ஸ்ரீ ராகவேந்திரரின் பரமகுரு!

ஸ்ரீமத்வ சித்தாந்த ஆச்சார்ய புருஷர்களில் பரம சிரேஷ்டரும், 64 கலைகளையும் கற்றுணர்ந்தவரும், மகத்தான பெருமையும், சக்தியும்வாய்ந்த அவதார புருஷருமான  ஸ்ரீஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர் ஸ்வாமிகள். பாஸ்கர க்ஷேத்திரம் எனப்படும் திருக்குடந்தையில் (கும்பகோணம்), பரம பவித்திரமான காவிரி புண்ணிய நதியின் கரையில் பிருந் தாவனஸ்தராக, தன்னைச்  சரணடையும் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி, சகல மனோ பீஷ்டங்களையும் நிறைவேற்றி, அனுக்ரஹித்து வருவது, பல்லாயிரக்கணக்கான  பக்தர்களின் பரமானந்த அனுபவமாகும்.

ஸ்ரீ ராகவேந்திரரின் பரமகுரு!
அவதார     புருஷரான ஸ்ரீவிஜயேந்திர தீர்த்தரின் சிஷ்யர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர். இந்த சுதீந்திர தீர்த்தர்தான், மந்த்ராலயம் குருராஜரான ஸ்ரீ ராகவேந்திரரின் ஆச்சார்யன்  (குரு) ஆவார். ஆதலால், ஸ்ரீராகவேந்திரரின் பரமகுரு (குருவின் குரு) என விசேஷமாக ஆராதிக்கப்படுகிறார் ஸ்ரீவிஜயேந்திர தீர்த்தர்.

ஸ்ரீ விஜயேந்திரர் பெருமை!
ஸ்ரீ விஜயேந்திரர், அளவற்ற தெய்வீக சக்தியும், பெருமையும் கொண்ட ஆச்சார்ய மகாபுருஷரான ஸ்ரீவியாஸராஜ தீர்த்தரின் வித்யா சிஷ்யர். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் ஸ்ரீவிஜயேந்திரரின் பெருமையை!

இத்தகைய, ஈடிணையற்ற தெய்வீகப் புகழ்வாய்ந்த ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தரின் சிறப்புமிக்க இந்த ஆராதனையில் பங்குகொண்டு, தரிசித்து அளவற்ற புண்ணிய பலனைப் பெறுமாறு பிரார்த்திக்கிறோம். கிடைத்தற்கரிய பேறு  இது. சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதே, ‘புண்ணியம்’ என்னும் செல்வத்தைச் சேர்த்துக்கொண்டுவிட வேண்டும்.

இப்புண்ணிய ஆராதனைக்கு, பணமாகவோ அல்லது பொருட்களாகவோ, ‘‘Sri Vijayendra Swamigal Mutt, Kumbakonam’என்ற  பெயரில் எடுத்து, 159, சோலையப்பன் தெரு, கும்பகோணம் - 612 001 என்ற விலாசத்திற்கு அனுப்பி, மகத்தான புண்ணிய பலனைப் பெற்று மகிழும்படி வேண்டுகிறோம்.  மேலும் விவரங்களுக்கு : 9486568218 / 9994298782 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Comments