ஆன்மிக சிந்தனைகள்

கடவுள் நமக்கு உறவினர்



* ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட, இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம்
செய்வது கோடிக்கணக்கில் செய்ததற்கு
சமமாகும்.
* இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை
எவ்வளவு அழுத்தினாலும் இறைவழிபாட்டைத்
தவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
* இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும்,
நம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது.
* இறைவன் அனைவருக்கும் உரியவர். இறை
நாமத்தைக் கணக்கிட்டு ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே இறைவன் நமக்கு விரல்களைத்
தந்துள்ளான்.
* கடவுள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர். இந்த உறவு எவ்வளவு ஆழமாக ஒருவனுக்கு இறைவனிடம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவன் அவரை
நெருங்குகிறான்.

அன்னை சாரதாதேவியார்

Comments

  1. உயர்ந்த நல்லோர் சிந்தனையை
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment