சித்தர் வழியில்…கோம்பைச் சித்தர்(ctd)

அன்றிருந்து சித்தரின் மகிமை எல்லா ஊர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. அவரைத் தேடி வந்து தங்களின் தீராத நோய்களைத் தீர்த்து வைத்தார்.

ஒருநாள் அவர் சந்தையில் குப்பைக் கூளங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கும் போது கணேசன் எனும் 38 வயது இளைஞர் அவரின் முன் வந்து நின்றான். ஒரு நொடியில் அந்த இளைஞன் முகத்தைக் கவனித்த சித்தர் அடுத்த நொடி அவனுக்குள்ளிருக்கும் பிரச்சனையை உணர்ந்து கொண்டார். சுவாச பிரச்சனையாலும், ஆஸ்துமா நோயாலும் பல ஆண்டுகள் அவதிப்படுவதை அறிந்து, தன் கையிலிருந்த குப்பை கூளங்களைக் கீழே போட்டு எரிக்க ஆரம்பித்தார். சட்டென அந்த இஞையன் பக்கம் திரும்பி “ இந்தப் புகையை ஆழமாக உள்ளே இழு, உன் ஆஸ்துமா நோய் குணமாகிவிடும்” என்றார். ஏற்கனவே மூச்சடைப்பால் தடுமாறியவன் புகையை மெல்ல. உள்ளிழுக்க ஆரம்பித்தான். அந்த புகையை நான்கு நிமிடங்கள் உள்ளிழுக்க அவனது தொண்டை,மூக்கு,மார்பு யாவும் தொந்தரவின்றி எளிதாக மூச்சுவிட முடிந்தது. அன்றிலிருந்து அவனது வயது காலம் வரை ஆஸ்துமா நோய் இன்றி வாழ்ந்தான்.

அதேபோல் தென்காசியைச் சேர்ந்த துறவி ஒருவருக்கு நீண்ட காலமாக இருந்த குன்ம நோயை சித்தர் சிறிதளவு மணலை எடுத்து அவரின் வயிற்றில் தேய்த்து குணப்படுத்திய அதிசயம் நிகழ்ந்தது.

வடசேரியைச் சேர்ந்த நாகமணி என்னும் பெண்ணுக்கு பல வருடங்கள் கண் பார்வையற்ற நிலையில் இருந்தார். பெரிய பெரிய மருத்துவர்களிடம் சென்றும் குணமாகாத நிலையில் அவர் கோம்பைச் சித்தர்’ நாடி வர,தனது விரலால் அப்பெண்ணின் கண்களில் ஓரத்தில் ஏதோ எழுதி நான்கு துளிகள் துளசிச் சாற்றை விட்டார். அடுத்த நான்கு நாட்களில் அப்பெண்ணின் கண்பார்வை திரும்பவும் வந்தது.

அதேபோல், பண்டரிபுரத்தில் பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணின் மூக்கில் சிறிதளவு பச்சிலை சாற்றை விட்டு உயிர் பிழைக்க வைத்தார்.

வடசேரியில் இது போன்ற எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திய கோம்பைச் சித்தர்’ திடீரென
அங்கிருந்து புறப்பட்டு தாழக்குடிக்குச் சென்றார்.அங்கேயும் பல நோயாளிகளைக் குணப்படுத்தியும்,பில்லி சூன்யங்களை தீர்த்தும் வைத்தார்.

ஒருநாள பக்தர் ஒருவரின் பிரச்சனையைத் தனது ஆன்ம சக்தியால் உணர்ந்து அவருக்கு தீர்வளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென சித்தரின் உடல் வெட்டியது போல் துள்ளியெழுந்தார். உடனிருந்தவர்கள் அதிர்ந்து கோம்பைச் சித்தரைப் பார்க்க, அவர் தான் அணிந்திருந்த கோவணத்தின் ஒரு பகுதியைப் பிடித்து ஏதோ முணுமுணுத்தவாறு, ப்பூ… என ஊதினார்.அருகே இருந்த ஒருவர், சித்தரய்யா என்னாச்சு? என்று கேட்க, சித்தர் ஒரு நொடி கூர்மையாக வானத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.
“ மதுரை மீனாட்சியம்மன் சேலையில் தீப்பற்றி விட்டது. அதை அணைத்தேன்” என்றார்.
கோம்பைச் சித்தர்’ சொன்னது போலவே, அதே நேரத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்
அம்மனின் சேலை தீப்பிடித்துள்ளது.

சிலகாலம் தாழக்குடியில் வாழ்ந்து பல அற்புதங்களை கோம்பைச் சித்தர் அங்கிருந்து புறப்பட்டு
ஈத்தாமொழி கடற்கரையோரத்தில் தந்து இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். அங்கே தன்னை தேடிவரும் பக்தர்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக கடற்கரையோரமாக நடந்து சென்று தனது வலது கால் பெருவிரலால் நான்கு அடி ஆழத்திலேயே தோன்றி ஜீவ ஊற்றை உண்டாக்கினார். இன்றும் அது வற்றாத நீரூற்றாக கோம்பைச் சித்தரின் அருளாசித் தீர்த்தமாக இருக்கிறது.

* இன்றும் ஈத்தாமொழி கடற்கரையிலுள்ள கோம்பைச் சித்தரின் சமாதி இருக்கிறது

-------- நிறைவு-----

Comments