திருமலையே பெருமாளாக தெரியும் அதிசயம்! மலையே பெருமாள்

இதோ இங்கே இருக்கும் படத்தினை அமைதியாக நிதானமாக ஒரு தவம் போல் மனம் ஒன்றி உற்று பாருங்கள்.  இந்த படத்தில் ஓர் அதிசயம் ஒளிந்திருக்கிறது. இதில் இறைவன் அருள் நிறைந்திருக்கிறது. உங்களில் பலருக்க பரிச்சயமான திருத்தலம் தான் இது. திருப்பதி. இந்த படத்தில் அப்படி என்ன அற்புதம் இருக்கிறது? அதை தெரிந்துகொள்ள அந்த அற்புத காட்சியினை முதலில் தரிசித்த மகானின் அனுபவத்தை கொஞ்சம் பார்ப்போம்.
அந்த துறவி ரொம்ப நேரமாக மெய்மறந்து நின்றார். பிரமிப்பால் விழிகள் விரிய அந்த அதிசயத்தையே பார்த்து கொண்டு நின்றார். அவரது மேனி பரவசத்தால் லேசாக நடுங்க. விழிகளில் ஆனந்த பாஷ்யம் நிறைந்து வழிந்தது. பொதுவாக துறவிகள் எதை பார்த்தும்  பிரமிப்படையவோ, ஆச்சரியப்படவோ மாட்டார்கள். எல்லாம் இறைவன் மயம் என்பது தான். அவர்கள் எண்ணம். ஆனால் அந்த துறவியோ அதையெல்லாம் மறந்து வியந்து நின்றார். அவர் அப்படி மலைத்து நிற்க காரணம், மலை, அது, ஏதோ ஒரு மலை அல்ல. ஏழுமலைகள் சேர்ந்து நிற்கும் திருமலை. அந்த மகானும் சாதாரணமானவர் இல்லை. துறவிகளுக்கெல்லாம் தலைவர் என்று போற்றப்படும் யதிராஜர்.  ஆமாம். ராமானுஜர் தான் அந்த துறவி.
திருமலை வாஸனை சேவிக்க வ்ந்தபோது தான் அவர் அப்படி பிரமித்து நின்றார். மலைமீது கோயில் கொண்டிருக்கும் மலையப்பனைபார்க்க வந்தவர், திருமால்கோயில் கொண்டிருக்கும் திருமலையே அவன் வடிவாக காட்சி தருவதை பார்த்து விட்டுதான் அப்படி மெய்சிலிர்த்து நின்றார். பரந்தாமன் வடிவின்மீது பாதம் பதிக்க அஞ்சி, முழங்காலாலேயே நடந்து மலைமீது ஏறி முகுந்தனை தரிசித்தார்.
அன்று மகான் ராமானுஜர் கண்ட காட்சியினை, மலையே மாதவனாக காட்சிதரும் அதிசயத்தினை நீங்களும் தரிசிக்க வேண்டாமா?
அதற்காகத்தான் பெருமாள் வடிவில் திருமலை காட்சி தரும் அரிய கோணத்தில் எடுக்கப்பட்ட திருப்பதி திருமலையின் புகைப்படம் இங்கே தரப்பட்டிருக்கிறது.
அனந்தன் மீது சயனம் செய்யும் வடிவில் மேல் நோக்கிய நிலையில் திருமலையே பெருமாளாக காட்சிதருவதை, நீ“ஙகள் எளிதாக தரிசிக்க வசம் திருப்பட்டடுள்ள படத்தில் பக்கவாட்டில் இருந்து தரிசிப்பது போல் அவரது நெற்றி, திருநாமம், கண்கள், நாசி, பவளவாய் என்று அழகான திருமுக தரிசனம் கிட்டுகிறதா. ராமானுஜ மகான் கண்ட அந்த திருக்காட்சியை நீங்களும் தரிசியுங்கள். கரம்  குவித்து வணங்குகள்.
உலகமெல்லாம் கடவுள் வடிவே.. அவனே எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்?

Comments