கணவர்-மனைவியருக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் பொருந்திய இல்லற வாழ்க்கையையும், தாம்பத்திய சுகத்தையும், குடும்பத்தில் ஐஸ்வர்ய பாக்கியத்தையும், ஆடம்பர வசதிகளையும், வாகன வசதியையும் அளித்தருள்பவர் சுக்கிரன்.
பிருகு மகரிஷியின் புத்திரரும், சர்வசாஸ்திர பண்டிதரும், இறந்தவர்களை மீண்டும் உயிர் பெறச் செய்யும் சஞ்சீவினி மந்திரத்தை அறிந்தவருமான சுக்கிரன், ஜெனனகால ஜாதகத்தில் பலம் குறைந்திருந்தால், ஒற்றுமையும், மனநிறைவும் குறைந்த இல்லற வாழ்க்கை அமையும். இத்தகைய சுக்கிர தோஷத்திற்கு பலம் வாய்ந்த மிகப் புராதனமான பரிகார தலம் திருப்பெருவேளூர் ஆகும்.
ஜெனனகால ஜாதகத்தில் ராகு, செவ்வாய் போன்ற அதிக வீர்யமுள்ள கிரகங்களுடன் சுக்கிரன் சேர்ந்திருப்பதும், ஜாதகத்தில் சயன ஸ்தானத்தில் அளவிற்கு மீறிய சுபபலம் பெற்றிருப்பதும், பலவீனமாக (நீச்சம்) இருப்பதும் சுக்கிர தோஷங்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மனைவியிடம் ஈடுபாடு இல்லாத கணவர்; கணவரிடம் பற்றுதல் இல்லாத மனைவி; எதற்கெடுத்தாலும் கணவரிடம் வாக்குவாதம் செய்யும் மனைவி; வீட்டை நன்றாக வைத்துக்கொள்ளாமை மற்றும் தன்னை அழகாக அலங்கரித்துக் கொள்வதில் விருப்பமில்லாமல் இருப்பது, தாம்பத்திய சுகக்குறைவு, பிற ஆடவர்கள் அல்லது பிற பெண்களிடம் தொடர்பு ஆகியவை திருமண வாழ்க்கையைப் பாதிக்கின் றன. இவற்றிற்குக் காரணம், ஜாதகத்திலுள்ள சுக்கிர தோஷமே ஆகும். இத்தகைய தோஷத்தை இரண்டாகப் பிரித்துள்ளனர் நம் மகரிஷிகள். ஒன்று, பரிகாரத்திற்கு உட்ப ட்ட தோஷங்கள். மற்றொன்று, பரிகாரத்திற்கு உட்படாத கடுமையான தோஷங்களாகும்.
பரிகாரத்திற்கு உட்பட்ட தோஷங்களுக்கு மணக்கால் ஐயம்பேட்டை மிகச் சிறந்த பரிகார தலமாகும். சுக்கிரனுக்கு ஆதரவாக இத்திருத்தலத்தில் குபேரனும் எழுந்தருளியிருக்கிறார்.
மனம் நிறைந்த இல்வாழ்க்கைக்கு ஐஸ்வர்யமும் அவசியமல்லவா! ஆதலால், இத்திருத்தலம் குபேரனும், சுக்கிரனும் இணைந்து அருள்பாலிக்கும் பரிகார தலமாக இன்றும் விளங்கி வருகிறது. சுக்கிர தோஷம் உள்ள அன்பர்கள் இத்திருத்தலத்து எம்பெருமானை நெய்தீபம் ஏற்றி வைத்து தரிசித்து வருமாறு வேண்டுகிறோம். நல்ல பலன் தெரியும்.
ஒரு காலத்தில் நான்கு வேதங்களையும் கற்றறிந்த பெரியோர்கள் இவ்வூரில் வசித்திருந்ததால் சதுர்வேதியர்மங்கலம் எனவும், சதுர்வேதமங்கலம் எனவும் புகழ்பெற்றிருந்தது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ராஜகோபுரத்திலுள்ள திறப்பு வழியாக சுக்கிரனின் சாயை (கிரணங்கள்) கருவறையிலுள்ள மூலவரின் திருவடிகளில் படிகிறது. இவ்விதம் ஆண்டுதோறும் தனுர் மாத பூஜையை அந்த மூன்று தினங்களிலும் சுக்கிரன் செய்வதாகத் தலவரலாறு கூறுகிறது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கும் பழைமையான இத்திருத்தலம் இன்றும் சுக்கிர தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது.
திருமணமான இளம் தம்பதியர் இத்திருத்தலத்திற்குச் சென்று ஸ்ரீ வைகுண்டநாராயணப் பெருமானைத் தரிசிப்பது மனம் நிறைந்த இல்வாழ்க்கையைப் பெற்றுத்தரும். திரு ப்பெருவேளூர் (தற்போதைய மணக்கால் ஐயம்பேட்டை) திருத்தலம், கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவாரூரிலிருந்து 9 கி.மீ. தூரத்திலும் உள்ளது. பேருந்து வசதிகள் உண்டு.

Comments
Post a Comment