தென்கனிக்கோட்டை
டெங்கணிக் கோட்டை என்றுதான் பொதுவாக இந்தத் தலத்தை அழைப்பார்கள். திருமாலின் `கதாயுதம்' தான் அந்த `டெங்கணி'. கன்னட மொழியில் அப்படிப் பெயர்! கர்நாடக எல்லையை யொட்டிய ஊர்களாக இருப்பதால், பெயர்கள் கன்னட மொழி வாசனையை ஏற்றுக்கொண்டுள்ளதைக் காண்கிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத் தின் மேற்குப்பகுதியில் முக்கிய மான ஊர் இது. தருமபுரி மாவட்டத்தின் பெண்ணா கரத்திலிருந்து, ஓசூர் செல்லும் பிரதான சாலையில் உள்ளது தென்கனிக்கோட்டை.
குபேரனுக்கு தாய்வழி உறவுக்காரனான மஹார்ண வன் என்ற ஓர் அசுரன், கோகர்ண கே்ஷத்திரத்தில் பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து, அரியதோர் வரத்தைக் கேட்டுப் பெற்றான்.
தவத்தின் வலிமையால் பெற்ற வரம், அசுரனின் தலைக் கனத்தை மேலோங்கிடச் செய்தது. அதனால் அவனது அட்டகாசம் எல்லை கடந்தது. அமரர்களுக்கு சிம்ம சொப் பனம் ஆனான் மஹார்ணவன். தேவர்களுக்கு கண்டம் விளை விக்கப் புறப்பட்ட அவன் `தேவகண்டகன்' என்றும் அழைக்கப்படலானான். தேவர்களை மட்டுமன்றி முனி சிரேஷ்டர்கள் நடத்திய அரிய வேள்விகளையும் துவம்சம் செய்தான் தேவகண்டகன். வழியில் அத்ரி மகரிஷியின் ஆசிரமத்தைக் கண்ணுற்றான் அசுரன். அங்கே வேள்வி நடந்துகொண்டிருந்தது. அதைத் தடுக்க நினைத்த அசுரன் `புலி' வேஷம் தரித்து உறுமினான். அதனால் பயந்துபோன சீடர்கள் அலறி ஓடினர். வேள்வி தடைப்பட்டது. சினங்கொண்டார் முனிசிரேஷ்டர்.
``புலி வேஷம் கொண்டு புனித வேள்விக்குப் பங்கம் விளை வித்த நீ இனி நிரந்தரமாகப் புலியாகவே திரிவாயாக!'' என்று சாப மிட்டார். கலங்கிப் போனான் அசுரன். முனிவரின் காலில் விழுந்து மன்றாடினான்.
``வேங்கடத்துப் பெருமான், தனது கதாயுதத்தால் உன் மண்டையைப் பிளக்கும்போது உனக்கு முக்தி கிட்டும். அது வரை நீ காத்திருக்கத்தான் வேண்டும்!'' என்று கூறினார் அத்ரிமுனிவர்.
வடபுலத்தில் மாலினி நதிக்கரையில் ஆசிரமத்தைக் கொண்டிருந்த கண்ணுவ முனிவர், காவிரிக்கரையில் தீர்த்தயாத்திரையை மேற் கொண்டார். காவிரிக்கு வடக்கில் நாராயணகிரி அருகில் அத்ரி முனிவர் அமைத்திருந்த ஆசிரமம் அவர் கண்ணில்பட்டது. அங்கேயே சில காலம் தங்கி, வேள்விகள் செய்திட முற்பட்டார். அவ்வளவுதான். தேவ கண்டகப் புலியின் உறுமல் மீண்டும் கேட்டது. தொல்லை தொடர்ந்தது.
அத்ரி மகரிஷி, புலியை விரட்டிப் பார்த்தார், மிரட்டிப் பார்த்தார். தான் தந்த சாபவி மோசனம் நெருங்குவதை உணர்ந்தார். திருமாலை வேண்டினார் அத்ரிமுனிவர்.
பிரத்யட்சம் ஆன வெங் கடேசப் பெருமாள், தனது கதாயுதத்தினால் வேங்கையின் சிரத்தினைப் பிளந்தார். தேவ கண்டகன், தனக்கு முக்தி தந்த அந்தத் திருத்தலத்திலேயே முகுந்தன் நிரந்தரமாக வாசம் செய்து, மக்களுக்கு அருள் புரிந்திடவேண்டும் என்றும், கதாதரனின் கதாயுதத்தின் பெய ராலேயே அந்தத் திருத்தலமும் புகழ்பெற்று விளங்கிடவேண்டும் என்றும் வரம் கோரினான். அருள் செய்தார் அரி! அன்றிலிருந்து உதயம் ஆனது, டெங்கனிக்கோட்டை - ஆமாம் அதுவே தென் கனிக்கோட்டை!
கோட்டை மதிலும், ஐந்து நிலை ராஜகோபுரமும் கோயிலுக்கு அழகு சேர்க்கின் றன. துவஜஸ்தம்பம், ஜெய விஜயர், மகாமண்டபம் தாண்டி, சன்னதியை அடைகிறோம்.
முகவாயில் `திருஷ்டிப் பொட்'டைக் கொண்டு, பிரசன்னவதனனாக, புன்சிரிப்புடன் பூதேவி, ஷ்ரீதேவி சமேதராக பிரசன்ன வெங் கடேசப்பெருமாள் சேவை சாதிக்கிறார். அழகு தேவதை யாக, சௌந்தரவல்லித் தாயார் தனிச் சன்னதியில் சேவை சாதிக்கிறாள். ராமர், ஆஞ்சநேயர், ஆண்டாள் சன்னதிகளும் உண்டு. கண்ணுவ மகரிஷி `சகுந்தலையை' சின்னஞ்சிறு சிசுவாகக் கண்டெடுத்த தலமும் இதுவே. அர்ஜுனன் உருவாக்கிய திருக்கோயில் இது என்றும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
தளி
காசி விசுவநாதர்-விசாலாட்சி சமேதராக அருள்பாலிக்கும் தலம் தளி. தென்கனிக்கோட்டைக்கு மேற் கில் 18 கி.மீ. அருகிலேயே `பஞ்சகிரிபுரம்' என்ற சிற்றூர் உள்ளது. தளிக்கு வடகிழக்கே தேவகானபள்ளி..
விருப்பாட்சீசுவரர் அருள் பாலிப்பது கீழமங்கலத்தில். சின்னாற்றின் வடபகுதியில் அமைந்த திருத்தலம் இது. தென்கனிக்கோட்டைக்கு வட கிழக்கில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஓசூர்
செவிக்குறைபாடு உள்ளோர் வணங்கி வழிபட வேண்டிய திருத்தலம், தமிழக-கர்நாடக எல்லைக்கு மிக அருகில் உள்ள `ஓசூர்'. கல்வெட்டுகள் இத் தலத்து இறைவனை செவிட நாயனார் என்றே குறிப்பிடுகின்றன. (`ஓச ஊரு' என்றால் கன்னடமொழியில் புதிய ஊர்) ஓசூர் திருத்தலத்து ஈசன், முத்கலர், உச்சாயினர் எனும் இரண்டு முனிவர்களுக்கு உடும்பு வடிவில் காட்சி தந்துள்ளார்.
`கௌடேய பர்வதம்' என்று அழைக்கப்படும் இந்த மலை, சிவபெருமான் உடும்பு வடிவில் காட்சி தந்ததை நினைவூட்டுவதாக அமைந் துள்ளது. பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைகளோடு அமைந்த இந்தத் திருக்கோயிலில், ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன.
பெண்ணையாற்றின் மேற்கரையில் அமைந்துள்ள இந்த `கௌடபர்வதம்' ஐந்து பெயர்களைக் கொண்டது. நந்தி வடிவமாக அமைந்ததால் `விருஷபாத்ரி'. உமையம்மை, மரகதவண்ணம் பெற்ற காரணத்தால் `மரகதாத்ரி'. செண்பக மரங்கள் நிறைந்ததால் `செண்பகாத்ரி.' முத்கலர், உச்சாயினர் எனும் இரண்டு முனிவர்கள் தவமிருந்ததால் `பத்ராத்ரி'. உடும்பு வடிவில் வந்து ஈசன் நிலைகொண்டதால் `கௌதே யாத்ரி!'
செவித்திறன் தந்த செகதீசன்
செண்பகாரண்யத்தில் உச்சாயினர், முத்கலர் எனும் இரண்டு முனிவர்கள் பர்ண சாலை அமைத்து, வேள்வி பல நடத்தி வந்தனர். பிறவியிலேயே செவித்திறன் இன்றிப் பிறந்தவர் உச்சாயினர்.
கயிலைநாதன் ஒரு சமயம், உடும்பு வடிவம் எடுத்தார். வண்ணம் பல கொண்டு, ஒளிப்பிழம்பாய்க் காட்சி தந்த அந்தப் பொன்னுடும்பைக் கண்டு அதிசயித்தாள் அன்னை. தன்னிலை மறந்து, சின்னஞ்சிறு குழந்தைபோல அதனைப் பிடிக்க ஓடினாள்.
உடும்பின் மீது உமையின் கரம் பட்ட கணம், அவளது மேனி முழுதும் பச்சை நிறமாகப் பளிச்சிட்டு, மரகத மேனியவளானாள். மரகதவல் லியாக மாறிய அவள் நீராடிய குளம் `மரகத சரோரம்' என்ற புண்ணிய தீர்த்தமானது. செண் பகாத்ரிமலை மீது உடும்பு ஏறத் துவங்கியது. அப்போது அதிசய உடும்பைக் கண்ட முத்கலர், தனது தோழர் உச்சாயினரைக் கூவி அழைத்தார். அதுவரை செவித்திறன் இன்றி வாழ்ந்த உச்சாயினருக்கு, காது நன்றாகக் கேட்கத் துவங்கியது. முனிவர்கள் உடும்பைத் துரத்திட, புதர் ஒன்றில் ஓடி ஒளிந்தது அது. புதரை நெருங்கியபோது, சுயம்புவாக முளைத்திருந்த அற்புத சிவலிங்கத்திருமேனியைக் கண்டனர். பக்தி மேலிட இருவரும் ஈசனை அங்கே வணங்கியபோது, உமா சமேதராகக் காட்சி தந்தார் சந்திரசூடேசுவரர்.
சந்திரனை அணிந்து முனிவர்களுக்குக் காட்சி தந்த தால் சந்திரசூடேசுவரர் என்ற திருநாமம் கொண்டார்.
பிரம்ம, பர்வத, மரகத, சாம்பவ, மச்ச, ராம, பாண்டவ, அனும, ருத்ர, விஷ்ணு, சிவகங்கை என பதினொரு புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட தலம். தலவிருட்சம், செண்பகமரம்.
நகரின் கிழக்கு எல்லை யில் அமைந்துள்ள மலைப் பகுதியில் உள்ளது திருக்கோயில். இருநூறு படிகளைக் கடந்தும், சாலை வழியில் வாகனங்களிலும் சென்றடையலாம். ஐந்து நிலை ராஜ கோபுரமும், இரண்டு பிரா காரங்களும் கொண்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட கோயில்.
மூலவர் சந்திரசூடேசுவரர், சுயம்புலிங்கத் திருமேனி. ஆவுடையார் என்ற பீடம் ஏதும் இல்லாமல், தரையோடு தரை யாக, திருநீற்றுப்பட்டையும் சந்திரனும் அணிந்திட்ட அற் புதக்கோலம். மரகதாம்பிகை, திருக்கோயிலின் வடமேற்குப் பகுதியில், நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.
வாயிலருகே உள்ள `ஜல கண்டேசுவரர்' தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பவர் ஆவார். வறட்சிக் காலத்தில் இவரது சன்னதியில் நீரைக்கட்டி பதினாறு நாட்கள் வழிபாடு நடத்தி, மழை பொழிந்ததாக வரலாறு. உட்பிராகாரத்தில் விநாயகர், முருகப்பெருமான், அறுபத்துமூவர், கஜலட்சுமி, நவகிரக சன்னதிகள் உள்ளன.
சந்திரசூடேசுவரர் திருக் கோயிலைத் தவிர, கோட்டை மாரியம்மன் கோயில், பஞ்சலிங்கேசுவரர், காமதேசுவரர், சங்கரநாராயணர், காசி விசுவநாதர், சோமேசுவரர் திருக்கோயில்களும் ஓசூரில் உள்ளன.
பாகலூர்
பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள மற்றுமோர் திருத்தலம் இது. இறைவன் இங்கே பிரசன்ன சூடநாதராக அருள்பாலிக்கிறார். உமை யம்மையின் திருநாமம் மரகதவல்லி.
பாகலூருக்குத் தென்கிழக் கில் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது, பேரிகை! பசவேசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம்.
அத்திமுகம்
`அத்தி' என்றால் யானை என்று பொருள். துர்வாசர், இந்திரனுக்கு அளித்த தெய்வீகத் தாமரைமலரை, அமரேந்திரன், தன் பட்டத்து யானை ஐராவதத்திடம் தர, அது அம்மலரைக் கீழே போட்டு மிதித்தது. சினமுற்ற துர்வாசர், ஐராவதத்தை காட்டானை ஆக்கி, காடுகளில் திரியுமாறு சபித்தார். எண்ணற்ற சிவாலயங்களில், ஈசனை வழிபட்டபின்னர், திரு ஆலவாயிலில்தான் அதன் சாபம் விலகியது. அந்த ஐராவதம் வழிபட்ட தலம் இது. `யானை முகத்துடன்' கூடிய சிவலிங்கத் திருமேனி, தனிச்சன்னதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓசூருக்குத் தென்கிழக்கில் 22 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது. ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலை யில் 7 கி.மீ. பயணித்து, அங்கி ருந்து இடதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 15 கி.மீ. தொடர்ந்து சென்று அத்திமுகம் திருத்தலத்தை அடையலாம்.
தலத்தின் பெயர் அத்தி முகமானாலும் ஈசன் இங்கே மூலவராக அமர்ந்து அருள் பாலிப்பது சுயம்பு லிங்கமாக அழகேசுவரர் என்ற திருநாமத் துடன். அழகேசுவரர் கருவறை முன் நிற்கும்போது, உலகையே மறந்துவிடுகிறோம். ஆனந்தம் அனைத்தும் அள்ளித்தரும் கோலம் அது! அல்லல்கள் எல்லாம் சட்டென விலக்கும் உணர்வைத் தரும் காட்சி அது!
அபய வரத கோலத்தில், நான்கு கரங்கள் கொண்டபடி, நின்றகோலத்தில் நம்மைக் கவர்ந்திழுப்பவள், அன்னை அகிலாண்டேசுவரி. உலக நாயகி அவள்! ஐந்தடி உயரத் திருமேனி!
ஐராவதேசுவரர் என்ற யானைத்திருமுகன், வெளிப்பிராகாரத்தில் குடிகொண்டு, காமாட்சி அம்மனுக்கும் தன்னுடைய கருவறையிலேயே, பின்புறம் இடம் கொடுத்துள்ளார்.
பஞ்சலிங்க சன்னதிகள், தனி மண்டபத்தில் பத்துத் தூண்கள் தாங்கிட உள்ளன. பராமரிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் இருந் தாலும், பழமை மாறாத நிலையில் உள்ளன.
மகாமண்டபத்திலேயே, பல பரிவார தேவதைகள் நிலை கொண்டுள்ளனர். அரிய காட்சியாக உஷா-சாயாதேவி சமேதராக சூரிய பகவான், இரு கரங்களிலும் தாமரை மலர்கள் ஏந்தியபடி, நின்றகோலத்தில் உள்ளார்.
தட்சன் ஆட்டு முகத்துடன் கரங்கூப்பி வணங்கிய நிலையில் அருகே நிற்க, அவனை வதம் செய்த வீரபத்திரர் திருஉருவச் சிலையும் உள்ளது. பிட்சாடனர் மற்றுமோர் கலைப்படைப்பு. யானை மீது அமர்ந்தபடி, கையில் `வேத்திரம்' என்ற சாட்டையினை ஏந்திய `விரி சடையனாக' சாஸ்தாவும் இருக் கிறார்.
கோஷ்ட தேவதைகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர்.
சூலகிரி
ஓசூர்-கிருஷ்ணகிரி சாலை யில் நம்மை ஈர்க்கும் திருத்தலம், சூலகிரி. `சூலகிரி' நாதர்தான் காசிவிசுவநாதர். யோகியர், சித்தர்கள், முனிவர்கள், மகரிஷிகள் எனப்பலர் வழிபட்ட சிவாலயமும், வரதராஜப்பெருமாள் கோயிலும் இங்கே உள்ளன.
முதலில், பிரசன்ன வரதராஜப்பெருமாளை சேவித்திடுவோம். சூலகிரி மலையைப் பின்னணியாகக் கொண்டு, கம்பீரமான மூன்று நிலை ராஜகோபுரமும், மகா மண்டபமும் நம் கவனத்தைக் கவருகின்றன.
கோயிலின் பழமையை, கருவறை திரிதள விமானம், தொலைவிலிருந்தே சுட்டிக் காட்டுகிறது. அர்ச்சுனன் வழி பட்ட தலம். சங்கு, சக்கர, கதாயுதம் ஏந்தியபடி, நம் இன்னல்களைக் களைந்து, நன்மைகளை அருள்பாலிக்கும் அபயஹஸ்தராக நின்ற கோலம். ஒரு கணம் திருப்பதி வெங் கடேசப் பெருமாளை அருகில் நின்றபடி தரிசித்த இன்ப உணர்ச்சி ஏற்படுகிறது.
யாளித்தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்றும், சிற்பக் கரு வூலமாகத் திகழ்கிறது. வாலை தலைக்கு மேலே உயர்த்தியபடி, அஞ்சலி ஹஸ்தராக ஆஞ்சநேயர் சேவை சாதிக்கிறார்.
சிறிய கோயிலாக இருப் பினும், காசிவிசுவநாதர் சன்னதி அழகுற அமைந்துள்ளது. சிவலிங்கத் திருமேனி, சடை நாதராகக் கவசம், ஐந்து தலை நாகாபரணம் சாத்தியபடி, விளக்கொளியில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். யக்ஞோப வீதம் பளிச்சிடுகிறது.
விசாலாட்சி அம்மை, அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். வெள்ளிக்கவசம் சாத்தி, பட்டாடை அணிவித்து, அழகூட்டுகிறார்கள்.
நாகசுப்ரமணியர், தோஷ பரிகாரத்திற்குரிய நாகராகவே நம் மனதில் இடம்பெறும் அழகிய சிற்பம். அருகில் நாகர் பிரதிஷ்டையும் உள்ளது.
கவசம் அணிவிக்கப்பட்டு, இடுப்பில் கத்தியைச் செருகி யபடி இடது கரத்தில் கதையை ஏந்தியபடி, வலதுகரத்தை உயர்த்தி, `அஞ்சேல்!' என அபயம் தரும் ஆஞ்சநேயரையும் சேவித்துவிட்டு, பயணத்தைத் தொடருகிறோம்.

Comments
Post a Comment