சித்தர் வழியில்…கோம்பைச் சித்தர்.(ctd)

சித்தர்களின் கண்டுபிடிப்பில் மனித உடலின் நாடிகளைப் பற்றிய கண்டுபிடிப்பு மிகவும் மகத்தானது. நமது உடலில் மொத்தம் 72 ஆயிரம் நாடிகள் இருப்பதாகச் சித்தர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இரத்த ஓட்டத்தைப் பொறுத்து நாடிகள் விரியும், சுருங்கும். உணர்வுகளைப் பொறுத்து நாடிகளின் துடிப்பு சீராகும்; சீர் கெடும் என்பதால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கூறியுள்ளார்கள். நோயாளியின் கையைப் பற்றிவுடன் அவருக்குள் இருக்கும் நோயின் தன்மை,நோய் குணமாகுமா? ஆகாதா? அவரது ஆயுள் எவ்வளவு? என்பதைத் துல்லியமாகக் கண்ட அறிந்து விடுவார்கள்.

ஒருவருக்கு வாத நாடி அளவு மீறினால் ஓராண்டில் இரண்டு நாட்கள் படுத்து மரணமடைவார் என்றும், பித்தநாடி அளவு மீறினால் ஆறு மாதத்தில் அவருக்கு மரணம் நிச்சியம் என்றும் கண்டறிந்து சொல்லி விடுவார்கள்.அவர்கள் சொன்ன பத்து நாடிகள் பிரதானமாக இருக்கிறது.
அவை: இடகலை,பிங்கலை, சுழுமுனை, கண்டம், அட்சி, காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி குரு என்ற நாடிகளாகும். இந்தப் பத்து நாடிகளில் இடகலை, பிங்கலை,சுழுமுனை நாடிகளும் மிகவும் முக்கியமானவை.

சுழுமுனை என்பது இடது மூக்கின் வழியாகவும், வலது மூக்கின் வழியாகவும் உள்ளே செல்லும் நாடிகள் கூடும் இடத்திற்கு சுழுமுனை என்று பெயர். இது புருவத்தின் மத்தியில் உள்ளது. ஒருநாளைக்கு மனிதன் 21,600 முறை சுவாசிக்கிறான்.அப்படி ஒரு முறை சுவாசிக்கும் போது பன்னிரண்டு அங்கு்லம் நீளமுள்ள மூச்சு விரயமாகிறது என்று கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.21,600 லிருந்து அளவு குறையக் குறைய அவனுடைய வாழ்வு மேலும், மேலும் நீளும் என்ற இரகசியத்தை சொல்லி அதற்கான வாசி யோகப் பயிற்சியை சொல்லி,அதற்கான வாசியோகப் யிற்சியைக் கண்டறிந்து கூறியுள்ளார்கள். பிராயணாயாமம், யோக பயிச்சியை நாமும் கடைப்பிடித்தால் நோயின்றி நலமுடன் வாழ்நாள் இறுதிவரை வாழமுடியும். ஆனால், இந்த அவசர, கதியான உலகில் அது இயலுமா? இயலும். பொறுமையாக, ஆர்வத்துடன், முழு ஈடுபாடுவுடன் முயன்றால் எதுவும் முடியும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் வடசேரி, தாழக்குடி, ஈத்தாமொழி போன்ற இடங்களில் வாழ்ந்து பல சித்தாடல்களையும், பல அற்புதங்களையும் நிகழ்த்திய ’’கோம்பைச் சித்தர்’’, மதுரை இருக்கும் கோம்பை கிராமத்தில் பிறந்ததால் ’’கோம்பைச் சித்தர்’’ என்று அழைக்கப்பட்டார்.

இவரது தந்தை சமதளவாய் பெரும் செல்வந்தர். ஜமீன்தாரக இருந்தவர். அவரது செல்ல மகனாகப் பிறந்த சித்தருக்கு ‘’வேல்தளவாய்” என்று பெரிட்டார். வேல்தளவாய் வளர ஆரம்பித்து எட்டு வயதாகும் போது ஒருநாள் அந்தப் பேரதிசாயம் நடந்தது. விடியகாலை வழக்கம் போல் கண் விழிக்க, அவருக்கு எதிரே பளீரென ஒரு மின்னல் ஒளி ன்றியது.அந்த ஒளியின் தீட்சணயத்தில் கண்களைச் சுருக்கி விரித்தபோது எதிரே… ஜோதி பிழம்பாக இறைவன் காட்சியளித்தார்.

அதிர்ந்த நிலையில் வேல்தளவாய் கரம் கூப்ப, இறையனார் “ நீ இந்த ஜமீன் மாளிகையில் வாழ பிறந்தவனல்ல உன்னுடைய இடமும் இதுவல்ல, நீ பல உயிர்களுக்கு வழிகாட்டப் பிறந்தவன்” என்று கூறி மறைந்தார். அந்த நொடியிலிருந்து வேல்தளவாய்க்கு ஏதோ மாற்றம் தம்முள் நிகழந்தது.தன் பெற்றோரிடம் நடந்த நிகழ்வுகளை கூறியபோது அவர்கள் நம்பவில்லை. எதோ சிறுவன் கூறுகிறான் என்று எண்ணினார்கள். ஆனால், அடுத்தடுத்து நிகழ்ந்த, நிகழப்போகும் நிகழ்வுகளை முன் கூட்டியே துல்லியமாக கூறியபோது, வேல்தளவாய்க்குள்ளேஇருந்த அற்புத மகிமை தெரியவந்தது.

திடீரென ஒருநால் அதிகாலை அங்கிருந்து புறப்பட்ட வேல்தளவாய் தமிழகத்தின் பல இடங்களுக்கும் கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார். அப்போது தன்னையறிந்து தன்னிடம் அணுகி தங்களின் குறைகளை, பிரச்சனைகளை கூறியவர்களுக்கு அப்பிரச்சனை தீர்த்து ஆசியும் கூறி நன்மையளித்தார்.

Comments