நாட்டில் அப்போது பங்கரமான வறுமையும்,பஞ்சமும் தலைவிரித்தாடியது.எங்கும் வளம்
குன்றி,பசி,பட்டினியால் மக்கள் துன்புற்றுற்றனர். உண்ண உணவில்லை. அதைப் பெற பணமில்லை.
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை! மக்கள் தெய்வத்தைப் பார்த்தில்லை. ஆனால், தெய்வம் போல் உதவும் ஞானிகள்.ஆன்றோர்கள்,சித்தர்கள் இருந்தார்கள். மக்களின் மனகுறையை நீக்கவும், அவர்களின் உடல் நோய்களையும் தீர்த்துள்ளார்கள். இப்போதும் அவரைகளை அணுவதை தவிர வேறு வழியும், மார்க்கமும் தெரியவில்லை.
நாட்டு மக்கள் அனைவரும் தேரையாரை காண அவரின் ஆசிரமம் சென்று, தங்களின் குறைகளை கூறி, தங்களை ஆதரித்து உதவ வேண்டுமென வணங்கி நின்றனர். ‘ உங்களுக்கு பொன்தானே வேண்டும்? பொறுங்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு தங்கம் செய்து தருகிறேன்!’ என்று கூறி தன் சீடர்களை அழைத்தார்.
பக்கத்தில் நிமிர்ந்து நின்ற மலையைப் பார்த்தார். ”சீடர்களே நாட்டில் பஞ்சத்தால் மக்கள்
பட்டினியால் வாடுகிறர்கள். அவர்களின் பசித்துயரை நீக்க நமக்கு மலை அளவு பொன்
வேண்டும். இரசவாத்தால் இந்த மலையை, பொன்னாக்க முடிவு செய்துள்ளேன்.
ஆகவே, மலையைச் சுற்றி துருத்திகளை வைத்து நெருப்பு மூட்டுங்கள்.
நான் மற்றவற்றை தயார் செய்துகொண்டு வருகிறேன்” என்றார்.
குருவின் கட்டளைப்படி சீடர்கள் நெருப்பு மூட்டினர். இதனால் மலையிலிருந்த பறவைகள்,
மிருகங்கள் எல்லாம் பதறி ஓடின. மலையில் தவம் செய்துக்கொண்டிருந்த முனிவர்கள்
நெருப்பின் தகிப்பு தாளாமல் அலறி மலை இருந்து கீழுங்கி வந்தனர். இது தேரையாரின்
வேலையென்று அறிந்து, நேராமாக் தேரையாரின் குருநாதர், குறுமுனி அகத்தியரிடம்
சென்று முறையிட்டனர்.இதனை அறிந்த தேரையார் தம் சீடர்களை அழைத்து அவர்களிடம் இரகசியமாக காதுகளில் ஏதோ கூறிவிட்டு அகத்தியரிடம் சென்று, வணங்கினார்.
“நீ குருவை மிஞ்சிய சீடனாகி விட்டாயோ.. ரிஷிகளை துன்புறுத்தும் அளவுக்கு
வளர்ந்துவிட்டாயா?” என்று ருத்ரம் கொப்பளிக்க… தேரையாரின் இரண்டு கால்களையும்
பிடித்து ஜராசந்தன் வதம்போல உடம்பை இரண்டாகக் கிழித்தெறிந்து தூரவீசிவிட்டுப்
போய்விட்டார்.
கூடி இருந்த ரிஷிகள் வாயடைத்துப் போய் நின்றனர். தேரையாருடன் அவரது சீடர்களும்
வந்திருந்தனர். இரு கூறாக இரத்த சேறாக கிழிந்து கிடந்த தங்களது குருவை கண்டனர்.
தேரையார்,தனக்கு இந்த நிலைமை ஏற்படக்கூடும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்த குரு,
தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் கூறி இருந்தார். இந்த
எச்சரிக்கை நினைவு வர, உடனே சீடர்கள் கிழிபட்ட உடல் சேரவும் உடலில் உயிர்
வந்து கூடவும்,தேவையான மூலிகைகளையும் மந்திரத்தையும் சொல்லி தேரையாரை
உயிர்ப்பித்தனர்.
உயிர் பெற்று எழுந்த தேரையார், மிகவும் வருந்தினார். ‘மக்கள் சேவை மகேசன் சேவையல்லவா! அதை செய்தற்காக,தனக்கு இத்தனை பெரிய சோதனை, தண்டனையா? என்று சிந்தையில் இருந்த போது வானில் மின்னல் வெட்டியது. இடி முழங்கியது. மழை அமுதமென கொட்டியது. ஆஹா! இனி மக்கள் துன்பம் நீங்கிவிடும். வருண பகவானை வேண்டி மழை பொழிய வைத்து, நாட்டுக்கு வளம் சேர்த்துவிட்டார் அகத்தியர் என்பதை தேரையார் புரிந்துக்கொண்டார்.
அகத்தியர் சென்ற திசையை நோக்கி வணங்கினார். அதன் போது “தேரையரே! நீ தேடும் ஞானம் அகத்தியரிடம் உள்ளது. வற்றாத ஞானசாகரம்.நீ அவரிடமே சீடனாக செல்” என்று அடையாளம் காட்டியவள் செளமினி.அதன்படி அகத்திய முனியிடம் சென்று ‘என்னை சீடனாக தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியபோது ‘தேரையாரே! நிலையில்லா இந்த மானுட தேகம்.இதைக்கொண்டு நிலையான ஞானத்தை அடையத் துடிக்கிறாய்.உடம்பு நிலைக்க வேண்டும்.அப்போதுதான் உனது எண்ணம் நிறைவேறும். காரியம் சித்தியாகும். நீக்கமற நிலைக்கும் பரமானந்த சிவம் உன் உள்ளத்தில் நிலை நிறுத்து. அது உனக்கு உதவும்” என்றார்.
சித்தர்கள் தங்களது மரணத்தை எதிர்கொள்வதற்கு எத்தனையோ கணக்கீடுகளும் அனுபவ
ஆய்வுகளும் முடிவெடுத்துள்ளார்கள். யோகிருக்கும் ஞானியருக்கும் கபால வழியாகவும்,
புண்ணியருக்கு கண்,காது,மூக்கு வழியாகவும், பாவிகளுக்கு ஆசனவாய் வழியாகவும் உயிர்
பிரியும். மூச்சினைக் கொண்டு மரணத்தின் வருகை அறியும் கலையை சித்தர்கள்
கண்டறிருந்து இருக்கின்றனர்.
இந்நிலையில் தேரையாரின் திறமைக்கு ஒரு சவால் நிகழ்ச்சி வந்தது. காசிவர்மன் என்ற
மன்னனுக்கு கடுமையான தலைவலி வந்து அவதிப்பட்டு எவ்வகையிலும் நோய் தீராத நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தயாராகி விட்டான்.வைத்தியா அனைவரும் கைவிட்டு விட்ட நிலையில் அகத்திய முனிவரைக் கேள்விப்பட்டு அவரது ஆசிரமம் வந்து நெடுஞ்-சாண்கிடையாக வீழ்ந்தான் மன்னன்

Comments
Post a Comment