கேரளாவில் உள்ள புகழ் பெற்ற பகவதி ஆலயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது, வல்லங்கி கிராமத்திலுள்ள நெல்லிக்குளங்கரா பகவதி ஆலயம்.
இங்கு தேவி பன்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் மற்றும் முன்னிரு கரங்கள் அபய வரதத்துடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள்.
கருவறையில் தேவியு டன் சப்த மாதர்கள் மற் றும் வீரபத்திரர்களும் உள்ளனர்.
வல்லங்கி மற்றும் அதன் அருகிலுள்ள நெம்மாரா கிராம மக்கள் சேர்ந்து ஒற்று மையாக பகவதிக்கு பங்குனி மாதம் `வேலா' என்ற பெரிய திருவிழா எடுக்கின்றனர். இது `நெம்மாரா வல்லங்கி வேலா' (மேளா) எனப்படுகிறது.
இரு கிராம மக்களும் சேர்ந்து நடத்தும் இந்த விழாவில் அலங்காரங்கள் செய்யப்பட்ட முப்பது யானைகளுடன் பகவதி ஊர்வலம் செல்வது கண் கொள்ளாக் காட்சியாகும்.
`ஆனப்பந்தல்' எனப் படும் யானைகள் நிற்கும் பந்தல் மிகுந்த கலை நுணுக் கங்களுடன் காணப்படும். அதன் கீழ் வரிசையாக யானைகள் நிறுத்தி வைக்கப் படுகின்றன.
நெம்மாரா ஊரின் ஆரம் பத்தில் ஒரு பிரமாண் டமான ஆனப்பந்தலும், வல்லங்கி ஊர் ஆரம்பத்தில் ஒரு ஆனப்பந்தலும் மிகவும் கவர்ச்சியாக மின்விளக்கு அலங்காரங்களுடன் காட்சி யளிக்கும்.
ஒரு மாதம் முன்னரே இந்தப் பந்தல் அமைக்கும் பணி ஆரம்பமாகிவிடும். ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பந்தல் டிசைன் மாற்றப்படு கிறது. இந்தப் பந்தல்களில் மின்விளக்கு அலங்கார டிசைன்கள் மிகவும் ரகசிய மாக வைக்கப்பட்டு மாலை 6 மணிக்கு `ஆன்' செய்யப்படும். எதிர்பார்ப்பு மற்றும் ஆர்வத் துடன் அதைக் காண அப் போது ஏராளமான மக்கள் அங்கு கூடுகின்றனர். வாண வேடிக்கைகளும் உண்டு.
இந்தத் திருவிழா திருச்சூர் பூரத்துக்கு அடுத்தபடியான `பெரிய திருவிழா'வாகக் கரு தப்படுகிறது. திருவிழாக் காலங்களில் கும்மட்டி, கரி வேலா, ஆன்டிவேலா என்ற பல்வேறு சடங்குகளும் நடை பெறுகின்றன.
இந்த அம்மன் இங்கு வந்தது குறித்து இருவித கருத்துகள் நிலவுகின்றன.
ஒரு பக்தர் தினமும் அருகிலுள்ள நெல்லியாம்பதி மலைக்கு அம்மனை தரிசிக்கச் சென்றபோது அம்மன் ஒரு நெல்லிக்காயில் அவருடன் வந்ததாக கூறுவது வல்லங்கி ஜதிகம். குடகரை நாயர் என்பவரின் குடையின்மீது பகவதி அமர்ந்து வந்து அந்த இடத்தில் பிரதிஷ்டையான தாக கூறுவது நெம்மாரா ஐதிகம்.
எது எப்படியோ, ஒரு மரக்கால் வெல்லம் வைத்து இந்த அம்மனை வழிபட, வேண்டிய காரியம் நிச்சயம் நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை!
கேரள மாநிலம் பாலக் காட்டிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில், வல்லங்கி என்ற கிராமத்தில் நெல்லிக் குளங்கரா பகவதி ஆலயம் உள்ளது.

Comments
Post a Comment