யானை- அதி உன்னதமான அறிவாற்றலுக்கும், அளவற்ற வலிமைக்கும், வீரத்துக்கும் அடையாளம். சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக் கம் உடையது. காட்டு விலங்கு ஆயினும் மனிதருடன் நன்கு பழகும் யானை, சில நேரம் மதம் தலைக்கேறி தன்னை வளர்த்தவனையே கொன்றும் விடுகிறது.
நமது சமய வழிபாட்டில் அறிவின் சின்னமாக யானை போற்றப்படுகிறது. இறைவன், அறிவை விளக்கி நிற்கும் கோலத்தில்- யானை மீது பவனி வருபவனாகக் காட்டப்படுகிறார். அவர், அறியாமையையும் அகந்தையையும் அழிப்பவராக இருக்கும்போது யானையின் தோலை உரித்துக் கொல்பவனாகக் காட்டப் படுகிறார். இதற்கு, 'சிவபராக்ரமம்' என்ற நூலில் அருமையான வரலாறு காணப்படுகிறது.
தாருகாவனத்தில் வாழ்ந்த ரிஷிகள், 'வேதங் களில் கூறப்பட்டுள்ள யாக- ஹோமங்களைச் செய்தாலே போதும்; கடவுள் வழிபாடு தேவை இல்லை. யாக விதிகளைக் கடைப்பிடித்து அதனை ஒழுங்காகச் செய்து விட்டால், அதற்குக் கட்டுப்பட்டு அந்த யாகத்துக்கு உரிய தேவர்கள், யாகம் செய்தவர்களுக்கு வேண்டியதைத் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்!' என்ற கர்வத்தினால் சிவ வழிபாடும் அவசியம் இல்லை என்று கருதி, சிவபெருமானை அவமதிப்பவர்களாக இருந் தனர். 'யாகத்தைத் தவிர வேறு தெய்வமில்லை!' என்று கர்ம காண்டத்துக்கு மட்டுமே முக்கியத் துவம் கொடுத்து வாழ்ந்ததால் அவர்கள் 'கர்ம காண்டவாதிகள்' எனப்பட்டனர்.
அவர்களது கர்வத்தை அகற்றி, உண்மையை உணர்த்த திருவுளம் கொண்டார் சிவபெருமான்.
அதன்படி திருமால், பெண் வேடத்தில்- மோகினியாக உடன் வர... தான் திகம்பரராக திருமேனி கொண்டு... ஆடியும், பாடியும் வரும் குள்ள பூதங்கள் சூழ தாருகாவனத்தை அடைந்தார் சிவனார்.
திகம்பரரின் பிரகாசமான அழகையும், வாலிப வனப்பையும் கண்டு அவரது பேரழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள், அவரை பின்தொடர்ந்தனர்.
மோகினி வடிவம் கொண்ட திருமால், ரிஷிகள் தவம் செய்யும் யாகசாலைக்குச் சென்று ஆடிப் பாடினார். மோகினியின் பேரழகில் தங்களை மறந்த ரிஷிகள் தம்வசம் இழந்தனர். அவர்கள் மனத்தில் மோகாக்னி மூண்டிருந்ததால், தாம் வளர்த்த யாகாக்னியை முற்றிலும் மறந்தனர். அந்த வேளையில் ஆணழகனான திகம்பரர் ஆடியும் பாடியும் அங்கு வர, அவர் பின்னால் முனிவர்களது மனைவியரும் உடன் வருவதைக் கண்டனர்.
''நாங்கள் தவம் செய்யும் இடத்துக்கு ஏன் வந்தாய்?'' என்று திகம்பரரை நோக்கி ரிஷிகள் கேட்கவும், தாமும் தம் மனைவி மோகினியுடன் அங்கே தவம் செய்ய வந்ததாகக் கூறி சிரித்தார்.
''இவள் உன் மனைவியா? மற்றவர்களை மயக்கித் திரிகிறாளே! நன்றாக இருக்கிறது இவள் கற்பு!'' என்று பரிகசித்தனர் ரிஷி கள். உடனே திகம்பரர், ''நீங்கள் உங்கள் மனைவியோடு வாழ்ந்து கொண்டுதானே தவம் செய்கிறீர்கள். உங்கள் மனைவியரது மன அடக்கத்தையும், கற்பின் திறனையும்தான் இப்போது நீங்களே பார்க்கிறீர்களே! நீங்கள் மட்டும் என்ன... என் மோகினியிடம் மயங்கி, உமது யாக காரியங்களை விட்டு விட்டு ஓடி வந்து விட்டீர்கள்! என் மனைவியின் கற்புக்கு என்ன பங்கம் வந்து விட்டது?'' என்று கைகொட்டி சிரிக்கவும், ரிஷிகள் செய்வதறியாது திகைத்தனர்.
பிறகு, மோகினியுடன் அங்கிருந்து புறப்பட்ட திகம்பரர் வசிஷ்ட மகரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்றார். வந்தவர்கள் யார் என்று உணர்ந்த வசிஷ்டர் தம்பதியினர் அவர்களுக்கு ஆசனம் அளித்து, அமரச் செய்து பூஜை செய்தனர். பிறகு, சிவபெருமானும் திருமாலும் தமது இருப் பிடம் சென்றனர்.
தம்மை அவமதித்த திகம்பரரது செயலையும், தம் மனைவியரது மன அடக்கம் கேலிக்கு உள்ளாக்கப்பட்டதையும் கண்ட ரிஷிகள் கோபம் கொண்டனர். தீய வேள்வி ஒன்று செய்து, அதிலிருந்து பெரிய பூதத்தைத் தோற்றுவித்து திகம்பரரை கொன்றுவிடத் திட்டமிட்டனர்.
அதன்படி அவர்கள் தொடங்கிய யாகத்தில் முதலில் ஒரு நெருப்புக் கோளம் வந்தது. அதை, திகம்பரரை அழிக்கும்படி ஏவினர் ரிஷிகள். திகம்பரராகிய சிவபெருமான் அதைத் தம் கையில் ஏந்தினார். தொடர்ந்து அவர்கள் அனுப்பிய பாம்பு, டமருகம் ஆகியவற்றையும் கைகளில் ஏந்தி, மண்டை யோட்டை மாலையாகவும் அணிந்தார் சிவனார்.
இவை தவிர, யாகத்திலிருந்து அவர்கள் அனுப்பிய சிங்கத்தை உரித்து, தமது கச்சாக அணிந்தார். பிறகு, பெரிய கருவண்டு ஒன்றை அனுப்பினர். சிவ பெருமான், ஹ§ங்காரம் செய்து அதனைத் தமது நடனத்துக்கு சுருதி கூட்டுமாறு செய்தார். வலிமை யான பூதத்தை அவர்கள் ஏவ, அதைத் தனக்கு ஏவலனாக ஆக்கினார். அறியாமையின் வடிவானவனும், அநேக நோய்களை உண்டு பண்ணுபவனுமாகிய 'முயலகன்' என்ற குட்டை பூதத்தை அனுப்பினர். பெருமான் அவனைத் தமது திருவடி யின் கீழ் பாத மனையாக்கிக் கொண்டு, அவன் மேல் நடனமாடினார்.
தங்களது முயற்சி எதனாலும் சிவபெருமானை அடக்க முடியாத முனிவர்கள், யாகத் தீயிலிருந்து மிகப் பெரிய முரட்டு யானையைத் தோற்றிவித்து அனுப்பினர். அது கயிலைக்குச் சென்று, அங்கு யோகத் தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானைப் பற்றி எடுத்து தம் வாயில் போட்டு விழுங்கியது. சிவபெருமான் சிறிது நேரம் திருவிளையா டல் செய்ய சித்தம் கொண்டார்.
அப்போது உலகமெங்கும் இருள் சூழ்ந்தது. தேவர்கள் பயந்தனர். தாருகாவனத்து ரிஷிகள் வெற்றிக் களிப்பில் ஆடினர். சிவபெருமான் யானையின் வயிற் றில் கொடிய வெப்பத்தை உண்டாக்கினார். அது வயிற்று வலியால் துடித்துப் புரண்டது. பல இடங் களிலும் அலைந்து திரிந்து இறுதியில் பஞ்சப் பிரம்ம தீர்த்தத்தில் வீழ்ந்தது. பெருமான் தமது உடலைப் பெருக்கி யானையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்தார். அதன் தோலை உரித்து அதைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டார். இதனால் அவர் கஜசம்ஹாரர், க்ருத்தி வாசர், கரி உரித்த பெருமான் என்று புகழப் பெற்றார்.
தீய வேள்விக்குத் துணை நின்ற வேத புருஷன், மான் வடிவம் கொண்டு சிவபெருமான் காலில் வீழ்ந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்ட, அந்த மானைத் தம் இடக் கரத்தில் ஏந்தி, எந்த நேரமும் தமது காதில் வேதம் ஓதுமாறு பணித்தார்.
வேத புருஷனும், யாக புருஷனும் தங்களை விட்டு விலகியதாலும், சிவபெருமான் மற்றும் திருமாலை நிந்தித்த பாவத்தாலும் தீய வேள்வியின் பயனாலும் கடுமையான ஜுரம், நடுக்கம் முதலியன அடைந்து வருந்திய தாருகாவனத்து ரிஷிகள் இறுதியில் சிவனைச் சரணடைந்தனர். ஈசன் அவர்களை மன் னித்து சிவ ஞானம் உபதேசித்தார்.
சிவபெருமான் யானையை உரித்து, அதன் தோலைப் போர்வையாக அணிந்து கொண்டது, அட்ட வீரட்டச் செயல்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இது, சிவமகா புராணங்களிலும், திருமுறைகளிலும் விரிவாகக் குறிப்பிடப் பெறுகிறது.சில்பரத்தினம், சுப்ரபேதாகமம், அம்சுமத் பேதாகமம் முதலிய சிவாகமங்களில் கஜ சம்ஹார மூர்த்தியின் வடிவமைப்பு விளக்கப்பட்டுள்ளன.
அஷ்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான வழுவூரில், கஜசம்ஹாரம் நிகழ்ந்ததாக தல புராணம் விவரிக்கிறது. 'வழுவை' என்பதற்கு யானை என்றும் ஒரு பொருள் உண்டு.
வழுவை- யானையை உரித்த ஊர்- வழுவூர் என்பர். மயிலாடுதுறை - பூந்தோட்டம் சாலையில் உள்ள வழுவூர் ஸ்ரீவீரட்டேஸ்வரர் திருக்கோயிலில், இறைவன் திருநாமம்- க்ருத்திவாசேஸ் வரர். அம்பிகை - இளங்கிளை நாயகி.

நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.