கிருஷ்ணாவதார ரகசியம்

தேவகி, வசுதேவர் மகனாக மதுராவில் அவதரித்த மதுசூதனன், பிறக்கும்போது நான்குதிருக்கரங்களுன் மகா விஷ்ணு வடிவாகவே காட்சி தந்தார். அதன் பிறகே சாதாரணக் குழந்தையாக மாறினாராம். வேறு எந்த அவதாரத்திலும் தான் மகாவிஷ்ணுவின் அம்சமே என்படைத உணர்த்தாத பகவான், கிருஷ்ணாவதாரத்தில் மட்டம் அப்படி செய்தது ஏன் தெரியுமா?
சுபதஸ் என்ற பிரஜாபதியும், ப்ருகனியும் தவம் செய்து மகாவிஷ்ணுவிடனம் வரம் பெற்றபோது அவர் தங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் என மூன்று முறை கேட்டனர்.
எனவே அவர்கள் மகவாக மூன்று அவதாரங்களை நிகழ்த்தினார் மகாவிஷ்ணு. முதல்முறை அவ்விருவருக்குமே மகாவிஷ்ணு மகனாக பிறந்தார். அவர்கள் தங்களின் பிள்ளை மகாவிஷ்ணு என்பதை அறிந்து கொள்ள வில்லை. அடுத்து கஸ்யப்பர். அதிதியாக பிறந்த அவர்களுக்கு வாமனனாக மகாவிஷ்ணு பிறந்தார். அப்போதும் மகா விஷ்ணுவே தங்களுக்கு மகனாக பிறந்துள்ளான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. மூன்றாவது பிறவியில் அவுர்கள் வசுதேவர், தேவகியாக பிறந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு கண்ணனாக பிறந்தார். இப்போதும் அவர்கள் தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்க கூடாது என்று தான் கண்ணன். மகாவிஷ்ணுவாக காட்சி கொடுத்து தான் யார் என்பதை உணர்த்தி தன்னை சேர்க்க வேண்டிய இடத்தையும் கூறினார். அதன்படியே வசுதேவர், கிருஷ்ணனை கோகுலத்தில் சேர்ப்பித்தார்.
கண்ணன் கோகுலத்தில் வளர்த்தற்கும் காரணம் உண்டு. எல்லோருக்கும் தெரிந்த காரணம், கம்சனால் கொல்லப்படக்கூடாது என்பதனால் அபபடி வளர்ந்தார் என்பது உண்மையான காரணம் என்ன தெரியுமா? துரோண முனிவரும் வசுமதியும் தங்களுக்கு மகா விஷ்ணுவே மகனாக பிறந்து வளரவேண்டுமென தவம் செய்தனர். யாருக்கு மகவாக பிறக்க வேண்டும் என நான் முன்பே முடிவெடுத்துவிட்டதால் அடுத்த பிறவியில் உங்களிடம் மகனாக வளர வருவேன் என அவர்களுக்கு வரம் கொடுத்தார். திருமால். துரோணரும், வசுமதியுமே நந்தகோபர். யசோதையாக பிறந்து கண்ணனை வளர்க்கும் பாக்கியத்தை பெற்றினர்.

Comments