பகவான் ரமணர் தங்கிய பச்சை அம்மன் கோவில்





அது, 1905ம் வருடம். இப்போது பன்றிக் காய்ச்சல் போல அப்போதும் ஒரு நோய் எங்கு பார்த்தாலும் பரவிக் கொண்டி ருந்தது. அதன் பெயர், ப்ளேக்.

திருவண்ணாமலை பகுதியிலும் அந்த நோய் பற்றிய பயம் பரவியபோது, அங்கிருந்த மகான் ஒருவர், எல்லோருக்கும் தைரியம் அளித்தார். அங்கே இருந்த ஒரு கோயிலுக்கு எல்லோரையும் போய் வரும்படி சொன்னார். அதோடு வழக்கமாகத் தான் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டுப் போய் அந்தக் கோயிலையே தனது தற்காலிக இருப்பிடமாகவும் மாற்றிக் கொண்டார்.

அந்த மகான், ரமணர். அவர் போகச் சொன்ன கோயில், பச்சையம்மன் கோயில்.

அப்படியென்ன சிறப்பு அந்தக் கோயிலில் என்பதைப் பார்க்கும் முன், அங்கே அருளாட்சி செய்யும் பச்சையம் மனின் புராணப் பக்கத்தைப் புரட் டிவிடுவோம்.

காஞ்சியில் தவம் புரிந்து காமாட்சி, மகேசனின் மனைவியாக ஆன கதை தெரிந்திருக்கும். அதற்குப் பல காலத்திற்குப் பின் ஒரு நாள் ஈசனின் ஜோதி வடிவை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது தேவிக்கு. அதனால் அந்த யுகத்து வழக்கப்படி, தவம் செய்து தரிசனம் பெற திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டாள் அம்பிகை. அவளுக்குக் காவலாக சப்த ரிஷிகளும், சப்த கன்னியரும் போனார்கள்.

வழியெங்கும் தங்கி தவம் புரிந்தாள் அம்பிகை. காவலாக இருந்தார்கள் முனிவர்களும், கன்னியரும். அப்படி ஒரு நாள் சிவ தவம் செய்ய ஆரம்பித்த அம்பி கைக்கு வெம்மை தாக்காமல் இருக்க, வாழையிலையால் பந்தல் அமைத்தார் கௌதம முனிவர். தர்ப்பைப் புல் லால் இருக்கை செய்து கொடுத்தார் இன்னொரு முனிவர்.

அம்பிகை வாழைப்பந்தலின் கீழ் தர்ப்பை ஆச னத்தில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் கூட ஆகியிருக்காது. திடீர் என்று ஒருவித குளுமை பரவியது அங்கே. காவல் நின்ற ஏழு முனிவர்களும், ஏழு கன்னியரும் பரவசத்தால் சிலிர்த்தார்கள்.

பஞ்சம் போல் வாடிக் கிடந்த அந்தப் பகுதி பச்சைப் பசேல் என்று மாறியது. அம்பிகை அமர்ந்திருந்த காய்ந்துபோன தர்ப்பை ஆசனம்கூட பச்சைக் கலருடன் பசும்புல் ஆனது.

எப்படி? எப்படி? என்று எல்லாரும் அங்கே ஓடி வந்து பார்த்தார்கள். அம்பிகை தவத்தில் மெய்மறந்து, மனம் நெகிழ்ந்து... குளிர்ந்து போயிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை அறிந்தார்கள். தேவியின் தவத்தைக் கலைக்காமல் கும்பிட்டார்கள்.

அப்போது ஒரே ஒருவன் மனதில் மட்டும் தீய எண்ணம் எட்டிப்பார்த்தது. அவன், அந்த நாட்டு மன்னன். தாய் என்று உணரவேண்டிய அம்பிகையை தாரமாக்கிக் கொள்ள நினைத்தான் அவன். பல வழிகளிலும் முயன்று முடிவில் போரிடவும் துணிந்தான்.

சாது மிரண்டால்... என்பார்களே அப்படி, சப்த ரிஷி களும் வெகுண்டார்கள். விஸ்வரூப முனீஸ்வரர்களாக வடி வெடுத்தார்கள். மன்னனை அழித்தார்கள்.

தவம் முடிந்து எழுந்தாள் அம்பிகை. நடந்ததை அறிந்தாள். அன்போடு தனக்குக் காவல் இருந்த அனைவரோடும் அங்கே கோயில் கொண்டாள்.
பசுமைக்குக் காரணமாய் விளங்கிய அம்மனை பச்சை யம்மன் என்றே அழைத்தார்கள் எல்லோரும். அதன்பின் பல் வேறு தலங்களில் அதே பெயரோடு கோயில் கொண்டாள் அம்பிகை. அப்படி ஓர் ஆலயம், அம்பிகை தேடிவந்த அருணகிரியிலேயே அமைந்தது. அந்தக் கோயிலைத்தான் ப்ளேக் நோய் தாக்காமல் பாதுகாப்பு தரும் கோயில் என்று சொன்னார் ரமண மகரிஷி.

திருவண்ணாமலையில் உள்சுற்றாக கிரிவலம் வருவோர் பார்வையில் மட்டுமே படும்படி மிக உள்ளே தள்ளி மலைப்பாதையருகே அமைந்திருக்கிறது கோயில்.

மூன்று நிலை ராஜ கோபுரம் முன்னே நிற்கிறது. கடந்து போனால், கம்பீரமாக அமர்ந்து காவல் இருக்கும் ஏழு முனிவர்களும் நம்மை கருணையோடு பார்க் கிறார்கள். தலா இரு வடிவங்களாக இருக்கும் பதினான்கு சுதைச் சிற் பங்களையும் பார்த்து `பய' பக்தியோடு வணங்கி விட்டு உள்ளே சென்றால், வரம் தரும் திருவாக, குளு குளு பார்வையுடன் கருவறையில் காட்சி தருகிறாள் அம் பிகை.

அருகே இரு தோழியர் இருக்க, அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் பச்சையம்மனை தரிசிக்கும்போதே நம் வாழ்வில் பசுமை நிலவ ஆரம் பித்துவிடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. வெம்மை நோய் தீர்ப்பவள் இந்த அன்னை என்கிறார்கள். ஆனைமுகன், ஆறுமுகன், சப்தகன்னியர் சன்னதிகளும் இருக்கின்றன ஆயிரம் ஆண்டுகள் பழைமை மிக்கதாகச் சொல்லப்படும் இக்கோயிலில்.

சரி... நோய் பாதிப்பிலி ருந்து தப்பிக்க இங்கே செல் லும்படி ரமண மகான் சொன்னது ஏன்?

அதற்குக் காரணம், இங்கே எப்போதும் வேப் பிலையும், மஞ்சளும் மணம்பரப்பிக் கொண் டிருப்பதுதான்.

வேம்பும் மஞ்சளும் சிறந்த கிருமி நாசினிகள் அல்லவா? அவற்றோடு அம்பிகையின் அருளும் நிறையும்போது அங்கே நோய் மட்டுமல்ல; வேறு எந்த பாதிப்புமே வராது என்பது நிஜம்தானே!

திருவண்ணாமலையில் உள்சுற்று கிரிவலப்பாதையில் உள்ளது இந்தப் பச்சையம்மன் கோயில்.

Comments