சுவாமிக்கு பின்னால் நந்தி

நந்தி எப்போதும் சுவாமிக்கு முன்னால் இருப்பது தான் வழக்கம். ஆனால், மயிலாடுதுறை அருகிலுள்ள கொருக்கை (திருக்குறுக்கை வீரட்டம்) வீரட்டேஸ்வரர் கோயிலில் சுவாமிக்குப் பின்னும் ஒரு நந்தி உள்ளது. இது வேறெங்கும் இல்லாத அமைப்பு. மேற்கு நோக்கி காட்சியளிக்கும் இவர் தீர்க்கவாகு முனிவரால் வழிபாடு செய்யப் பெற்றவர். தீர்க்கவாகு என்றால் நீண்டகைகளைக் கொண்டவர். இவர் சிவ அபிஷேகத்திற்காக கங்கை இங்கே வரவேண்டுமென கைகளை நீட்டிய போது அவை குறுகி விட்டன. அதனால், குறுக்கை என்று பெயர் வந்து, கொருக்கை என்றாகிவிட்டது. தெற்குப் பிரகாரத்தில் இந்த முனிவருக்கு சந்நிதி உள்ளது. சிவன் மன்மதனைத் தகனம் செய்ததால் காமதகனபுரம் என்ற பெயரும் உண்டு. மன்மதனின் சாம்பல் இங்கு படிந்தததால், கோயில் அருகில் விபூதி நிறத்தில் மணல் படிந்துள்ளது. இங்குள்ள சபைக்கு காமன் அங்க நாசனி சபை என்று பெயர். அம்பிகை ஞானாம்பாள் தெற்குநோக்கி வீற்றிருக்கிறாள். மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., தூரத்தில் கொருக்கை உள்ளது.

Comments

  1. அருமையான அரிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment