திருச்சிற்றம்பலம்
``````````````````````
''புறம்பயப்பதி வாழ் புண்ணியா போற்றி''
மலமெல்லாம் ஆறும் இம்மையே, மறுமைக்கும் வல்வினை சார்கிலா
சலமெலாம் ஒழி நெஞ்சமே, எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர்
கல்மெலாம் கடல் மண்டு காவிரி நங்கையாடி கங்கை நீர்
புலமெலா மண்டிப் பொன் விளைக்கும் புறம்பியம் தொழுது எழு போதுமே.
( உன்னைப் பற்றியுள்ள மும்மலங்களும் இப்பிறவிலேயே அற்றுப்போகும்;
மற்மையிலும் உனை வந்து சேரமாட்டா; அவற்றால் ஏற்படும் சஞ்சலங்களும் உன்னை விட்டு நீங்கும்.இதற்காக நாடொறும் நலத்தை அருளுகின்ற
சங்கரனார் விருப்புடன் தங்கும் பதியராகிய புறம்பியம் சென்று சாட்சி நாதேஸ்வரரின் சரணங்களைப் பணிந்து வாழ்வாய் நெஞ்சமே )
புறம்பியம் தொழுது எழு -- புன்மைகள் அகலும்
நலமெலாம் சேரும் -- நல்முத்தியும் கூடும்.
சச்சிதானந்தபுரம், முத்துத்தாண்டவ நல்லூர், ஆனந்தக் கூத்தனூர், சைவமூதூர், தெண்பிலியூர், குயின்குடி,சித்தர்வாசம் சென்பகப்பொழில், சிவமணவூர், சப்தமாதரூர், சித்திரமூலஸ்தானம், மயிலைக்குடி,பலாலிங்கம், வசந்தக்குடி, கோசிகை - ஆகிய பதினைந்து சிவாலங்களையும் நீங்கள் தரிசித்து நல்முத்தி அடைய வேண்டுமென்றால் ஒரேத் தலம் சென்றால் போதும்.
ஆம்! அந்த ஒரேத் தலம் தென்காசிதான். இத்தனை பெயர்களும் புராணங்களில்
தென்காசியில் குறிபிட்டுள்ளது.
காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, திருவண்ணாமலை நினைக்க முக்தி என்பர்.ஆனால், தென்காசியில் பிறப்பார், இருப்பார், இறப்பார் அனைவருக்குமே முக்தி என்கின்றன நூல்கள்.
தமிழ் நாட்டிலும்,வடநாட்டிலும் மன்னர்கள் எத்தனையோ கோயில் கட்டியிருக்கலாம். கோபுரங்கள் எழுப்பிருக்கலாம். ஆனால், இந்த தென்காசி கோயிலைக் கட்டிய பராக்கிரம் பாண்டியன் ஒரு சிறந்த கவிஞன் கூட. பின் நடப்பவைகளை முன் அறிந்தவன். தான் எழுப்பிய கோவிலுக்கு கேடு நேரும் என்பதை முன்னமே அறிந்து,அதுவும் குடமுழுக்கு விழாவிலே பாடல்கள் எழுதி, அவற்றைக் கோயில் வாயிலில் கல்வெட்டியில் பொறித்து வைத்துள்ளான்.
''மனத்தால் வகுக்கவும் எட்டாத
கோயில் வகுக்க முன்னின்று
எனைத்தான் பணிகொண்ட நாதன்
தென்காசியை என்றும் மண்மேல்
நினைத்து ஆதரம் செய்து
தங்காவல் பூண்ட நிருபர் பதம்
தனைத்தாழ்ந்து இறைஞ்சித்
தலைமீது யானுந் தரித்தானே''
[''இந்த தென்காசி கோயிலுக்கு ஒரு கேடு வந்து,
தூணை தூக்கி அதனை பணிசெய்து, காவலாக
இருப்பவர்களின் பாதங்களை என் தலைமேல் வைத்து
அனந்த கோடி நமஸ்காரம் செய்கிறேன்'']
--- என உருகிறான்.
பராக்கிரம பாண்டியன் எண்ணியது போல் நான்கு முறை கோயில் பழுதுபட்டது.
இரண்டு முறை இஸ்லாமியரின் படையெடுப்பிலும், ஒருமுறை நெருப்பாலும்,ஒருமுறை
இடி மின்னனாலும் கோயில் பழுதுபட்டது.
தென்காசியின் நகரத்தின் நடுநாயகமாக, நான்குபுறமும் நீண்டுயர்ந்த மதிகளுடன், கிழக்கில்
ஒன்பது நிலைகளுடன் 178 அடி உயரமாக வானியுயர்ந்து நிற்கும் ராஜகோபுரத்துடன், கண்டவுடன் நம்மை அறியாது இரு கைகளையும் சிரசின் மேல் கைகூப்பி வணங்கும் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் உலகம்மை உடனுறையும் காசி விஸ்வநாத சுவாமி ஆலயம்.
தென்காசி உள்ள சிவன் கோயிலில் மிகப்பழமையான சிற்பங்கள் உண்டு.
நுழைவாயில் சுமார் 20 அடிக்கு மேல் உயரத்தில் யாளி இருக்கிறது.
அற்புதமான, மிக நுணுக்கமான வேலைபாடுகள் கொண்டது
அற்புதமான வேறு சில சிலைகளும் உண்டு.
நான் தமிழ் நாட்டிலுள்ள மிகப்பெரும்பான்மை கோயிலுக்கு சென்றுள்ளேன்.
அதில் தென் காசியில் கோயில் நுழைவாயில் அமைந்துள்ள சிலைகள்
மாதிரி [ காவல் தெய்வங்கள் ] மற்ற கோயிலில் கண்டதில்லை.

Comments
Post a Comment