’அப்படியா… சீடர்காள் வேண்டுமானால் போய் அழைத்து வாருங்கள் அந்த சித்தரை.
ஆனால் செல்லும் கடும் வெயில்.ஆகவே களைப்பு தீர புளிய மர நிழலில் ஓய்வெடுத்து
விட்டுச் சென்று வாருங்கள்.” என்றார்..
சீடர்களும் அகத்தினர் கூறியபடி புளியமர நிழலில் தங்கி, ஆறாவது நாளில் தேரையர்
ஆசிரமம் வந்தடைந்தனர். அப்போது அவர்கள் இரத்த வாந்தி எடுத்து எலும்பும்
தோலுமாகக் காட்சியளித்தனர்.. தேரையர் அவர்களைப் பார்த்தும் நடந்தைப்
புரிந்துக்கொண்டார்..
“நீங்கள் உங்கள் என்று அஞ்ச வேண்டாம்.நான் உங்களோடு உங்களுக்குப் பின்னால்
வருகிறேன். திரும்பிப் போகும் போது வேம்பு மர நிழலில் தங்கிச் செல்லுங்கள்”
என்றார் தேரையர்.அவர்களும் அப்படியே செய்ய இரத்த வாந்தி நின்று தங்களுது
உடல் நலம் பெற்று,வலுப்பெற்றதை உணர்ந்தனர். அதனி அகத்தியரிடமும் கூறினர்.
அதே நேரம் தேரையரும் வந்து சேர்ந்தார். மூலிகை சாற்றை பிழிந்து அகத்தியரின்
பார்வையை மீட்டுக் கொடுத்தார். ‘’மூலிகை இரகசியம் அனைத்தும் அறிந்த இந்த
சித்தர் தேரையர்தானே” என்று புன்முறுவலோடு அகத்தியர் கேட்டதும் தேரையர்
உளம் நெகிழ்ந்து போய் அவரது கால்களில் விழுந்து வணங்கி அவரை தழுவிக்
கொண்டார்.
“ரொம்ப சந்தோஷம் தேரையரே.., நீர் முழு வைத்திராக்கிவிட்டீர். எனக்கு கண்
’வெடிச்சான்’ மூலிகை கொஞ்சம் தேவைப்படுகிறது. கொண்டு வருவீரா?’’ நீண்ட
காலத்திற்குப் பின் குருநாதரிடம் திரும்பவும் நட்பு கொண்ட
நேரத்தில் மறுப்பு சொல்ல தேரையருக்கு மனம் ஒப்பவில்லை. அப்படியே கொண்ட
வருகிறேன் என்று கூறிவிட்டு அகன்றார்.
அகத்தியர் கேட்ட மூலிகை சாதாரண மூலிகை இல்லை. கண் வெடிச்சான் மூலிகை
மிகக் கொடிய மூலிகை. அதனை ஒடித்தால் உடனே குபுகுபுவென பொங்கும்
ஆவியால் அடுத்த வினாடியே தன்னுடைய கண்பார்வை போய்விடும். குருநாதர்
ஏன் தொடர்ந்து இப்படி சோதனைக்கு மேல் சோதனை செய்கிறார்! தாங்க இயலாது
அள்வுக்கு சோகம் முட்டியது தேரையருக்கு. பார்வையைக் கொடுத்த தனக்கே
கண் பார்வை பறிப்பது எப்படி நியாயமாகும் என்று அம்பிகை நோக்கி வெம்பி
புலம்பினார்.
“தேரையரே, உன் கவலையை என்னிடம் சேர்த்து விடு.. உனக்குப் பதிலாக நானே
அந்த மூலிகையை கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்று கூறி அந்த மூலிகையைக்
கொண்டு வந்து கொடுத்தாள்.
தேரையர் அதனை அப்ப்டியே கொண்டுபோய் அகத்தியரிடம் சேர்ப்பித்தார். அப்போது
அகத்தியர் முகத்தில் எல்லையற்ற பரிபூரண சந்தோஷம் தென்பட்டது.
”’ தேரையரே, தங்கத்தை புடம் போடப்போட அதன் ஜோதி
மிளிரும். அது போல உம்மைப் பலதடவை புடம் போட்டு மகா சித்தனாக்கி விட்டேன்.
நீர் இனி இந்த பூவுலகத்து மக்களின் துயரங்களை போக்க இரஸவாத வித்தை
கொண்டு வெல்வீராக”
அதனை ஏற்று அடர்ந்த காட்டிலுள் சென்று ஆழமான பள்ளம் தோண்டி அதனுள்
இறங்கி, ஒரு பாறையால் மூடி அந்த பள்ளத்தினுள் தவம் செய்ய ஆரம்பித்தார்.
எத்தனை யுகம் தவம் இருந்தாரோ…. திடும்மென ஒருநாள் பாறை வெடித்தது. தவம்
களைந்த தேரையர் கண் விழித்துப் பார்த்த போது சுற்றிலும் ஏராளமான ரிஷிகள்!
’’கல்பகோடி காலமாய் மக்களைக் காப்பாற்ற வேண்டிய இறவா வரம் பெற்ற
மகோன்னதச் சித்தர் நீங்கள். மனிதர்களின் குணாதிசயங்கள் கண்டு மனம்
வெதும்பி தனிமைச் சிறை இருப்பது முறையா?
“பிரபஞ்சவாசத்தின் பரிணாம வளர்ச்சி மாற்றங்களை ஞான வாசத்தின் மூலம்
அறியும் ஆற்றலைப் பெற்றவர்கள் சித்தர்கள். தங்கம் செய்ய முயன்றேன்.
உலகத்தை விலை வாங்கவோ, ஆசையின் பாலுமில்லை. உயிர் வாழ்வதற்கு
யோக நெறியில் இரசவாதம் செய்பவர்கள் தேவர்களுக்கும், சிவனுக்கும்
ஓப்பானவர்கள். சித்தர்களுக்கு சமாதி நிலை ஒன்றும் புதியதல்ல. மாயத்தைக்
கண்ட சித்தர் மதியதைப் பெருக்கிக் கொண்டு காயத்திலிருக்கும் போதே
கர்த்தனைக் கலந்து கொண்டவர்கள். ஒரு பூரணத்துவம் வாய்க்கப் பெற்ற சித்தர்
ஆன்ம ஞானத்தைப் பெருக்கிக்கொண்டு தம் உடலுடன் இருக்கும்போதே நினைவு.,
செயல் யாவற்றையும் துறந்து சிவனுடன் ஐக்கியமாய் விடுவர். இது பரத்தோடு
சேர்ந்து பரம்பிரும்மாய் எங்கும் நிறைந்து விடுவர்” என்று உபதேசித்த
தேரையரை மற்ற சித்தர்கள் கைகூப்பி கட்டுண்டு வணங்கி நின்றனர்.
----- நிறைவு --
[ நன்றி - நூல் குறிப்பு உதவி :- இறவா வரம்பெற்ற சித்தர்கள், தமிழ்நாட்டு சித்தர்கள்

Comments
Post a Comment