குலம் காக்கும் ஸ்ரீகோடியம்மன்!





'கோடியம்மன்கிட்ட முறையிட்டா, நம்ம குலத்தையே காத்தருள்வா’ என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் தஞ்சை மக்கள்.

தஞ்சை தேசத்தைக் காக்க, எட்டுத் திக்கிலும் கோடி உருவமெடுத்து, எதிரி நாட்டு மன்னனையும் அவனது படையினரையும் ஓடச் செய்தாளாம், தேவி! அன்று துவங்கி இன்றளவும், இந்தப் பகுதி மக்களையும் தன்னை நாடி வரும் அன்பர்களையும் காத்து அருள்பாலிக்கிறாள், கோடியம்மன்!

தஞ்சாவூர்- திருவையாறு வழியில் உள்ளது கரந்தை. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகோடியம்மன் கோயில். தஞ்சையின் வட எல்லையில் அமைந்த கோயிலில், வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள் ஸ்ரீகோடியம்மன். மரத்தால் ஆன மூலவர்; எனவே, இவளின் திருமேனிக்கு அபிஷேகங்கள் செய்வதில்லையாம்!



அசுரனை வதம் செய்ய காளிதேவியாக உருவெடுத்தபோது, பச்சை நிறத்தினளாக இருந்தாளாம் அம்மன். அசுரனின் ரத்தம் அவளது திருமேனியில் பட... சிவப்பு நிறத் தினளாக, உக்கிரத்துடன் காட்சி தந்தாள். எனவே பச்சைக்காளி, பவளக்காளி ஆகிய இரண்டு திருவுருவங்களுடன், உத்ஸவ மூர்த்தமாகவும் இங்கே குடிகொண்டிருக் கிறாள்! இவர்கள் இருவரும், துவார பாலகிய ராகவும் இருப்பது சிறப்பு!

சித்திரை மாதத்தில் காளியாட்ட வைபவம், விசேஷம். இந்த விழா நிறைவுற்ற பிறகே, தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப் பெருவிழா துவங்குமாம்! ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங் கள், அன்னதானம் என அமர்க்களப்படும். பௌர்ணமி நாளில், சிறப்பு யாகங்களும் நடைபெறும். ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு வழிபட சகல ஐஸ்வரியங்களும் கிடைக்குமாம்!

இங்கேயுள்ள ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு, ராகுகால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், நினைத்த காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது நம்பிக்கை.

Comments