சனி பிரதோஷம்

திருப்பாற் கடலைக் கடைந்தாக சொல்லப்படும் இடம் கையாலத்தில் உள்ளது.
இந்த இடத்திற்கு God of Valley தேவர்கள் பள்ளத்தாக்கு என்றும் கூறுவார்கள்.

தேவர்களும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து வந்தது. அசுரர்களால் அழிவு
வராமலிருக்க தேவர்களும், தேவர்களால் மரணம் வரக்கூடாது என அசுரர்களும் விடுத்த
கோரிக்கையை கேட்ட ஸ்ரீமந் நாராயணன் “பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுங்கள்,
அதைப் பருகினால் அழிவே இல்லை” என்றார்.

மந்தர மலையை மத்தாகவும் திருமால் ஆமையாகவும் வாசுகி பாம்பைக் கயிராகவும்
கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய….., வலி தாளத வாசுகி கக்கிய
ஆலகால விஷத்தை ஈசன் ஏந்தி விழுங்க…,பார்வதி அதைக் கண்டத்திலேயே நிறுத்த..,
சிவன் விடமுண்டு நீலகண்டர் என்ற காரணப்பெயர் கொண்டார்.

இதனை திருஞானசம்பந்தர் தேவராத்தில்,
நாகம்தான் கயிறாக நளிர்வரை அதற்கு மந்தாகப்
பாகம் தேவ ரோடசுரர் படுகடல் அளறெழக் கடைய
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கும் ஓட
ஆகந் தன்னில் வைத்தமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே
- என்கிறார்.
சனிக்கிழமைகளில், திரயோதசி நிதியும் சேர்ந்து வந்தால், அது மகாப் பிரதோஷ நாளாகும்.

ஏகாதசி திதியில் பாற்கடலை கடைய துவாதசி திதியில் அமிர்தம் வெளிப்பட திரயோதசி
வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவன் உண்ட நாள். அதுவும்ம் கார்த்திகை மாதம்
சனிக்கிழமையன்று ஈசன் விடமுண்ட தினம்.அதனால் சனிக்கிழமையில் வரும்
பிரதோஷம் மகாப் பிரதோஷம்.

இரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு “உஷ்த் காலம்” என்று பெயர். பகலும் இரவும்
சந்திக்கும் நேரம் “பிரத்யுத் காலம்” என்று பெயர். இப்போது அது பேச்சு வழக்கில்
“பிரதோஷ காலம்” என அழைக்கப்படுகிறது.

இதற்கு இரவின் முகம் என்பது பொருளாகும். சாயும் நேரத்தில் வருவதால் “சாயரட்சை”
என்பார்கள். களைத்த உயிர்கள் அவனால் இரட்சிக்கப்படுகிறது. தோஷம் என்றால்
குற்றமுடையது என்பது. பிரதோஷம் என்றால் குற்றமில்லாது. எனவே குற்றமற்ற
இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும்
என்று சான்றோர்கள் விளக்கும் கூறுவர்.

சிவபெருமான் விஷம் அருந்திய பின் நடைபெற்ற நிகச்சிகளை ”ஆகமத் திரட்டு”
என்ற நூலில் பட்டியலிட்டு காட்டுகிறது. அப்பாடல் :-
பொங்கு கங்காதரன் காளம் அயின்றே ஒன்றும்
புகலாமல் இருந்தனன் ஓர்கணப் பொழுது புலவோர்
அங்கு அவனை இடைவிடாது அருச்சனை முன்புரிந்தார்
அத்தியே ஏகாதைசியம் அடுத்த திதியதனில்
புங்கவர் பாரணம் புசித்தே பூர்த்தியுற்றார் இதன் மேல்
பொருந்தும் திதியதனில் இமவான் பொற்கொடியிடை வைத்தே
சங்கரன் சூலம் சுழற்றி நடித்தனன் ஓர்யாமம்
சதுர்மறை நூலது பிரதோடம் எனவே சாற்று
-- [ஆகமத்திரட்டு]
{ பொங்கும் புது வெள்ளமாகிய கங்கையைத் தலையில் அணிந்த கங்காதரனாகிய
சிவபெருமான் விஷத்தை அருந்திய பின் ஒன்றும் கூறாது ஒருகணம் நேரம்
அமைதியாக இருந்தார்.அப்போது தேவர்கள் இடைவிடாது அர்ச்சனை புரிந்தனர்.
அந்த நாள் ஏகாதசி திதியாம். பார்வதியை தனது இடபாகத்திலே வைத்து சூலத்தைச்
சுழற்றி ஒரு சாம நேரம் நடனம் ஆடினார். அதுவே மறைகளும் கூறும் பிரதோஷம் }

சங்க இலக்கியத்தில், அதிகமான் அபூர்வ நெல்லிக் கனியைதான் உண்பதைவிட தமிழ்
மூதாட்டியான ஒளவை உண்டால் தமிழுக்கு நல்லது என்று எண்ணி உண்ன சொன்னான்.
பின்னாளில் இதனை அறிந்த ஒளவையார் அவன் தன்பால் கொண்டிருந்த அன்பினைப்
போற்றி…,
” நிலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே….” -- என்று வாழ்த்தினார்.

புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தில்……,
கறைமிடற்று அணியலும், அணிந்தன்று
அக்கறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே…
- என்று குறிக்கப்பட்டுள்ளது..
(கழுத்தில் நீலவண்ணமாகிய விஷத்தை அணிந்தாலும், அவ்வாரு அணிந்த நாளில்
அவ்வண்ணத்தையும் அதன் காரணத்தையும் பதினெட்டு கணங்களால் போற்றித்
துதிக்கப்படுகிறது.)

பத்துப்பாட்டுள் ஒன்றான மலைபடுகடாம் எனும் நூலில்
நீரகம் பனிக்கும் அஞ்சுவரு
கடுத்திறற் பேரிசை
நவிரம் மேஎய் உறையும்
காரியுண்டிக் கடவுளது இயற்கையும்

( கடல் சூழ்ந்த உலகம் அஞ்சும் வகையில் தோன்றும் நஞ்சினை உண்டு உலகினைக்
காத்து “நவிரம்” என்னும் மலையின் மீது விளங்கும் இறைவன் இயல்பைக் குறிக்கிறது )

இது போன்ற எண்ணற்ற வகையில் 2000 ஆண்களுக்கு முற்பட்ட இலக்கியங்களில்
விஷமருந்தின வரலாறு குறிக்கப்பட்டுள்ளது.

பிற்கால இலக்கியங்களான பக்தி இலக்கியங்களிலும் பல்வேறு இடங்களில் விடமுண்ட
வரலாறு விரிவாக காணப்படுகிறது. சங்க மருவிய இலக்கியமான சிலப்பதிகாரம்,
விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டிருந்த அருள் செய்குவாய்
-என்று கூறுகிறது.
[

Comments