திருமகளும், நிலமகளும் இடம் மாறியது ஏன்?

காஞ்சிபுத்திற்கு வட மேற்கில் 12 கி.மீ. தொலைவில் வேகவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது திருப்புட்குழி.
“புள்’ என்றால், பறவை. “ஜடாயு’ எனும் பறவையரசன், தசரதனின் நண்பன். ராமபிரான், தந்தைக்குச் செய்யும் இறுதிக்கடன்கள் போலவே, ஜடாயுவிற்கும் செய்து, அதற்கு நற்கதி கிடைக்கச் செய்த தலம் என்பதால் “திரு-புள்-குழி’ என்று பெயர் வந்தது.
ராவணன், சீதையைக் கவர்ந்து செல்வதைக்கண்ட “ஜடாயு’, வெகுண்டெழுந்தான். ராவணனைத் தாக்கி, அவனிடமிருந்து சீதையை மீட்க முயற்சித்தான். அரக்கன் ராவணனோ ஒரே வீச்சில் பறவையரசனின் இறக்கைகள் இரண்டையும் வெட்டி வீழ்த்திட, குரூரமாகத் தாக்கப்பட்ட ஜடாயு பூமியில் விழுந்த இடமே திருப்புட்குழி ஆகும்.
சீதையைத் தேடி லட்சுமணனோடு ராமபிரான், அவ்வழியே வந்தபோது குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவின் ஈனக்குரøக் கேட்டார். ஓடோடிவந்து பறவையரசனைத் தாங்கிப் பிடித்து, தனது கரங்களால் ஜடாயுவின் உடலைத் தடவிக் கொடுத்தார். ராவணன், சீதையைக் கவர்ந்து தென்திசை நோக்கிச் சென்ற விவரத்தைக் கூறிவிட்டு ஜடாயு உயிர் நீத்தார்.
ஜடாயு ராமபிரானைப் பார்த்து, “நீர் யார் என்று நான் அறிவேன்! நீரே திருமால்! அவதார புருஷனாக, நற்குணங்களுக்கு இலக்கணமாக சரித்திரம் படைக்கப்போகும் நீர், பரமபதநாதனாகவே எனக்குக் காட்சி தருவீரா! எனக்கு பூவுலகிலேயே வைகுந்த தரிசனத்தை அளித்திடுவீரா?’ என்று வணங்கி வேண்டினார்.
அக்கணமே பேரொலி எழும்பிட சங்கு, சக்கர கதாபாணியாக மகாவிஷ்ணு பூரண ஒளிவீசுபவராக ஜடாயுவிற்குக் காட்சி தந்தார்.
“விஜயராகவை’ தரிசித்த மகிழ்ச்சியோடு பரமபதம் சென்றார் ஜடாயு.
தந்தைக்கு ஒப்பான ஜடாயுவிற்கு நானே இறுதிக் கிரியைகளை செய்வேன்! என்று உளமாறக் கூறி ஒரு மகரிஷிக்கும், முற்றும் துறந்த ஞானிக்கும் செய்யப்படும் “பிரம்மமேத சம்ஸ்காரம்’ எனும் கிரியையை, செய்து முடித்தார்.
அதற்கென தனது அம்பினால் பூமியைக் கீறிட, கங்கையே குபுகுபுவென கொப்பளித்தபடி அங்கே எழுந்தாள். அந்தப் புனித நீரினால் ஈமக் கடன்களை செய்து முடித்தார் ராமபிரான். தீ மூட்டி சம்ஸ்காரங்களை செய்த போது வெப்பம் தாங்கமுடயிõது திருமகள், நாராயணனின் இடப்பக்கம் நகர்ந்து கொண்டாளாம். அதனால் திருப்புட்குழித் தலத்தில் நிலமகளும், திருமகளும் இடம்மாறி அமர்ந்துள்ளனர்.

பலி பீடமும், கொடிமரமும் கோயிலுக்கு வெளியே!


ஆலய அமைப்பில் திருப்புட்குழி விஜயராகவப்பெருமாள் கோயில் சற்று வித்தியாசமானது. பலிபீடமும், கொடிமரமும், ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ளன. கோயிலின் மையத்தில் பெருமாள் சந்நதியும், வெளிப்பிராகத்தில் அதற்கு இணையாக தாயார் சந்நதியும் உள்ளது. குறிப்பிடத்தக்கது.
மூன்று நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் கொண்ட திருக்கோயிலுக்கு திரில் வலது புறளம் ஜடாயு தீர்த்தம் உள்ளது. விஜயகோடி விமானத்துடன் கூடிய கருவறையில் மரகதவல்லித் தாயார் இடப்புறம் இருக்க. விஜயராகவ்பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கியபடி சேவை சாதிக்கிறார். பறவைக்கு அருளிய பரந்தாமனின் திவ்ய தரிசனம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
மரகதவல்லித்தாயாரை மக்கள் வறுத்த பயறு முளைக்க வைப்பவள் என்று அன்போடு அழைக்கின்றனர். மகப்பேறு வேண்டி வருவோர். பச்சைப்பயறை மடைப்பள்ளியில் கொடுத்த வறுத்து தர சொல்கிறார்கள். அதனை மடியில் கட்டிக்கொண்டு, தாயார் சந்நதிக்கு செல்கிறார்கள். பட்டாச்சாரியார் புனி தீர்த்ததினை அதில் ஊற்றுவர். அதன் பிறகு ஒரு செம்பில் க்ருத்ர புஷ்கரணி தீர்த்தத்தை வைத்து கொண்டு கோயிலில் அமர்கின்றனர். பகல்முழுவதும் ஒவ்வொரு மணி நேரமும் சிறிதளவு நீரை பயறில் தெளித்தவாறு இருந்து இரவில் திருக்கோயிலின் அருகிலேயே தங்குகின்றனர்.
மறுநாள் விடிந்ததும் தாயார் சந்நதிக்கு சென்று மடியில் உள்ள ஊறிய பயறை சமர்ப்பிக்கின்றனர். அவர்களுக்கு மகப்பேறு கிட்டும் என்பதற்கு ஆதாரமாக மடியில் இருந்த வறுத்த பயறு முறைத்திருக்குமாம். அவர்கள் விரைவில் மகப்பேறு வாய்க்கபெற்று கழந்தையோடு வந்து தாயாரை சேவிப்பார்கள். பட்டுப்புடவை அணிந்து தாயார் சந்நதிக்கு செல்வது கூடாது. என்பது இங்குள்ள விதிமுறை. கருவரையை சுற்றி நேர்த்திக்கடனாக கட்டப்பட்ட தொட்டில்கள் எண்ணற்றவை.
இத்திருக்கோ யிலின் தனிச்சிறப்பு. ஜடாயு சந்நதி தான் கழுகின் அலகுடன் கூப்பிய கரங்களுடன் கருட பகாவான் போலவே ஜடாயு காட்சி தருகிறார். பெருமாள் வெளியே புறப்பட்டு வீதி வலம் வரும் போதெல்லாம் ஜடாயுவிற்கும் சிறப்பு மரியாதைகள் செய்யப்படுகின்றன. சிறிய தாக ஆண்டாள் சந்நதியும் உள்ளது.

உந்தி உந்தி செல்லும் கீல்குதிரை

திருமங்கை ஆழ்வார், திருப்புட்குழிப் பெருமாளை ஏறுசிங்கம் எனப்போற்றுகிறார். திருப்புட்குழியில் உள்ள கதிரை வாகனத்தின் பின்னணி தனி வரலாறு ஆகும். வாகனம் செய்வதில் வல்லவர் ஒருவர், பெருமாள் போருக்கு செல்வதற்கான குதிரை வாகனம் ஒன்றை செய்தார். குதிரையின் உடற்பகுதி மட்டும் நிலையாக நிரற்க, முவன் பின் பகுதிகøள் பாய்ந்து பாய்ந்து உந்தி செல்வது போன்று அமைத்திட்டார். அதனை கண்டு வியந்த அரசன் மற்றொரு ஆலயத்திற்கும் அதுபோல செய்து தர கட்டளையிட்டான். விஜயராகவனுக்கு தவிர வேறு வெருக்கும் வாகனம் செய்து தர மறுத்த, அரசனின் கோபத்திற்கு அஞ்சிய தச்சர், உளியால் நெஞ்சை கீறிக்கொண்டு உயிர் துறந்தார். அவரது நினைவை போற்றும் வகையில், பெரு விழாவில் எட்டாம் நாளன்று, குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, தச்சரின் சமாதி அருகில் செல்ல அவரது வாரிசுகள் பெருமாளுக்கு மரியாதை செய்வர். போரேற்றும் பெருமாள் கோயில் என்றும், சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோயில் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

Comments