ஆயிரம் கால் மண்டபமும்,அதனுள் அமைந்திருக்கும் அருங்காட்சியகமும், சிற்ப வேலைப்
- பாடுகளுக்கு மிகப் புகழ் பெற்றவை. பார்ப்பவர்க்கு பிரமிப்பு ஏற்படுத்தும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மதுரைக் கோயில்.பல்வேறு மண்டபங்களில் கற்சிற்பங்கள் அமைந்துள்ளதுன. ஒரு சில சிற்பங்கள் தவிர ஏனைய சிற்பங்கள் விஜயநகர் நாயக்கர் காலத்து சிற்பங்கள் கலைக்கு நயத்துடன் விளங்குகிறது.இவைகள் கி.பி. 16-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 நூற்றாண்டு முடிய உள்ளவை என குறிப்பு காட்டுகிறது.
அட்டசக்தி மண்டபச் சிற்பங்கள், மீனாட்சி சுந்தரேசுவர் கோயில் வழிபாட்டு மரபில் அம்மன்
சன்னதி வழியாகச் செல்வது மரபாகும். இங்கு சக்தியின் எட்டு வடிவங்களில் காணலாம்.
கெளமரி, ரெளத்திரி, வைஷ்ணவி, மாகலட்சுமி, யஞ்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி,
மனோன்மணி என இரு வரிசைகளிலும் காணப்படுகிறது. பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கிறது.
கைகளில் உள்ள ஆயுதங்களைக் கொண்டு வேறுபாடுகளை கொண்டு காண முடியும்.
முதலிப்பிள்ளை மண்டபத்தில் தாருகாவனத்து ரிஷிகளின் ஆவணத்தை சிவபெருமான்
அழித்த கதை,பிச்சாடனர்,மோகினி, மனைவியர் ஆகியோர் சிவபெருமான் பிச்சையேற்றும்
பெம்மானாக வருவதும், அவ்வழகில் மயங்கி ரிஷிகளின் மனைவியர்களை சிற்பங்கள்
நேர்த்தியாக காட்டுகிறது.
சங்கிலி மண்டத்தில்(பொற்றாமரைக் குளத்தின் மேற்கே) பஞ்ச பாண்டவர்களை காண
முடிகிறது. அர்சுனன் பாசுபத அஸ்திரத்திற்குச் சிவனை நோக்கித் தவமிருப்பதையும்,
மண்டபத்தின் கிழக்கே பொற்றாமரைக் குளத்தின் வடக்குப்பக்கம் இக்கோயில் உருவாகக்
காரணமாக இருந்த தனஞ்சயன் எனும் வணிகன், குலசேகர பாண்டியனது சிற்ப சிலையும்,
திருவிளையாடல் புராணத்தின் அடிப்படை சிற்பங்களும் உள்ளது.
கம்பத்தடி மண்டபம். கொடிக் கம்பம் இருப்பதால் கம்பத்தடி மண்டபம் என அழைக்கப்படுகிறது. கி.பி. 1564 ஆம் ஆண்டு கிருஷ்ணப்ப நாய்க்கரால் கட்டப்பட்டுள்ளது. 1877 ஆம் ஆண்டு நகரத்தார் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் 25 வடிவங்களில் சிவபெருமானது வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
1. ஏகபாத மூர்த்தி,
2. இடபாரூடர்,
3. அர்த்தநாரீசுவரர்,
4. அரிஹரன்,
5. சக்கரதானர்,
6. ஜலந்திரவதை மூர்த்தி,
7. தட்சிணாமூர்த்தி,
8. கஜசம்கரமூர்த்தி,
9. சண்டேச அனுக்கிரக மூர்த்தி,
10. பிச்சாடனர்,
11. வீரபத்ர மூர்த்தி,
12. கிராதாச்சுன மூர்த்தி,
13. ரிஷிபாந்திக மூர்த்தி,
14. சோமாஸ்கந்த,
15. சுகாசனர்
16. கல்யாண சுந்தரசுவர்,
17. திருபுராந்தக மூர்த்தி,
18. காலசம்ஹார மூர்த்தி,
19. பாசுபத மூர்த்தி,
20. நடராசர்,
21. காமதகன மூர்த்தி,
22. சந்திரசேகர மூர்த்தி,
23. உமா மகேசுவரர்,
24. லிங்கோத்பவர்,
25. விநாயக, இராவண அனுக்கிரக மூர்த்தி.
இச் சிற்பங்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண சிற்பம் உலகப் புகழ் பெற்றது.
கம்பத்தடி மண்டபத்தில் அக்னி, வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஊர்த்துவதாண்டவர், காளி
சிற்பங்களும் உள்ளன.
ஆயிரங்கால் மண்டபம். கி.பி. 1570 ஆம் ஆண்டு முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில்
அவரது அமைச்சர் அரியநாத முதலியாரால் கட்டப்பட்டதாகும். தமிழகத்தில் சிலகோயில்களில்
மட்டும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளன. அவற்றுள் புகழ்பெற்றதது மீனாட்சி சுந்தரேசுவரர்
கோயிலில் உள்ள ஆயிரங்கள் மண்டபமே.
புதுமண்டபம் கி.பி. 1635 ஆம் ஆண்டு திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.. இம்மண்டபத்தில் திருவிளையாடற் புராணம், சிவபுராணம் தொடர்பான சிற்பங்கள் இருக்கின்றன்.
நான்கு பெரிய கோபுரங்களையும்,எட்டு சிறிய விமாங்களையும் கொண்டது.அன்னைக்கே திருமணம் நடந்த தலம் என்பதால் திருமணத்துக்குத் காத்திருக்கும் கன்னிகளுக்கு மதுரை மீனாட்சியின் அருள் தப்பாமல் உண்டு. ஆலவாய் என்ற பெயரைக் கேட்டாலே முக்தி அடைய முடியும் என்ற சிறப்பு இந்த மதுரைக் கோயிலுக்கு கோயிலுக்கு மட்டுமே உண்டு.
''அங்கயற்கண்ணி என ஒரு காதில் ஓதின்,
துயர் கெடும்,பகை மாளும்,
தொலையாத செல்வம் உண்டாகும்.
சொர்க்கமும் எளிதாம்''
-- என திருவிளையாடற் புராணம் சொல்கிறது.
ஆலவாய் அழகியை அனுதினமும் தொழுவோம்... அருள் மழையில் நனைவோம்!
அங்கயற்கண்ணீயே சரணம், சரணம்!

Super information.
ReplyDelete