தூரத்திருந்து பார்க்கும்போது அருவருப்பா தெரிந்தவர் அவர் அருகிலிருந்தபோது அவரிடமிருந்து ஒரு நல்ல மணம் வீசியது.. ஒரு நொடிக்குள்ளே ஏதோ என்னுள் நிகழ்ந்தது மாதிரி இருந்தது. எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டேன்.அதுக்கடுத்து தி. க. கட்சியிலிருந்து விலகி, ஒரு பகதனாக மாறி கோயில்களுக்குப் போக ஆரம்பித்தேன்.
அப்படி ஒருநாள் ஏகாம்பர நாதர் கோயிலுக்கு பழத்தட்டோடு போய்க்கொண்டு இருந்தேன்.
கோயில் மயான ஈஸ்வரர் மண்டபத்துல் சித்தர் உட்கார்ந்திருந்தார். எதேச்சையாக நான்
அவரை பார்க்க… அவர் சிரித்துக் கொண்டே என்னை இங்கே வா கூப்பிட்டார்..மறுபடியும்
எனக்கு அவருடைய அருவருப்பான தோற்றம் எரிச்சலை ஊட்டியது. நான் சட்டென
முகத்தைத் திருப்பிக்கொண்டு கோயிலுக்குள் போக முயற்சித்தேன்.
ஆனால். என் கையிலிருந்த பூக்கூடையிலிருந்து குப்பென துர்நாற்றம் வரவே எனக்கு தலை சுற்றி,மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது உடனே அந்தப் பூக்கூடையை வெளியே தூக்கி
வீச வேகமாக கோயில் வாசல் நோக்கி திரும்பினேன்.
சித்தர் என்னைப் பார்த்து…,“ ஏன் திரும்பிட்டே,உன் பூக்கூடையிலே எந்த அழுக்கும் இல்ல..,உன் மனசுலதான் இருக்குன்னு” என்று சொன்னார். என்ன ஆச்சிரியம் இப்ப என் கையிலிருந்த பூக்கூடையிலிருந்த எந்த துர்நாற்றமும் வரவில்லை. அதற்குப் பதிலாக மல்லிகை பூவின் வாசம் எனது மூக்கைத் துளைத்தது. நான் ஆச்சரியத்தோடு சித்தரைப் பார்த்தேன். அவர்.“இராமலிங்கம் நீ என்னை விட்டுவிலகி ஓடப்பார்த்தால் முடியுமா?
நீ இந்தப் பிறவியில் என்கூட இருக்கணும்.எனக்குச் சாப்பாடு கொடுக்க வேணும்ங்கிற விதி..,
அத உன்னால மாத்த முடியாதுன்னு..’ சொன்னார். அன்று எனக்குள்ளே பூர்வஜென்ம பந்தத்தை உணர்ந்த மாதிரி உணர்வு ஏற்பட்டது.அன்றிலிருந்து நான் அவருக்கு சிஷ்யனாகிவிட்டேன்.
ஏகாம்பரநாதர் கோயிலுக்குள்ளே பல நுற்றாண்டுகளாகப் பல சித்தர்கள் வாழ்ந்து வந்ததாக
ஐதீகம் சொல்கிறது. இதில் சமீப காலத்தில் வாழ்ந்த சிவசாமி சித்தர் மயான ஈஸ்வரர்
மண்டபத்தில் தங்கியிருந்த இடத்தில் அதற்கு முன்பு வேறொரு சித்தர் தங்கியிருந்தாராம்.
இரவில் கும்மிருட்டுப் பகுதியாகவும் தேள்,பாம்பு பூரான் போன்ற விஷ சந்துக்கள் இருந்த அப்பகுதியில் எந்தச் சலனமும் இல்லாமல் சித்தர் தியான நிலையில் அமர்ந்திருப்பாராம்.
ஒருநாள் ஏகாம்பர ஈஸ்வரர் கோயில் குளக்கரையில் சித்தர் அமர்ந்திருக்க வடநாட்டிலிருந்து கோயிலுக்கு வந்திருந்த கூட்டத்தில் இரண்டு இளைஞர்கள் சித்தரின் நிலைக்கண்டு ஏளனமாகப்
பேச ஆரம்பித்தார்கள். அதில் ஒரு இளைஞன் “அந்த பைத்தியக்காரனுக்கு விளையாட்டுக் காட்டுவோம்” என்று சொல்லிக்கொண்டே வாழைப்பழத்தினுள்ளே ஒரு முள்ளைச் சொருகி…, சித்தரிடம் கொடுத்தான்.
சித்தர் ஆன்மாவை உணரும் சக்தி அறிந்தவராயிற்றே…, அந்த இளைஞன் கொடுத்தவாழைப்
பழத்தை வாங்கி.., வாங்கியவர் அதை ஒரு நொடி உற்று பார்த்துவிட்டு அதை அந்த
இளைஞனிடம் கொடுத்து “உரித்துத்தா” என்றார் உடனே அந்த இளைஞன் வாழைப்பழத்தை உரித்தான். உரித்தவுடன் பழத்தினுளிருந்து ஒரு நெருப்புத் துண்டு எரிந்துக்கொண்டிருந்தது.
அந்த இளைஞன் அதிர்ச்சியடைந்து, பழத்தை கீழே எறிவதற்குள் அவன் கைகளிலும்,
விரல்களிலும் கொப்புளங்கள் தோன்றியது. இளைஞன் வலியால் துடித்தபடி சிறிது தூரம்
ஓடிவிட்டு திரும்ப வந்து சித்தரின் காலடியில் வீழ்ந்தான்.
சித்தர் அவனைப் பார்த்து மெளன்மாய்ப் புன்னகைக்க…., அவன் தான் தவறு செய்துவிட்டதாகவும் மன்னிக்கும்படியும் சித்தரை வணங்கினான்.உடனே சித்தர் கண்மூடித் தியானித்துவிட்டு அவன் கைகளில் சிறிது எச்சிலைத் தடவிவிட்டு…., ’’போ.., நீ வீட்டுக்கு போறதுக்குள்ளே நல்லாகிடும்..” என்றார். சித்தர் சொன்னது போலவே கையிலிருந்த கொப்புளங்கள், அங்கிருந்து பஸ் புறப்படுவதற்குள் மறைந்து பழைய நிலைக்கு வந்துவிட்டது.
சித்தர் அமானுஷ்ய சக்தி மிகுந்தவர். பில்லி,சூன்யம், பேய், பிசாசு தொல்லைகள் இருப்பவர்கள் அவரை நெருங்கவே பயப்படுவார்கள். சித்தரின் பார்வைக்கு அப்படிப்பட்ட பிரச்சனைகள் தென்பட்டால் போதும் ஓடி போய் அவர்கள் தலையில் கைவத்து அவர்களுக்குள்ளிருக்கும் பிரச்சனைகளை விலகச் செய்வார்.

Comments
Post a Comment