படிப்பு வர பஞ்சாமிர்தம்

முருகனின் மயில் வாகனத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்படும் ஆலயம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதை அறிந்துகொள்வதற்கு முன் மயில்வாகனத்தின் கதையைக் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?
சூரனும் அவனுடைய சகோ தரர்களான பதுமன், சிங்கன், தாரகன் ஆகியோரும், தாம் முரு கனுக்கு வாகனங்களாக மாற வேண்டும் என்று வரம் வேண்டி கடுந்தவம் இருந்தார்கள்.

இதையறிந்த முருகனின் வாகனமான மயில், தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாதே என்று வேலவனை நோக்கிப் பரிதாபமாகப் பார்த்தது.

அதனுடைய ஆதங்கத்தைப் பார்த்த முருகன், ``நீ தான் என் நிரந்தர வாகனம். சூரன் மற்றும் பிறரை என் கணங்களாக மாற்றிக் கொள்கிறேன்....'' என்று கூறி, மயிலுக்கு ஆறுதலளித்தார்.
தம் எண்ணம் ஈடேறாமல் தாம் கணங்களாக மாற்றப்பட்ட தில் வெறுப்படைந்த அசுரர்கள், மயிலைப் பழிவாங்கக் காத்திருந்தார்கள்.
அதனிடம் போய், ``திருமா லின் வாகனமான கருடனும், பிரம்மனின் வாகனமான அன்னமும், தங்களை விடச் சிறந்த பறவை வேறு எதுவும் இருக்க முடியாது. மயில் போன்றவை எங்களுக்குப் பிறகுதான் என்று இறுமாப்புக் கொண்டிருக்கின்றன!'' என்று சொல்லி அதன் கோபத்தைத் தூண்டிவிட்டார்கள்.

இதனால் கோபமும், ஆவே சமும் கொண்ட மயில் பறந்து கயிலாயத்தின் மறு பக்கம் இருந்த கருடனையும், அன்னத்தையும் நாடிச் சென்று `லபக்'கென்று விழுங்கிவிட்டது.

முருகனிடம் அளவளாவி விட்டு வெளியே வந்த திருமாலும், பிரம்மதேவனும் தங்கள் வாகனங்களைக் காணாது திடுக் கிட்டு, பிறகு நடந்தவற்றை ஞான திருஷ்டியால் உணர்ந்து, சண்முகரிடம் இது பற்றி முறை யிட்டனர்.

இதனால் கோபமடைந்த முருகன், மயிலை வரவழைத்து, ``என் அடியார்களுக்குத் தீங் கிழைத்த நீ, என் வாகனம் என்ற உன் உயர் பதவியை இழப் பதுடன், ஒரு குன்றாகவும் மாறக்கடவது!'' என்று சபித்து விட்டார்.

தன் தவறை உணர்ந்த மயில், முருகனின் பாதம் பிடித்துக் கதறி அழுதது. பின்னர் மனம் இரங்கிய குமரன், மயிலை இரு பாகமாக்கி, ஒரு பாகத்திற்கு இறைத்தன்மை அளித்து, மறு பாகத்தை பழையபடி மயிலாக்கி, மீண்டும் தன் வாகனமாகவும் ஆக்கிக் கொண்டார். அதே சமயம் சூரனையும் அவனுடைய தம்பிகளையும் அசுரர்களாகவே மாறும்படி சபித்து விட்டார்.

அரக்க குணத்தைப் பெற்ற அவர்கள், தேவர்களைத் துன்புறுத்துவதைத் தொழிலாகக் கொண்டார்கள். அவர் களுடைய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தேவர்கள், ஆறுமுகனிடம் முறையிடவே, அவர் சூரபத்மனை வதைத்தார். அவனை இருகூறாக்கி, சேவல் கொடியாகவும், மயில் வாகன மாகவும் ஆக்கிக் கொண்டார். இப்படி முருகனின் மயில் வாகனத்திற்கு பல கதைகள்!

முருகனின் மயில்வாகனம் பல வித சிறப்புப் பெற்றிருப்பதால் அதற்கு சிறப்பு வழிபாடும் பூஜை களும் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அமைந்திருக்கும் பாலமுருகனின் திருக் கோயிலில் நடைபெறுகின்றன.

இந்த பாலமுருகன் ஆலயத்தில் விதவிதமான காவடிகள் திருவிழாக்காலங் களில் பக்தர்களால் எடுத்து வரப்படுவதைக் காணலாம்.

மங்களகரமான வாழ்வை யும், மதிப்பையும், புகழையும் தரும் இந்த பாலமுருகனுக்கு கிருத்திகை,  சஷ்டி, சித்ரா  பௌர்ணமி,  வைகாசி விசாகம் மிகவும் விசேஷம்,.

தங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க, பாலமுருகனுக்கு பஞ்சாமிர்தம் நிவேதனம் செய்கிறார்கள் பெற்றோர்கள். குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து அர்ச்சனை, பூஜைகள் செய்து தினைமாவும், தேனும் கலந்த பிரசாதத்தை நிவேதனம் செய்யலாம்.

அழகே உருவான இந்த பாலமுருகனை நீங்களும் ஒருமுறை வழிபட்டு வாருங்களேன்!

திருச்செங்கோட்டிலிருந் தும், ஈரோட்டிலிருந்தும் குமார பாளையத்திற்கு அடிக்கடி பஸ்வசதி உள்ளது.

Comments