உலகின் உயரமான ஒரு பிள்ளையார் கோவில்

ங்குதான் இருப்பேன். அங்குதான் இருப்பேன் என்று அடம் ஏதும் பிடிக்காமல், எங்கும் இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லி பக்தர் தம் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் தெய்வம், ஆனைமுகன்.
மிக உயர்வான இந்தத் தத்துவத்தைக் கொண்ட கணபதிக்கு, உலகின் உச்சியில் ஓர் ஆலயம் அமைந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

இமயமலைத் தொடரில், காஷ்மீர் மாநிலத்தில் கார்கிலுக்கு அருகே அமைந்துள்ளது, லடாக். இதன் தலைநகரான லே என்னும்  இடம் கடல் மட்டத்திலிருந்து 11,500 அடி உயரத்தில் உள்ளது.

1982-84ம் ஆண்டுவாக்கில் இப்பகுதியிலிருந்து ஒரு பக்தரின் குடும்பத்தினர் அனைவருக்கும் யானை ஒன்று துரத்துவதுபோன்ற கனவு அடிக்கடி வந்தது.

ஒரு சமயம், அருகில் உள்ள `ஸ்பித்துக் காளி மாதா' கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, அந்த பக்தர் மனதில் பளிச்சென்று மின்னல்போல் ஓர் எண்ணம் தோன்றியது. தான் வசிக்கும் `லே' பகுதியில் பிள்ளையார் கோயில் ஒன்று எழுப்பப்பட வேண்டும் என்று பொறி தட்டியது.

தனது நண்பரான மற்றொரு பக்தரை சந்தித்து விஷயத்தைச் சொன்னார்.அவரது வழிகாட்டலாலும், காஞ்சி மகா சுவாமிகளின் பரிபூரண ஆசிர்வாதத்துடனும் கோயில் ஒன்று கட்டப்பட்டது.

ஆலயம் அமைக்கத் தேவையான பொருட்கள், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் விக்ரகங்கள் சென்னையிலிருந்து கொண்டு சென்று பிரதிஷ்டை செய்யப்பட்டு 28.6.1985 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இத்தலம் செல்லும் வாய்ப்பு உங்கள் வாழ்நாளில் எப்போது கிட்டுமோ. ஆனால் அகிலத்தின் உச்சியில் அமைந்திருக்கும் இத்தலத்து விநாயகனை, இதயபூர்வமாக நினைத்து இருக்கும் இடத்தில் இருந்தே வணங்குங்கள்.

இமயத்தின் உச்சியில் இருக்கும் அவன், உங்கள் வாழ்வையும் உயர வைப்பான்.

Comments