகத்தியர் வாழும் பொதிகை மலையை சென்றடையும் முன் வழியில் உள்ள திருத்தலங்களில் இறங்கி ஆங்காங்கே உறையும் செய்வ சக்தியை வழிபடும் பேரும் பெறலாம். இறையருளை குருவுக்காகவும் சேர்த்து பிரார்த்தித்து பெறலாம்.
இவ்விதம் எண்ணிய சுந்தரநாதர் அப்படியே செய்து ஆகாய மார்க்கமாக பறந்து, ஆங்காங்கே உள்ள தலங்களில் இறங்கி அங்கே உறையும் செய்வங்களை எல்லாம் வழிபட்டு கொண்வே வந்தார். கேதார்நாத், பசுபதிநாத், நேபாளம் முதலியவற்றை தரிசித்து, பின்ர் காசியையும் கங்கையையும் கண்டு மகிழ்ந்தார். அதன் பின் ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவதிகை வீரட்டானம், திருவாவடுதுறை என அனைத்து தலங்களிலும் கீழிறங்கி அங்கு உறையும் கடவுளரை வணங்கினார். பின்னர் சாத்தனூர் அருகே வந்து சேர்ந்தார். அங்கே சுந்தரநாதர் கண்ட காட்சி அவர் மனத்தில் பெரும் நிறைவை தந்தது. யாரோ ஓர் ஆடு மேய்க்கும் இடையன் மிகுந்த பரிவோடு ஆநிரைகளை மேய்த்து கொண்டிருந்தான. அவ்ன முகத்தில் பூரண திருப்தி தென்பட்டது. எளியவன். முப்பது வயதிருக்கலாம். அதிக செல்வம் படைத்தவனாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஏஎதோ கர்மயோகம் போல் மிகுந்த சிரத்தையோடு ஆடுமாடுகளை மேய்த்து கொண்டிருந்தான். அவன் உல்லசாமாக பாடல்களை பாடி கொண்டிருந்தான்.
கர்மயோகத்தை முழுமையாக ஈடுபாட்டுடன் செய்தே இறைநிலை அடைந்து விடாலம் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு எ“னறு எண்ணி மகிழ்ந்தது சுந்தரநாதர் மனம். பெரும் ஆன்மிக பயிற்சிகளை செய்யாமலே வாழ்வில் தத்துவத்தை உணர கர்ம யோகத்தில் வழி உண்டுதானே என்றும் அவர் மனம் நினைத்து கொண்டது. ஆனால் அந்த ஆட்டிடையனை அவர் பிரிமாக பார்த்து கொண்டிருக்கும்போது தான் அந்த முற்றிலும் எதிர்பாராத விபரீதம் நேர்ந்தது. கருநாகம் ஒன்று திடீரென எங்கிருந்தோ சரசரவென ஊர்ந்து வந்து அவன் காலை கொத்திவிட்டு கண்காணாத இடத்திற்கு வேகவேகமா சென்று மறைந்து விட்டது. அடுத்த கணம் வாயில் நுரை தள்ள அவன் மண்ணில் விழுந்து மாண்டான். ஒரு கணம் முன்பு வரை ஆனந்தமாக பாட்டு பாடிக்கொண்டிருந்தவன் ஒரே கணத்தில் தன் பாட்டுக்கும் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டி நேர்ந்து விட்டது.
அந்த நாகம் சிவபெருமானின் கழுத்தில் உள்ள நாகம் தான் என்றும் சுந்தர நாதரால் ஒரு முக்கிய பணி ஆக வேண்டியிருப்பதன் பொருட்டே அந்த இடையன் ஈசனின் கட்டளைப்படி ஏவப்பட்ட நாகத்தால் மரணமடைந்தான்என்றும் சுந்தரநாதர் அப்போது அறியவில்லை.
சுந்தரநாதரின் உள்ளம் பதைபதைத்தது. அவன் முக்தி அடைய சிவபெருமான் விதித்த கணம் இது வாகவா இருக்க வேண்டும். இப்போதுதான் அவனை பற்றி மிகுந்த மதிப்போடும் அன்போடும் அவர் நினைத்து மகிழ்ந்தார். அதற்குள் அவன் இறந்த கொடுமையை என்ன சொல்ல இந்த ஆநிரைகளின் நிலை இனி என்ன ஆகும்?
கருணையே வடிவான அவர் தவிப்போடு அந்த ஆடுமாடுகளைபார்த்தார். இரவு நெருங்க தொடங்கி விட்டது. மாலை மங்கிகொண்டிருந்தது. ஆடுமாடுகள் அந்த இடையனின் இல்லம்÷õபய் சேரவேண்டும். ஆனால் அந்த மாக்கள் எதுவும் நகரவில்லை. கூட்டமாக அவன் உடலை சுற்றி நின்றன. அவற்றின் விழிகளிலிருந்து கண்ணீர் ஆறாய் பெருகிறது. அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த சுந்தரநாதர் மனம் உருகியது. இரவு இந்த ஆநிரைகள் இல்லம் போய் சேராவிட்டால் வன விலங்குகளால் தாக்கப்பட கூடும். பனியிலும் குளிரிலும் அவை எத்தனை துன்புறுமோ? இவற்றிற்கு கட்டாயம் தாம் போகும் இல்லத்திற்கு வழி öதெரிந்து õதன் இருக்கும். ஆனாலும் தங்களை மேய்க்கும் அன்பான எசமானை விட்டு இவை பிரியமுடியாமல் தவிக்கின்றனவே.
சுந்தரநாதர் பெருமூச்செறிந்தார். விண்ணில் மிதந்து கொண்டிருந்த அவர் மெல்ல கீழிறங்கினார். எப்படியேனும் ஆநிரைகளை அவற்றின் இல்லத்தில் சேர்த்து விட திருவுளம் கொண்டார். அவர் பரகாயபிரவேசம் எனும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையும் அறிந்தவர். தானே? சிறிது காலம் தம் உடலை விட்ட பிரிந்து அந்த இடையன் உடலில் குடியேறி அந்த ஆநிரைகளை அவன் வீட்டில் கொண்டு சேர்ந்து விட தீர்மானித்தார். பின்னர் மீண்டும் வந்து தம் உடலில் தாம் பிரவேசிக்கலாம் என்றும் எண்ணினார்.
தம் உடலை கிடத்த ஓர் இடம் தேடினார். அங்கே ஒரு மரப்பொந்து மிகப்பெரிதாக தென்பட்டது. அதில் தம் உடல் இருந்தால் இன்னும் சில மணிநேரங்களில் தாம் தரும்பி வரும் வரையில் அது பத்திரமாக இருக்கும் என்று நம்பினார். எல்லாம் உணரத்தெரிந்த ஞானியாக இருந்தும் இறைவனின் திட்டம் வேறாக இருந்தால் தமது அந்த எண்ணம் தவறு என்பது அவருக்கு தெரியாமல் போனது. ஆநிரைகளை வன விலங்குகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக தம் உடலை மரப் பொந்தில் கிடத்துகிறாரே? அந்த மனித உடலை வளன விலங்குகள் தாக்ககூடும் என்பதை ஏனோ அவர் நினைத்து பார்க்கவில்லை. அவரின் அளவற்ற கருணையோ ஈசன் திட்டமோ எதுவோ ஒன்று அத்தகைய சிந்தனை தோன்றாமல் அவரை தடுத்து விட்டது.
மரப்பொந்தில் இறங்கி படுத்து கொண்ட அவர் தம் உடலிலிருந்து தம் உயிரை பிரித்தார். அந்த உயிரை இடையன் உடலில் செலுத்தினார். அடுத்த கணம் இடையனாக எழுந்து நின்றார். ஒளிவீசும் தோற்றத்தோடு பழைய உடலில் புதிய இடையன். ஆநிரைகள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவரை தங்கள் நாவால் தடவி கொடுத்தன.
அவற்றின் அன்பை நினைத்து மெய்சிலிர்த்த சுந்தரநாதர் அவற்றை இல்லம் நோக்கி செலுத்தினார். ஊஹூம் .. பழக்கப்பட்ட பாதையில் அவை செல்ல, அவை காட்டிய வழியில் அவற்றோடு நடந்தார் சுந்தநாத இடையர்.
வெகு சீக்கிரமே காட்டு விலங்கு ஒன்று இவைன் திருவுள்ளப்படி அவரது உடலை சாப்பிட்டுவிட்டு போகபோகிறது என்பதையும் இன்னும் சில மணிநேரங்களில் தமது கடும் துறவு நெறிக்கு மிக பெரிய சோதனை நேர போகிறது என்பதையும் அப்போது அவர் அறியவில்லை.

Comments